தேசிய விருது பெற்ற 'லிட்டில் விங்ஸ்' , படவிழாக்களில் அதிக பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்படுகிறது.
இந்தப் பட உருவாக்கம் குறித்து குறும்பட இயக்குநர் நவீன் பேசும்போது, 'இந்தக் குறும்படத்தை எழுதத் தொடங்கும் போது இந்த இடத்துக்கு வருவதுக்குத் திட்டமிடவில்லை. ஆனால், குறும்படம் சர்வதேச திரைப்பட விழாவுக்குச் செல்லும் என்ற கனவு இருந்தது. எந்தப் படத்தையும் எழுதத் தொடங்குவதுக்கு முன்பு ஒரு கேள்வி இருக்கும். அந்தக் கேள்விக்குப் பதிலளிக்க முயற்சிக்கும் போது தான் கதை, திரைக்கதை அமைத்துப் படமாக்க முயற்சி செய்கிறோம்.
அடிப்படையில் இந்தக் கதை கரோனா காலகட்டத்தில் எழுதப்பட்டது. அப்போது நிறைய துர்மரணங்கள் நிகழ்ந்தன. அச்சமயத்தில், நம் ஆசைகளும் மரணத்துடன் மரித்து விடுகிறது. திடீரென நம் மரணத்துடன் நம் ஆசையும் சேர்ந்து போய்விடுகிறது. உலகமும் அதோடு ஓடிக்கொண்டே இருக்கிறது. அந்தக் கேள்வியைக் குறிப்பிடும் நோக்கத்தில் தான் இந்தக் கதை எழுதப்பட்டது.
எங்கள் ஊர்களில் கணவனால் துன்புறுத்தப்படும் பெண்களின் வாழ்க்கைக்குத் தீர்வு இருக்காது. அது ஒரு தொடர் போல நீண்டுகொண்டே இருக்கும். அந்த மாதிரியான வீடுகளில் சிலர் குடித்துவிட்டு உயிரிழந்துவிடுவார்கள். அதன்பிறகு அந்தப் பெண்கள் சுதந்திரமாக இருப்பது நமக்குத் தெரியும். அந்தச் சூழலில் ஒருவரது மரணம் இன்னொருத்தருக்கு விடுதலையைக் கொடுக்கிறது.
இந்த இரு கேள்விகளைக் குறிப்பிடும் வகையில் தான் இந்தக் கதையை நான் எழுதினேன். அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தொடர்ச்சியாகப் படித்துக் கொண்டு இருக்கும் போது, கந்தர்வன் எழுதிய கதை இதற்குத் தொடக்கப் புள்ளியாக இருந்தது' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

‘மறுமதீப்பீடு காரணமாகவே தேசிய விளையாட்டு விருதுகள் தாமதம்’
விதம் விதமா ரசம் செய்யலாம்...
வெறுமை

சாதம் குழைந்துவிட்டால்... சமையல் டிப்ஸ்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

