டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

முழு நீள காமெடி

பிரஜின் - புகழ் இணைந்து நடிக்கும் படத்துக்கு 'ஊருக்கு ரெண்டு ஊதாரி' என்று தலைப்பு வைத்துள்ளனர்.

News image
Updated On :15 பிப்ரவரி 2026, 12:54 am

இணையதளச் செய்திப் பிரிவு

பிரஜின் - புகழ் இணைந்து நடிக்கும் படத்துக்கு 'ஊருக்கு ரெண்டு ஊதாரி' என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த காமெடி படத்தை யோகேஸ்வரன் மைனர் எழுதி இயக்குகிறார். ஏ.ஆர்.கே. புரொடக் ஷன்ஸ் சார்பில் ராமகிருஷ்ணன் ஆறுமுகம், வினோத் பெருமாள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ஜனனி நாயகியாக நடிக்கிறார்.விக்ரம் விஜய், ரவி

மரியா, மைம்கோபி, தீபா, அபிதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கும் இப்படத்துக்கு ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். படம் பற்றி இயக்குநர் யோகேஸ்வரன் மைனர் கூறும்போது, 'இது காமெடி ட்ராமாவாக உருவாகும் படம். பொதுவாகவே ஊருக்கு இரண்டு ஊதாரி இருப்பார்கள். ஆனால், ஒரே வீட்டில் இரண்டு ஊதாரி இருந்தால் என்ன நடக்கும் என்பதை வைத்து சுவாரஸியமான காமெடி படமாக உருவாக்குகிறோம்.

கடந்த பத்து வருடங்களாக ஒரே அடிதடி, வெட்டு குத்து படங்களாகவே வருகின்றன. தியேட்டருக்கு வரும் சினிமா ரசிகன் அந்த இரண்டு மணிநேரம் தன்னை மறந்து சிரித்து மகிழவேண்டும் என்றுதான் எதிர்பார்க்கிறான். அப்படி சினிமா ரசிகனை ஃபுல் என்டர்டெயின்மென்ட் செய்யும் படமாக இது இருக்கும்'' என்றார்.

இப்படத்தின் தொடக்கவிழா சென்னையில் நடைபெற்றது. இதில் விஜய் சேதுபதி, சுப்ரமணிய சிவா, நாத், சவுந்தர்ராஜா, கஞ்சா கருப்பு, தயாரிப்பாளர்கள் சுரேஷ் காமாட்சி, சி.வி.குமார், கே. ரமேஷ் பாண்டியன் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.