பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டியில் ஏழு மாத கர்ப்பிணி பங்கேற்று சாதித்துள்ளார். வாள்வீச்சு பிரிவில் எகிப்தைச் சேர்ந்த நடா ஹபிஸ் என்ற வீராங்கனைதான் அவர். இந்தச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து உலகமே ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது.
இருபத்து ஆறு வயதாகும் நடா ஹபிஸ், ஏழு மாதம் கர்ப்பமாக இருக்கிறார். இருந்தாலும் பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டியில் எந்த பயமும் இன்றி, போட்டியில் பங்கு பெற்றுள்ளார். வாள்வீச்சு போட்டியில் எடை கூடிய தடிமனான பாதுகாப்பு உடைகளை அணிய வேண்டும். ஏனென்றால் கையில் உண்மையான வாள் ஏந்தி எதிராளியைத் தொட வேண்டும்.
வாள் வீசும் அவசரத்தில் காயம் ஏற்படவும் வாய்ப்புள்ளதால் பாதுகாப்பு உடை அவசியம். கர்ப்பமாக இருப்பவருக்கு தடிமனான பாதுகாப்பு உடை அணிவதில் சிரமம் இருக்கும். இத்தனை சிக்கல்கள் இருக்கும் வாள் வீச்சு விளையாட்டில், கவலைப்படாமல் ஏழு மாத கர்ப்பத்துடன் நடா பங்கேற்று அசத்தியுள்ளார்.
இதைவிட ஆச்சரியம் என்னவென்றால், நடா ஹபீஸ் முதல் போட்டியில் அமெரிக்க வாள்வீச்சு வீராங்கனையான எலிசபத்தை 15க்கு 13 என்ற புள்ளிக் கணக்கில் தோற்கடித்தார். அதனால் நடா அடுத்த கட்டப் போட்டிக்குத் தகுதி பெற்றார். போட்டியில் தென்கொரிய வீராங்கனை ஜியோனை எதிர்த்து வாள் வீசினார். ஆனாலும், தோல்வி அடைந்தார். கண் கலங்கி நடா அரங்கிலிருந்து வெளியேறினா.
இதுகுறித்து நடா ஹபீஸ் கூறுகையில், 'பார்வையாளர்களுக்கு நானும் எதிராளியும் போட்டியில் இருப்பதுதான் தெரியும். உண்மையில் போட்டியின்போது இன்னொரு உயிரையும் நான் சுமந்து கொண்டிருந்தேன். எழு மாத கர்ப்பத்துடன் மேடையில் அங்கும், இங்கும் விரைவாக நகர்ந்து முன்னுக்கும் பின்னுக்கும் முன்னேற கால்களை எடுத்து வைப்பது மிகவும் சிரமம்தான். என்னாலான மட்டும் எதிராளியின் வீச்சை சமாளித்தேன். போட்டியில் கலந்து கொள்ள கணவர் ஊக்கம் அளித்ததும் மட்டுமில்லாமல் உற்சாகத்தையும் தந்தார்.
2016 ரியோ ஒலிம்பிக்ஸ், 2020 டோக்கியோ ஒலிம்பிக்சிஸ்களிலும் வாள் வீச்சுப் போட்டியில் கலந்துகொண்டேன். இந்த முறை பங்கேற்க கர்ப்பிணி என்றால், சாதனையைத் தவற விட்டுவிடக் கூடாது என்று நினைத்தேன்'' என்கிறார் நடா ஹபிஸ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கர்ப்பிணி பெண்களுக்கு Paracetamol மாத்திரை ஆபத்தா? | அறிவியல் ஆயிரம் | Health Care
ஏழு வாரத்திற்குப் பின் வான்வழியை மீண்டும் திறக்கும் ஈரான்!
ஐசிசி மார்ச் மாத சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் சஞ்சு சாம்சன், பும்ரா!

ஈரானின் 304 ஏவுகணைகளை அழித்தது ஐக்கிய அரபு அமீரகம்!
வீடியோக்கள்

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை


