தமிழக வரலாற்றில் மக்கள் போற்றும் தலைவராக வாழ்ந்து, தூக்குக் கயிற்றை முத்தமிட்ட மாவீரன் மருதநாயகம். இவரது வாழ்க்கை வரலாற்றை திரைக்கதையாக தமிழ்நாடு எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்திருக்கிறார் கே. வி. குணசேகரன்.
தயாரிப்பாளர், விநியோகஸ்தர், இயக்குநர் எனப் பன்முகங்களைக் கொண்ட கே. வி. குணசேகரன் நீண்ட நெடு
காலமாக திரையுலகில் பயணித்து வருகிறார். இவர் தற்போது புதிய முயற்சியாக, வரலாற்றை திரையில் பதிவு செய்வதற்கான வேலைகளைத் தொடங்கியுள்ளார்.
இது குறித்து அவர் பேசும் போது, ' ராமநாதபுரம் மாவட்டத்தில் பனையூர் என்ற கிராமத்தில் பிறந்தவர் மருதநாயகம். படை வீரராகும் ஆசையில் புதுச்சேரி வந்து புது அதிகாரியின் உதவியாளனாய், படை வீரனாய் மாறினார். விவேகம் கலந்த வீரத்தால் உயரதிகாரிகளின் புருவங்களை உயர வைத்த மருதநாயகம், கிழக்கிந்திய கம்பெனியரால் ஈர்க்கப்பட்டார்.
படை வீரனாய் இருந்தவர், தளபதி ஆனார். மருதநாயகத்தின் வளர்ச்சி கண்டு பொறாமையில் வெந்த ஆற்காடு நவாப் ஆங்கிலேயரிடம், 'கம்பெனி ஆட்சிக்கு எதிராக மருதநாயகம் சதி செய்கிறார்' என்று குற்றம் சுமத்தினார்.
இது தெரிந்த மருதநாயகம் கொதித்தார். ஆங்கிலேய அரசை எதிர்ப்பது என்று முடிவெடுத்தார். இந்தப் போரில் மருதநாயகம் தூக்கிலிட்டுக் கொல்லப்படுகிறார். இந்த வரலாற்றை நான் பல ஆய்வுகளுக்குப் பின் புத்தகமாக வெளிக்கொண்டு வந்துள்ளேன். இப்போது இதை சினிமாவாக எடுக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளேன். அதற்கான முதற்கட்ட வேலைகள் தொடங்கியுள்ளன. விரைவில் அறிவிப்புகள் வரும்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அடுத்த தலைமுறையினருக்கு தாய்மொழிப் பயிற்சி மிகவும் அவசியம்: த.ஸ்டாலின் குணசேகரன் வலியுறுத்தல்

இந்த வாரம் கலாரசிகன் - 19-04-2026

‘தமிழகத்தில் இஸ்லாமியா்கள் பாதுகாப்பான சூழலில் வாழ்ந்து வருகின்றனா்’

ஐபிஎல் வரலாற்றில் சேஸிங்கில் புதிய சாதனை படைத்த ஆர்சிபி!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

