கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

யாத்திசை 

சக்தி, சேயோன், ராஜலட்சுமி, வைதேகி உட்பட புதுமுகங்கள் நடிப்பில் உருவாகி வரும்  படம் "யாத்திசை'. வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் சார்பில் கே.ஜெ.கணேஷ் தயாரித்து வரும் இப்படத்தை  தரணி ராசேந்திரன் எழுதி இயக்குகிறார

News image
Updated On :15 ஏப்ரல் 2023, 4:57 pm

சக்தி, சேயோன், ராஜலட்சுமி, வைதேகி உட்பட புதுமுகங்கள் நடிப்பில் உருவாகி வரும்  படம் "யாத்திசை'. வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் சார்பில் கே.ஜெ.கணேஷ் தயாரித்து வரும் இப்படத்தை  தரணி ராசேந்திரன் எழுதி இயக்குகிறார்.  சக்ரவர்த்தி இசை அமைத்துள்ளார். சக்தி ஃபிலிம் பேக்டரி வரும் 21-ஆம் தேதி படம் வெளியாகிறது. படம் பற்றி தரணி ராசேந்திரன் கூறியதாவது.... 

"1300 ஆண்டுகளுக்கு முந்தைய கதை இது. பாண்டிய மன்னனுக்கு எதிராகப் போராடிய சிறு தொல்குடியை பற்றிய கதை. அந்தக் காலகட்டம், அந்த மொழி வழக்கு போன்றவற்றை அப்படியே கொண்டு வருவது சவாலாக இருந்தது. இப்படத்திற்கு முழு உயிர் கொடுத்தது என் குழு தான். 25 உதவியாளர்கள் இதில் வேலை செய்துள்ளார்கள். இந்தப்படம் பொன்னியின் செல்வனுக்குப் போட்டியல்ல. ஆனால் "யாத்திசை' பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்திய சினிமாவில் மிகப் பெரிய படமாக இருக்கும் எனும் நம்பிக்கை உள்ளது. ஏழாம் நூற்றாண்டில் நடைபெறுகிற வரலாற்று ஆவணங்களை தழுவிய புனைவு கதை இது. 

இதற்காக அந்த கால கட்டத்திய மக்களின் பழக்கவழக்கங்கள், கலாசாரம், உடை, உணவு, அரசியல், மொழி.. ஆகியவற்றில் பார்வையாளர்களுக்கு நம்பகத் தன்மை கிடைக்கவேண்டும் என்பதற்காக எங்களுடைய தேடலை தொடங்கினோம். 

அதிலும் குறிப்பாக அந்த காலகட்டத்தில் மொழியை மீளுருவாக்கம் செய்து கதாபாத்திரங்கள் பேச வேண்டும் என்ற நிலை ஏற்பட்ட போது... அனைவரும் இது தற்போதைய காலகட்டத்தை பார்வையாளர்களுக்கு புரியாமல் போய்விடுவதற்கான வாய்ப்பு அதிகம் என தெரிவித்தனர். இந்த சிக்கல் தற்போது வரை நீடிக்கிறது. படம் என்பது வணிகம் சார்ந்த படைப்பாக இருந்தாலும், அதனுள் ஒரு கலை அம்சம் பொதிந்திருக்கிறது. இந்த படைப்பின் ஜீவன் மொழிதான். தொல்குடிகள் பேசிய அந்த மொழிகள்தான் இதன் உயிர். அதனை ரசிகர்கள் புரிந்து கொள்வார்கள்.  இந்த திரைப்படம் விமர்சகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். கருத்தியல் ரீதியாக விவாதத்தை உண்டாக்கும். மாற்று சினிமா குறித்த சிந்தனையை தூண்டும்'' என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.