எஸ்.ஐ.ஆர். பணியில் ஆதார் இணைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்தெற்கு ரயில்வே மெத்தனமாக செயல்படாமல் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்: கனிமொழிஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது - கனிமொழிஅதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

ஜி.டி. நாயுடு வாழ்க்கையில் மாதவன்

கோவையைச் சேர்ந்த ஜி. டி. நாயுடு இந்திய விஞ்ஞானிகளில் முக்கியமானவர். உலக அளவில் முக்கிய கண்டுபிடிப்புகளை உருவாக்கியவர்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 6:48 pm

தினமணி

கோவையைச் சேர்ந்த ஜி. டி. நாயுடு இந்திய விஞ்ஞானிகளில் முக்கியமானவர். உலக அளவில் முக்கிய கண்டுபிடிப்புகளை உருவாக்கியவர். இவரது அறிவு மற்றும் உழைப்பை இளம் தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் விதமாக இவரது வாழ்க்கை படமாக்கப்படவுள்ளது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலும் இவர் எப்படி விஞ்ஞானியாக உயர்ந்தார் என்று இந்த சினிமா பேச போகிறது.  இந்தியாவின் மாபெரும் விஞ்ஞானியான ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் மாதவன் நடிக்க விருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தப் படத்தை மீடியா ஒன் குளோபல் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.  இந்தியாவின் மாபெரும் பொறியாளர் மற்றும் விஞ்ஞானியான ஜி.டி.நாயுடு, கோயம்புத்தூரை வளப்படுத்தியவராவார். மேலும், இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் மோட்டாரையும் கண்டுபிடித்தது இவர் தான். இதற்கு முன்பு "ராக்கெட்ரி; தி நம்பி எஃபெக்ட்' எனும் படத்தில் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை தானே இயக்கி, நடித்து வெளியிட்டார் மாதவன். அதைத்தொடர்ந்து, தற்போது விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க இருக்கிறார். மேலும், "திருச்சிற்றம்பலம்' பட இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கும் அடுத்த படத்திலும் மாதவன் நடிக்க இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

இதற்காக ஜி. டி. நாயுடு பெயரில் செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனங்களுடன், இந்தத் தயாரிப்பு நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டிருக்கிறது. எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனைகளை புரிந்தவர் ஜி.டி.நாயுடு என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக நடிகர் மாதவன் இந்திய வானவியல் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி "தி ராக்கெட்டரி நம்பி எஃபெக்ட்' எனும் திரைப்படத்தை எழுதி, இயக்கி நடித்திருந்தார். இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது கவனிக்கத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.