தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

விரைவில் ஹைட்ரஜன் ரயில்

ரயில்களை இயக்குவதற்கு டீசலோ, மின்சாரமோ இல்லாத ரயிலை அறிமுகப்படுத்த இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.

News image

Picasa

Updated On :1 டிசம்பர் 2024, 1:29 pm

ரயில்களை இயக்குவதற்கு டீசலோ, மின்சாரமோ இல்லாத ரயிலை அறிமுகப்படுத்த இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதன்படி, ஹைட்ரஜன் வாயுவைப் பயன்படுத்தி ரயில் எஞ்சின்கள் விரைவில் இயக்கப்படவுள்ளன.

பயணிகளின் வசதிக்காக ரயில் பெட்டிகளை மேம்படுத்தி, 'தேஜஸ்', 'வந்தே பாரத்' ... என விரைவு சொகுசு ரயில்களை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தி வருகிறது.

டீசல் ரயில்கள் வெளியிடும் புகையும் காற்றில் மாசுக்களைக் கலக்கிறது. அதனால் டீசலுக்கு மாற்று எரிபொருள் கண்டுபிடிக்க, பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. இந்தத் தேடலில், இந்தியா ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல்லைத் தொட்டுள்ளது. முதல் முறையாக தண்ணீரில் ரயில் இயக்கப்படவுள்ளது.

'மேம்பட்ட ஹைட்ரஜன்' எரிபொருளாக்கும் தொழில்நுட்பம் மூலம் ஹைட்ரஜன் ரயில் இயக்கப்படும். ஹைட்ரஜன் ரயில்களை இயக்கும் ஜெர்மனி, பிரான்ஸ், சுவீடன், சீனாவுடன் இந்தியாவும் ஐந்தாவது நாடாக இணைகிறது.

சிறப்பு அம்சங்கள்:

ஹைட்ரஜன் ரயிலுக்கான தயாரிப்பு செலவு தோராயமாக ரூ.80 கோடியாகும். ஹைட்ரஜன் ரயிலானது தண்ணீரை ஹைட்ரஜன், ஆக்சிஜனாகப் பிரித்து ஹைட்ரஜனை எரி பொருளாôகப் பயன்படுத்திக் கொள்கிறது. இந்த ரயிலுக்கு ஒரு மணி நேரத்துக்கு சுமார் 40 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும், அவ்வளவு தண்ணீரைச் சேமிக்க ரயில் பெட்டிகளில் தனி வசதிகள் செய்யப்படும்.

கார்பன் உமிழ்வு கொஞ்சமும் இல்லாத ரயிலான 'ஹைட்ரஜன் ரயில்' வெள்ளோட்டம் இந்த டிசம்பர் மாதமே நடக்கும் என்று ரயில்வே சொல்லியுள்ளது. நாடு முழுவதும் ஹைட்ரஜனில் இயங்கும் 35 ரயில்களை இயக்கப்பட உள்ளன.

ஹைட்ரஜனில் இயங்கும் முதல் ரயில் அரியாணாவில் 90 கி.மீ. தூரமுள்ள 'ஜிந்த்-சோனிபட்' வழித்தடத்தில் இயக்கப்படும். விரைவில் டார்ஜிலிங், நீலகிரி, சிம்லா மலை வழித்தடங்களில் அறிமுகமாகும். இந்த ரயில் மணிக்கு 140 கி.மீ. வேகம் வரை செல்லும். ஒரே ஓட்டத்தில் 1,000 கி. மீ. வரை பயணிக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.