நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம்

சமுத்திரக்கனி தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்து வரும் படம் "ராமம் ராகவம்'. ஸ்லேட் பென்சில் ஸ்டோரீஸ் நிறுவனத்தின் சார்பில் ப்ருத்வி போலவரபு இப்படத்தை தயாரிக்கிறார்.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 3:13 pm

தினமணி


சமுத்திரக்கனி தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்து வரும் படம் "ராமம் ராகவம்'. ஸ்லேட் பென்சில் ஸ்டோரீஸ் நிறுவனத்தின் சார்பில் ப்ருத்வி போலவரபு இப்படத்தை தயாரிக்கிறார். பிரபல தெலுங்கு நடிகர் தன்ராஜ் கொரனானி, இருமொழி திரைப்படமாக இயக்குவதோடு சமுத்திரக்கனியோடு இணைந்து நடிக்கவும் செய்கிறார். படம் குறித்து இயக்குநர் பேசும் போது... ""மிக எளிமையாக, சந்தோஷமாக இந்த வாழ்க்கையை அணுகும் மன பக்குவம் கொண்டவர்கள், எத்தனை மகத்தானவர்கள். வெள்ளந்தியான, சந்தோஷமான மன அமைப்பு கொண்டவர்களை பார்க்கும் போது, அவர்களைப் போல் நம்மாலும் வாழ முடியாதா என்று தோன்றும். சில விநாடிகளேனும் அந்த வருத்தம் நம்மை தின்று விடும். 

எல்லாமும் இயந்திரமாகிவிட்ட போதிலும், அன்புக்கான தருணங்கள் இன்னும் உயிர்ப்போடுதான் இருக்கின்றன. செல்பேசிகள், இணையம் என வந்து விட்ட போதிலும், சொல்லப்படாத சொற்கள் ஏராளமாகத்தான் இருக்கின்றன. ஆனால் அன்பு மட்டுமே பிரதானமாக இருந்த காலங்கள் எங்கே... அப்படி ஒரு நினைப்பை உள்ளுக்குள் கொண்டு வந்து பார்க்கிற படம். தந்தைக்கும் மகனுக்குமான உறவு என்பது கதை நகருவதற்கான ஒரு வழிதான். 

அதைத்தாண்டி இந்த வாழ்க்கையில் ஆயிரமாயிரம் சிக்கல்கள் இருந்தாலும், எல்லோருமே ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையைத்தான் வாழ்ந்து வருகிறோம் என சொல்லப் போகிறேன். போராடுவதும், வாழ்வதும்தானே மனிதனின் பேரழகு. தனிமை, பிரிவு, விரக்தி.... எல்லாமே பொய். அன்பும் போராட்டமும் மட்டுமே இந்த மானூடத்தின் நிரந்தரம். 

அது ஒரு போதும் வற்றிப் போவதே இல்லை. சக மனிதனை நேசிப்பதுதான் வாழ்க்கை. எல்லா இழப்புகளையும் இட்டு நிரப்புவதற்கு மனசு மட்டுமே போதும்... போதும்..'' என்றார் இயக்குநர். ஹைதராபாத், ராஜமந்திரி சென்னை, மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட  இடங்களில் படப்பிடிப்பு  நடந்து வருகிறது. இழப்புகளையும் இட்டு நிரப்புவதற்கு மனசு மட்டுமே போதும்... போதும்..'' என்றார் இயக்குநர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.