ஆண்மையும் பெண்மையும் உருவங்கள் மட்டுமே இல்லை. அதில் அவ்வளவு உணர்வுகள் உண்டு. ஒருவருக்குள் ஒருவர் தொலையாமல், ஒருவருக்குள் ஒருவர் தேடாமல், அடைய வேண்டும் என்று நினைக்கிற போதுதான் அசிங்கமாகி விடுகிறோம்.
பெரும்பாலான ஆண்கள் அசிங்கமாக நிற்பதற்கு, பெண்ணை அடைந்து விட வேண்டும் என நினைப்பதுதான் காரணம். ஒருவரின் வலியை இன்னொருவர் புரிந்துக் கொள்ளும் போதுதான் வாழ்க்கை அழகாக மாறுகிறது.
ஒரு விஷயத்தை இன்னொரு விஷயத்தில் தேடும் போதும், தொலைக்கும் போதும்தான் நாம மனுஷங்களா ஆகிறோம் என்பது நம்பிக்கை. பேச்சில் ஈர்க்கிறார் இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன். "ஜென்டில்வுமன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வருகிறார்.
ஜென்டில்வுமன்.... என்ன மாதிரியான களம்....
இன்றைய சினிமா மிகவும் துணிச்சலாக பேச வேண்டிய விஷயம் இது. முதல் படம் என்பதால் இமேஜூக்குள் நின்று பார்க்க வேண்டிய அவசியம் எனக்கில்லை.
அதனால்தான் ஒரு கை பார்ப்போம் என இறங்கி வந்து விட்டேன். ஏதோ ஒரு விதத்தில் எல்லோரும் ஏதோ ஒரு விஷயத்துக்கு பொறுப்பாகி விடுகிறோம். பெண்மை, கற்பு, ஒழுக்கம் போன்ற கலாசார மதிப்பீடுகள் எல்லாம் வேறு வேறு அர்த்தங்கள் பெற்று உருமாறி விட்டன. இன்னும் சில காலங்களில் பண்பாடு, கலாசாரங்களில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்பது தெரியாமல் தவிக்கப் போகிறோம்.
பெண்கள் உடலளவில் பலவீனமானவர்கள் என்பதைத் தெரிந்துக் கொண்டு எத்தனை பிரச்னைகளை உருவாக்கி விடுகிறது சமூகம். இதனால் சொல்ல முடியாத தவிப்பில் இருக்கிறார்கள் பெண்கள். சிக்னலில் கார் துடைத்து விடும் சிறுமிக்குப் பின்னால் எத்தனை ஒரு ரணம் இருக்கும். நள்ளிரவில் பைக் மறிக்கும் விலை மாதுவுக்குப் பின் ஒரு ரம்மியமான காதல் இருந்திருக்குமோ. வறுமை, ஆதிக்க சக்திகளின் பண பலம் என நிறைய விஷயங்கள் இதன் பின்னணியில் உண்டு.
இந்தியாவின் வல்லரசு கனவு... சந்திரனுக்கு விண்கலம் என பெருமைகளை பேசிக் கொண்டிருக்கிற நாம், இன்னொரு பக்கம் ரணங்களை உள்நோக்கி பார்ப்பதில்லை.
அப்படி ஒரு பார்வையை இது முன் வைக்கும். பெண் கொடுமைகளுக்கு எதிரான தீர்க்கமான ஒரு அரசியல் பார்வையும் இருக்கிறது. எல்லா அம்சங்களும் இல்லாமல் இறுக்கமாக இருக்கும் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட லிஜோமோல், லாஸ்லியா இருவருக்கும் நன்றி.
பெண் சார்ந்த கதைகள் இங்கே குறைவு...
அதனால் என் முதல் படத்திலேயே அதை கொண்டு வந்திருக்கிறேன். திருமணம் ஆன ஒரு பெண். திருமணம் ஆகாத ஒரு பெண் இந்த இருவரின் நிலைப்பாட்டில் இருந்து கதை சொல்லப் போகிறேன். கதையில் ஒவ்வொரு விஷயத்தையும் மிக நுட்பமாக கவனித்து செய்திருக்கிறோம். படத்தின் நாயகி சமைத்துக்கொண்டிருப்பாள், அவளின் கணவர் யோகா செய்துகொண்டிருப்பார்.
