பெரும் பணக்காரர்களுக்கு 'அசையா சொத்துகள்' என்பது வெறும் முதலீடு மட்டுமல்ல; அது வாழ்க்கை முறையும், நீண்ட காலப் பாதுகாப்பின் அடையாளமும்கூட! துபை, மியாமி உள்ளிட்ட இடங்களில் அவர்களுக்கு வரிச்சலுகைகள், பிரத்யேக வாழ்க்கை முறைகள், முதல் தரமான வசதிகள் உள்ளன.
பெரும் பணக்காரர்கள் பெரிதும் விரும்பும் நகரங்களாக துபை, நியூயார்க் சிங்கப்பூர், ஹாங்காங், அபுதாபி ஆகியன இடம்பிடித்துள்ளன. ஆடம்பரத்துடன் இந்த நகரங்கள் பாதுகாப்பும், சிறந்த சர்வதேச போக்குவரத்தும் என இணைப்புகளைக் கொண்டுள்ளன.
ஐரோப்பாவில் மாண்டிகார்லோ, லண்டன், ஜெனிவா ஆகியவை பெரும் பணக்காரர்களின் விருப்பமான இடங்களாக உள்ளன. இதுபோன்ற விவரங்களை பெரும் பணக்காரர்கள் அவர்கள் வசிக்க விரும்பும் நகரங்களை 'சவலஸ்' என்ற நிறுவனமானது ஆய்வு செய்து, அறிக்கையை வெளியிட்டுள்ளது. அறிக்கையில் ஒவ்வொரு நகரங்களும், சிறப்புகளும் குறித்த விவரத்தை அறிவோம்.
துபை
வரியில்லா வருமானம், நவீன உள்கட்டமைப்பு, பிரம்மாண்டமான ரியல் எஸ்டேட் திட்டங்கள் இந் நகரத்தை மிக கவர்ச்சிகரமாக இடமாக ஈர்க்கிறது. பெரும் பணக்காரர்களுக்கு பாம்ஜுமைராவில் உள்ள வில்லாக்கள் முதல் நிதி மாவட்டத்தில் உள்ள ஆடம்பரமான அடுக்கு மாடிக் குடியிருப்புகள் வரை, கடற்கரைகள் உயர்தர உணவு வகைகள், உச்சபட்ச தனியுரிமை அடங்கிய பிரத்யேக வாழ்க்கை முறை தொகுப்பை வழங்குகிறது.
நியூயார்க்
வாழ்க்கை செலவு இங்கு அதிகமாக இருந்தாலும், சர்வதேச கோடீஸ்வரர்களை கவர்ந்திழுக்கும் இடம். இணையற்ற பன்முகத்தன்மையும் துடிப்பான பொருளாதாரமும் இங்குண்டு. பணக்காரர்கள் விரும்பும் அசையா சொத்துகளை வாங்கும் இடமான மன்ஹாட்டன் உள்ளது. பல பெரும் பணக்காரர்களுக்கு நியூயார்க் என்பது விரும்புவதற்கான இடம் மட்டுமல்லாது, அது வணிகம், தொடர்புகளை வளர்ப்பதற்கான உலகளாவிய மையமாகவும் விளங்குகிறது.
சிங்கப்பூர்
அரசியல் ஸ்திரத்தன்மை, மிகக் குறைந்த வட்டி விகிதம், முதல் தர கல்விமுறை ஆகியவற்றால் சிங்கப்பூர் சிறந்து விளங்குகிறது. அந்த நாட்டு அரசின் திறமையான நிர்வாகமும், உலகப் புகழ் பெற்ற நிதித்துறையும் பணக்காரர்களைக் கவர்ந்துள்ளது. மெரினாபேயைச் சுற்றியுள்ள ஆடம்பரக் குடியிருப்பு வளாகங்களும், கவர்ச்சியான வரி அமைப்பும் சிங்கப்பூரை பிரபலமாக வைத்துள்ளது.
ஹாங்காங்
உலகின் மிக முதன்மையான நிதி மையங்களில் ஒன்றான இந்த நகரம் அதிக எண்ணிக்கையிலான ஆடம்பரக் குடியிருப்புகள், துடிப்பான நகர்ப்புற வாழ்க்கை, சீனாவுக்கான நுழைவு வாயில் கொண்டது. முதலீட்டாளர்களை இவற்றால் சுண்டியிழுக்கிறது.
அபுதாபி
ஐக்கிய அரபு நாடுகளின் தலைநகரான இந்த நகரம் பாதுகாப்பான அமைதியான சூழலையும், கவர்ச்சியான வரிச்சலுகைகளையும் அளிக்கிகிறது. நிலையான நகர்ப்புறத் திட்டமிடல், உயர் வாழ்க்கைத் தரத்தில் கவனம் செலுத்துகிறது. சாதியாத் தீவில் உள்ள பிரத்யேகக் கடற்கரையோர வில்லாக்களின் மதிப்பும், புதிய கட்டுமானத் திட்டங்களும் கவர்ச்சியாக உள்ளன.
மாண்டி கார்லோ
கவர்ச்சியான மத்திய தரைக்கடல் பாணியும், சாதகமான வரி விதிப்புகளும் ஐரோப்பியர்களால் விரும்பப்படுகிறது. இளவரசர் ஆட்சி நடைபெறுகிறது.
லண்டன்
உலகளாவிய செல்வந்தர்களுக்கு லண்டன் முதன்மையான இடமாகும். பெரு நகரமான இங்கு வரலாறு, கலாசாரம், பொருளாதார வலிமை, புகழ் பெற்ற கல்விக் கூடங்கள் உள்ளிட்ட சிறப்புகளால் விரும்பப்படுகிறது. மேஃபேர், கென்சிங்டன், செல்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சொத்துகள் அதிக தேவையுடன் காணப்படுகின்றன.
ஜெனீவா
நிலைத்தன்மை, பாதுகாப்பு, உயர்தர வாழ்க்கை, ஏரிக் கரையோர ஆடம்பர குடியிருப்புப் பகுதிகள், சொத்து மேலாண்மை உள்ளிட்ட சிறப்புகள் இந்த நகரை பணக்காரர்களுக்கான சிறந்த ஓய்விடமாக மாறவைத்துவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










