தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

இந்தியன் பனோராமாவில் தேர்வு 

இந்த வருட இந்தியன் பனோரமாவின் 54-ஆவது உலக திரைப்பட விழாவில் "காதல் என்பது பொதுவுடமை' என்கிற தமிழ்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :12 நவம்பர் 2023, 8:49 pm


இந்த வருட இந்தியன் பனோரமாவின் 54-ஆவது உலக திரைப்பட விழாவில் "காதல் என்பது பொதுவுடமை' என்கிற தமிழ்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 20 முதல் 28-ஆம் தேதி வரை கோவாவில் நடக்கும் உலகதிரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்படுகிறது. இந்திய மொழிகளில் பங்குபெற்ற 408 படங்களில் 25 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் கலந்து கொள்ளும் தமிழ்ப் படம் என்கிற பெருமையை பெற்றுள்ளது இந்தப் படம். லிஜோமோல், ரோகிணி, வினீத், கலேஷ் ராமானந்த், அனுஷா, தீபா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

"தி கிரேட் இந்தியன் கிச்சன்' இயக்குநர் ஜியோ பேபி வழங்க , மேன்கைன்ட் சினிமாஸ், நித்திஸ் புரொடக்ஷன், சிம்மட்ரி சினிமாஸ் நிறுவனங்கள் இணைந்து படத்தை தயாரித்துள்ளது. ஸ்ரீசரவணன் ஒளிப்பதிவில் கண்ணன் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன். இவர் ஏற்கெனவே "லென்ஸ்', "தலைக்கூத்தல்', உள்ளிட்ட படங்களை இயக்கி கவனம் ஈர்த்தவர். இயக்குநர் பேசும் போது... ''

காதலில் ஜெயித்தே ஆக வேண்டும் என்கிற வழிதான்.  இப்படியும் போகலாம், அப்படியும் போகலாம் என்பது இதில் இல்லை.  இதில் வருகிற கதை நாயகன் தேர்ந்தெடுக்கிற வழிதான் முக்கியமானது. அன்புக்கு மட்டுமே நிஜமாக இருப்போம் என்று போகிற இடங்களும் வருகிறது. இன்னமும் இங்கே மென்மையும், பிற மனிதர் சார்ந்த  அக்கறையும் அருகிப் போய்விடவில்லை என்பதும் புரியும் ‘‘ என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.