இன்ஸ்டாகிராம் மூலம் மக்களிடம் பிரபலமாக இருக்கும் பிரபலங்களைக் கொண்டு உருவாகி வரும் படம் 'லவ் 3.0'. இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் ராஜேஷ் வி.கே. வேதை.
இன்ஸ்டாகிராமில் மில்லியன் தொடர்பாளர்களைத் தாண்டி பிரபலமாக இருப்பவர் அரனிகா. இவரை அனைவரும் செல்லமாக 'ரீல்ஸ் அக்கா' என்று அழைப்பார்கள். ரீல்ஸ் உலகில் உச்சத்தில் இருக்கும் இவர் கதாநாயகியாக இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்.
கார்த்திகேயன் கே. என். ஸ்மைலி கதாநாயகனாக நடிக்கிறார். தவிர மற்றவர்களுக்கு பரீச்சயமான இன்ஸ்டா பிரபலங்கள் சிலரும் இப்படத்தில் நடிக்கின்றனர். இதன் ஃபர்ஸ்ட் லுக், டைட்டில் லுக் எனப்படும் முதல் தோற்றம், தலைப்பு தோற்றம் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் விழாவில் கதாநாயகி அரனிகா பேசும் போது, 'இந்த படத்தில் நடிப்பதற்கு என்னைத் தேர்ந்தெடுத்த இயக்குநருக்கு நன்றி. இது இப்போது இருக்கும் தலைமுறையின் லவ் பற்றிப் பேசுகிற படம். அனைவருக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன். நான் எனக்குக் கொடுத்த சவாலான பாத்திரத்தைச் சரியாகச் செய்திருக்கிறேன் என்கிற நம்பிக்கை இருக்கிறது. திரை உலகத்திலும் எனக்கு ஆதரவு கொடுங்கள்'' என்றார்.
கதாநாயகன் கார்த்திகேயன் கே.என்.ஸ்மைலி பேசும்போது, 'இன்ஸ்டாகிராமில் சின்ன சின்ன விஷயங்களைச் செய்து கொண்டிருந்தேன். இப்போது அது இந்த இடத்துக்கு என்னைக் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது. என்னை நம்பி இந்த வாய்ப்பு கொடுத்த இயக்குநருக்கு நன்றி. உங்கள் ஆதரவு தொடர வேண்டும். ராஜபாளையத்திலிருந்து உங்களை நம்பி சென்னை வந்திருக்கிறேன். ஆதரவு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
உனக்கு நீயே ஒளி!

இலக்கியங்களில் சுற்றுச்சூழல்!

சாவித்திரி - நான் சந்தித்த பிரபலங்கள் - 53
எஸ். பாலசுப்பிரமணியம் - நான் சந்தித்த பிரபலங்கள் - 52
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

