'சிலம்பம் என்பது வெறும் கலையல்ல. நம் மண்ணின் கலாசாரம். மண்ணுக்கும், சிலம்பத்துக்கும் மதிப்பையும் மரியாதையையும் அளிக்க வேண்டும் என்பதற்காக வீரர்கள் சிலம்பப் போட்டியில் காலணியை அணியக்கூடாது'' என்கிறார் சிலம்பப் போட்டியில் கின்னஸ் சாதனை படைத்துள்ள தேவகோட்டையைச் சேர்ந்த பதினேழு வயதான ரஷீத் கான்.
சென்னை பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம். அறிவியல், தொழில்நுட்ப நிறுவனத்தில் பிப். 15-இல் நடைபெற்ற போட்டியில் 1,300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பெண்கள் சிலம்பத்தைச் சுற்றினர். 4 மணி நேரம் 10 நிமிடங்கள் தொடர்ந்து சிலம்பத்தைச் சுழற்றி முதலிடம் பிடித்தார் ரஷீத் கான். எஸ்.ஆர். எம். கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் முதலாம் ஆண்டு பட்டம் பயிலும் அவர் கூறியது:
'எனது அப்பாவும், அண்ணனும் சிலம்ப வீரர்கள்தான். கடந்த ஏழு ஆண்டுகளாக நான் சிலம்பப் பயிற்சியை எடுத்து வருகிறேன். தேவகோட்டையில் உள்ள 'நேசம் சிலம்பம் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன்' மூலமாக மாஸ்டர் பாசித் முகமது, பக்கீர் முகமது ஆகியோரிடம் நுணுக்கங்களைக் கற்றேன்.
சென்னையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் கடுமையான விதிமுறைகள். போட்டிக்கான அமைப்பாளர்கள் மட்டும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் எடுக்க அனுமதி. அனைவரையும் ஒரே இடத்தில் தேவையான இடைவெளியைவிட்டு மைதானத்தில் நிற்க வைத்தனர். டைமர் ஆன் பண்ணியதும் குறைந்தபட்சம் நான்கு மணி நேரம் சிலம்பத்தை நிறுத்தாமல் சுழற்ற வேண்டும். சுழற்றுவது வேகமாகவும் இருக்கக் கூடாது. மெதுவாகவும் சுழற்றக் கூடாது. அப்படியே நாலு மணி நேரம் நான்-ஸ்டாப்பாக யார் சுற்றுகிறார்களோ அவர்தான் வெற்றியாளர்.
காலை 6.30 மணிக்குத் தொடங்கி, 10.30 மணி வரை நீடித்தது. விதிகளின்படி, கம்பு சுழற்றுவதை ஒரு விநாடி கூட நிறுத்தக் கூடாது. சிலம்பம் சுழற்றிக் கொண்டே தண்ணீர் குடிக்க அனுமதி உண்டு. இக்கட்டான சூழலில் 'வாரல் வெட்டு' எனும் சிலம்ப நுணுக்கத்தைப் பயன்படுத்தி, வலது கையால் கம்பைச் சுழற்றிக் கொண்டே இடது கையால் தண்ணீர் டம்பளரை ஏந்தி தண்ணீர் குடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினேன். 'நாலு திசை நாலு வெட்டு' எனும் அலங்கார சிலம்ப முறையில் நான் நிகழ்த்திய சாகசத்தை நடுவர்கள் பாராட்டினர்.
இன்று கிடைத்துள்ள கின்னஸ் அங்கீகாரத்தை எனது குருக்களுக்கும், என்னை ஊக்குவித்த குடும்பத்தினருக்கும் சமர்ப்பிக்கிறேன்'' என்கிறார் ரஷீத்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தேசிய சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி: நாகை மாணவருக்கு தங்கம்

மாநில அளவிலான சிலம்பப் போட்டி: 700 மாணவா்கள் பங்கேற்பு

சிலம்பம் போட்டியில் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு

தேசிய விளையாட்டுப் போட்டி: சிலம்பம் பிரிவில் தங்கம் வென்ற நாமக்கல் மாணவி
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