மாமனார் சாப்பிடுவார், தூங்குவார், சாப்பிடுவார், தூங்குவார்... ஒரு குடும்பத்தில் ஆண்கள் சாப்பிடுகிறார்கள், சாப்பாட்டைக் குறை சொல்கிறார்கள், அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்கிறார்கள், சாப்பிட்டு வேலைக்குப் போய்விடுகிறார்கள். பெண்ணின் தேவைகள் மட்டும் நிறைவேறுவதில்லை. சமையலறையில் ஒழுகிக்கொண்டிருக்கும் குழாயை சரிசெய்ய பிளம்பர் கேட்கிறாள்.
அதுகூட படம் முடியும் வரை நிறைவேறவில்லை. டான்ஸ் டீச்சராக வேண்டும் என்ற அவளது ஆசையும் மறுக்கப்படுகிறது. கணவனுடன் நெருக்கமாக இருக்கும் தருணங்களிலும் அவளின் சுய விருப்பங்கள் நிறைவேற்றப்படவில்லை. அவள் கணவனுக்கு ஒரு கருவியாக மட்டுமே இருக்கிறாள்.
இது உலக பெண்களுக்கான கதை. அதை கொண்டு வந்திருக்கிறோம். ஆணாதிக்க மனப்பான்மையையும், அடிப்படைவாதத்தையும் கொண்டிருக்கும் ஒரு வீட்டுக்கு பெண் ஒருவர் வாழ சென்றால் அவள் உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் என்னென்ன துன்பத்தை அனுபவிக்கிறாள்...அதன் வலியை இங்கே கொண்டு வந்திருக்கிறேன்.
சமரசங்கள் இல்லாமல் இந்த கதைக்கு முழு வடிவம் கொடுத்திருக்க முடியாது....
நம் கண் முன்னே கொட்டிக் கிடக்கிற மனித வாழ்க்கைதான் இந்தப் படத்துக்கான வடிவம். நீங்கள் எப்படி நினைத்தாலும் கதை, அப்படியே அதை பேசும். ஒரு சினிமா 2 மணி நேரம்தான், ஆனால் ஒவ்வொரு வாழ்க்கையும் 24 மணி நேரம். வாழ்க்கைதான் இங்கே யோசிக்கவே முடியாத சினிமா. உங்களை கடந்து போகிற ஒவ்வொரு எளிய பெண்ணும் இந்த சினிமாவில் தென்படுவான்.
ஒரு காதல், ஒரு சம்பவம், ஒரு பிரச்னை.. என எதையும் இந்தக் கதையில் முன்னிலைப்படுத்தி பார்க்க முடியாது. அப்படி பார்த்தால் அதை சுற்றியிருக்கிற மனிதர்களை விட்டும் அகல முடியாது. எழுதுவதும், பேசுவதும், சினிமா எடுப்பது சந்தோஷத்துக்காக மட்டுமேதான். சக மனிதர்களின் அன்பும், அரசியலும்தான் இங்கே மூலதனம். சில சமானியர்களின் குறிப்புகள் என்று கூட இதைச் சொல்லலாம்.
டான்ஸ், சண்டை, காமெடி இது இல்லாமல் இப்போது படங்கள் இல்லை. இது எதுவுமே வேண்டாம் என்று தயாரிக்க வந்த ஹரி பாஸ்கரன் சாருக்கு நன்றிகள் பல. யுகபாரதி அண்ணா பாடல்களுடன் வசனங்களையும் எழுதியிருக்கிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.
இது இந்தப் படத்துக்கு பெரும் பலம். எனது அன்பு, கோபம், மனிதம் இதை எல்லாம் முழுவதுமாக வெளிப்படுத்த முடியாமல் எந்த அரசியலாவது தடையாக இருந்தால், அது எனக்கு வேண்டாம் என்றார் வினோபா பாவே. அது எத்தனை பெரிய உண்மை இந்தப் பட ஆக்கத்தின் மூலம் நான் கண்டைந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
சேயோன் - இன்னொரு விருமாண்டி?
உன்னதமான நேரம் இது!
சின்னதாய் ஓர் அரண்மனை
கனவை நிஜமாக்கும் மாயாஜாலம்
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

