'உலகின் மிக உயரமான மனிதர்' என்ற கின்னஸ் சாதனைக்குச் சொந்தக்காரர் சுல்தான் கோசென். துருக்கியைச் சேர்ந்த இவரது உயரம் 8 அடி 3 அங்குலம். 2009-ஆம் ஆண்டில் இந்தச் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றார்.
இவர் டிச. 10-இல் தனது 41 வது பிறந்த நாளைக் கொண்டாடினார். அவரை கௌரவிக்கும் விதமான காணொளியை கின்னஸ் அமைப்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
அத்துடன் சுல்தான் உலகிலேயே மிகவும் குட்டையான மனிதரைச் சந்தித்தபோது எடுக்கப்பட்ட படங்களும் காணொளியில் இடம் பெற்றுள்ளது.
நேபாளத்தைச் சேர்ந்த சந்திரா பகதூர் டாங்கி என்பவர்தான் உலகின் மிக மிகக் குட்டையான மனிதர். தங்கியின் உயரம் சுமார் ஒன்றே முக்கால் அடி மட்டுமே!
சுல்தான் கோசென் பகுதி நேர விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார். 'உலகின் மிக நீளமான கைகளை கொண்ட மனிதர்' என்ற பட்டமும் சுல்தானிடம் வந்து சேர்ந்தது.
பிட்யூட்டரி சுரப்பியில் வந்த கோளாறு காரணமாக சுல்தானின் உருவம் வளர்ந்துவிட்டது. காணொளி வைரலாகி வரும் நிலையில், சந்திரா பகதூர் டாங்கி இப்போது உயிருடன் இல்லை என்பது சோகமான செய்தி. 2015-ஆம் ஆண்டில் அவர் தனது எழுபத்து ஐந்தாவது வயதில் உயிரிழந்தார்.
-சுதந்திரன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜனநாயக கடமையாற்றிய மலைவாழ் மக்கள்

விஜய் தமிழகத்தை ஆளப்போவது நிச்சயம்: கோபி தவெக வேட்பாளா் கே.ஏ.செங்கோட்டையன்

பேருந்துகளில் பொங்கல், தீபாவளி நேரங்களைக் காட்டிலும் அதிக கூட்டம்: மாவட்டத் தோ்தல் அலுவலா்

உத்தரகண்ட்: பள்ளத்தாக்கில் வாகனம் கவிழ்ந்து 8 போ் உயிரிழப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


