நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

வசூல் சாதனையில் முதலிடம்

2023-ஆம் ஆண்டில் ஷாருக்கான் பாக்ஸ் ஆபிஸில் ஹாட்ரிக் சாதனை படைத்திருக்கிறார்.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 3:17 pm

தினமணி


2023-ஆம் ஆண்டில் ஷாருக்கான் பாக்ஸ் ஆபிஸில் ஹாட்ரிக் சாதனை படைத்திருக்கிறார். "பதான்'- 1050.30 கோடி ரூபாய் வசூலித்தது. "ஜவான்'- 1148.32 கோடி ரூபாய் வசூலித்தது. ஆண்டு இறுதியில் வெளியான "டங்கி' உலகம் முழுவதும் 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்திருக்கிறது. ஒரே வருடத்தில் பிளாக்பஸ்டர் ஹிட்டுகளை ஷாருக்கான் தொடர்ந்து வழங்கி இருக்கிறார். 

அவரின் நடிப்பில் வெளியான இந்த மூன்று படங்களும் இணைந்து 2023ஆம் ஆண்டில் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் 117 மில்லியன் டாலர்களை வசூலித்திருக்கிறது. இது சீனாவை தவிர்த்து பாரம்பரிய சர்வதேச சந்தைகளில் ஒரே ஆண்டில் எந்த இந்திய சூப்பர் ஸ்டாரும் அடையாத மிகப் பெரும் சாதனையாகும்.  இதன் மூலம் இந்தியாவில் மட்டுமல்ல.

உலகளவிலான திரைத்துறைக்கு புதிய வரையறைகளையும் ஏற்படுத்தி உள்ளது. ஷாருக்கான் இந்த ஆண்டில் "பதான்' மூலம் உளவாளிகளின் உலகத்தை பிரம்மாண்டமாக ரசிகர்களுக்கு வழங்கினார். அதைத்தொடர்ந்து "ஜவான்' படத்தில் அதிரடியான ஆக்ஷன் காட்சிகளை வழங்கி ரசிகர்களை பரவசப்படுத்தினார்.

பின்னர் அவரது நடிப்பில் "டங்கி' வெளியானது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது ஐரோப்பாவின் மிகப்பெரிய திரையரங்கமான லு கிராண்ட்  ரெக்ஸில் "டங்கி' திரையிடப்பட்டது. இத்திரையரங்கில் திரையிடப்பட்ட முதல் ஹிந்தி திரைப்படம் என்ற பெருமையையும் இப்படம் பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.