ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் விண்வெளி முதல் விளையாட்டு வரை அனைத்திலும் திறம்படச் செயலாற்றி வருகின்றனர். தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஐசிசி டி20 மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் முற்றிலும் பெண்களே ஆட்ட நடுவர்களாகச் செயல்பட்டு வருகின்றனர். கோலாகலமாக நடைபெற்றுவரும் பிஃபா உலகக் கோப்பை ஆடவர் கால்பந்து போட்டியிலும் ஆறு பெண் நடுவர்கள் கலக்கி வருகின்றனர்.
ஆடவர் பங்கேற்கும் விளையாட்டு என்றால் மிகவும் ஆக்ரோஷமாக நடைபெறும். குறிப்பாக, கால்பந்து, ஹாக்கிப் போட்டிகளில் இரு தரப்பு வீரர்களும் மோதலில் ஈடுபடும்போது, அவர்களைச் சமாளிக்க ஆண் நடுவர்களே திணறுவர்.
கத்தார் 2022 உலகக் கோப்பையிலும், ஜெர்மனி-கோஸ்டாரிகா குரூப் சுற்று ஆட்டத்தில் ஸ்டெஃபானி பிராபர்ட், நிஸூவா பேக், கரேன் டயஸ் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.
இந்த நிலையில், சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிஃபா) சார்பில் அமெரிக்கா, மெக்ஸிகோ, கனடா உள்ளிட்ட நாடுகள் இணைந்து நடத்தி வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 48 நாடுகள் பங்கேற்றுள்ளன. தற்போது நாக் அவுட் சுற்றை எட்டியுள்ள இந்தப் போட்டியில் பெண் நடுவர்களை பிஃபா களமிறக்கியுள்ளது.
6 பெண் நடுவர்கள் தேர்வு
போட்டிக்காக மெக்ஸிகோவின் கேட்டியா கார்சியா, நிகரகுவாவின் டாட்டியனா குஸ்மேன், புருக்கி மயோ, கேத்ரீன் நெஸ்பிட், சான்ட்ரா ரமீஸ், டோரி பென்ஸோ ஆகிய ஆறு பெண் நடுவர்களை பிஃபா தேர்வு செய்துள்ளது. இவர்கள் மைதானத்திலும், உதவி நடுவர்கள், விடியோ நடுவராகவும் செயல்படுகின்றனர். வீரர்கள் ஆக்ரோஷமாக ஆடும்போது, அவர்களை சமாளித்து ஆட்டத்தை நிர்வகிப்பதில் பெண் நடுவர்கள் வல்லவர்களாகத் திகழ்கின்றனர்.
3 ஆண்டுகள் நடைமுறை பிஃபாவின் பெண் நடுவர்கள் தேர்வு கால்பந்து விளையாட்டில் பெண்களுக்கு அதிகரித்து வரும் பங்கை உணர்த்துகிறது. உலகக் கோப்பைக்கு பெண் நடுவர்கள் எளிதாகத் தேர்வு செய்யப்படவில்லை. இதற்கு 3 ஆண்டுகள் ஆனது. சர்வதேச ஆட்டங்களில் அவர்களின் செயல்பாடு, உள்ளூர் போட்டிகளில் நடுவர்களாகச் செயல்பட்ட விதம், உடல்தகுதி, தொழில்நுட்பச் சோதனை ஆகியவற்றால் தேர்வாயினர். குறிப்பாக, ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள், ஆட்டத்தில் ஏற்படும் அழுத்தத்தைச் சமாளிப்பது போன்றவை முக்கியமானவை.
இதுகுறித்து பிஃபா நடுவர்கள் குழுத் தலைவர் பியுர்லியுகி காலினா கூறுகையில், 'உலகிலேயே சிறந்த பெண் நடுவர்களைத் தேர்வு செய்துள்ளோம்.
முப்பத்து ஒன்பது வயதான டோரி பென்úஸா அமெரிக்காவில் மேஜர் சாக்கர் லீக் தொடரில் நடுவராகச் செயல்பட்டார். 2023-இல் பிஃபா உலகக் கோப்பை மகளிர் கால்பந்து ஸ்பெயின்-இங்கிலாந்து இறுதி ஆட்டத்திலும் நடுவராகச் செயல்பட்டார். மெக்ஸிகோவின் கேட்டியா கார்சியா உலகக் கோப்பையில் பங்கேற்ற முதல் பெண் நடுவர் என்ற சிறப்பைப் பெற்றார். உலகக் கோப்பை போட்டியில் நடுவர்களாகச் செயல்படுவதற்கு முன்னர் 6 பெண்களும் பல்வேறு கால்பந்து லீக் தொடரில்களில் நடுவர்களாகச் செயல்பட்டுள்ளனர்'' என்கிறார் பியுர்லியுகி காலினா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பிஃபாவின் வரலாறு... 1930 ரீவைண்ட்! கால்பந்து திருவிழாவின் தொடக்கம்!!

ஃபிஃபா ஆடவர் உலகக் கோப்பை வரலாற்றில் மீண்டும் பெண் நடுவர்கள்!

பிஃபா உலகக் கோப்பை: அல்ஜீரியாவை வீழ்த்திய ஆர்ஜென்டினா - புகைப்படங்கள்

பிஃபா உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கோலாகல தொடக்கம்...
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




