உலக மக்கள் விரும்பும் சுற்றுலாத் தலமாக, பூட்டான் நாடு இருக்கிறது. உலகின் மகிழ்ச்சியான நாடுகளில் இதுவும் ஒன்று.இந்த பூட்டானின் சிறப்புகள் என்ன?
இமயமலை சாரலின் கிழக்கு எல்லையில் உள்ளது. சிக்கிம் நேபாளத்தை பூட்டான் பிரிக்கிறது. இதன் தலைநகரம் திம்பு.
"பரோ' என்ற இடத்தில் விமான நிலையம் உள்ளது. சர்வதேச விமான நிலையம்தான். ஆனால் ஆபத்தானது. இந்த விமான நிலையத்தை அடைய பயிற்சி வேண்டும். அதனால் மிகவும் கவனமாக இயக்க வேண்டும். இப்படி இயக்குவதற்கு, 8 விமானிகளுக்கு மட்டுமே தகுதி உண்டு. பகல் வெளிச்சத்தில் மட்டுமே விமானங்கள் இயக்க அனுமதி உண்டு.
பல வண்ண மரங்கள் கலப்புடன் வீடுகள், கட்டடங்களைக் காணலாம். எல்லாவற்றிலும் பூட்டான் கலாசாரம் பிரதிபலிக்கும். திம்புவில் கூட "டிராபிக் லைட்ஸ்' கிடையாது. போலீஸாரே வாகனங்களை நிறுத்தி, அனுப்பி சமாளிக்கின்றனர்.
புகை பாதிப்பு அறவே இல்லாத நாடுகளில் பூட்டானும் ஒன்று. பூட்டான் மக்கள் தங்களது நாட்டின் பாரம்பரிய உடைகளையே அணிவர். பெண்கள் அணிவது கிரா. ஆண்கள் அணிவது கோ.
அரசு விழாக்கள், பொது நிகழ்ச்சிகளில் பாரம்பரிய உடைகளுக்கே முக்கியத்துவம்.
மிருகங்கள், பறவைகளைக் கொல்லத் தடை உண்டு. வெளிநாடுகளில் இறக்குமதி செய்யப்படும் மாமிசத்தையே பூட்டான் நாட்டு மக்கள் சாப்பிடுகின்றனர்.
குற்றங்கள் மிகவும் குறைவு என்பதால், மக்கள் பயமில்லாமல் வெளியே பயணிக்கின்றனர். மடாலயங்கள் வழியெங்கும் உண்டு. பிரார்த்தனைக் கொடிகள் வண்ணமயமாகப் பறப்பதைக் காணலாம்.
இந்த நாட்டில் 87 சதவீதம் பேர் கைப்பேசியை பயன்படுத்துகின்றனர். இலையுதிர் காலம், வசந்த காலம் சுற்றுப்பயணத்துக்கு மிகவும் சிறந்தது.
யாக் விலங்கு, மலை முகடுகள், பள்ளத்தாக்கு, பனிபடர்ந்த மலைகள் ... போன்றவைதான் பூட்டானின் அழகு.
இளம் ஜனநாயக நாடு. ரால்ப்பிட்ச் என்ற ஆங்கிலேய வியாபாரிதான் இந்த நாட்டுக்குப் பெயர் சூட்டினார்.
இந்தியா, சீன நாடுகளுக்கு இடையே பூட்டானுக்கு நல்லுறவு இருந்தாலும், ராணுவ உறவு இந்தியாவோடுதான்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் 4 அடுக்கு பாதுகாப்பு!

முன்னாள் இந்திய ஹாக்கி வீரர் குர்பக்ஸ் சிங் கிரேவால் காலமானார்!

புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் சிந்து பைரவி தொடர்!

ஐபிஎல் 2026ல் சிறந்த எகானமி: முதலிடத்தில் சிஎஸ்கே வீரர் அகீல் ஹொசைன்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


