பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

நவீன வாழ்க்கையின் காதல் !

"காதலினால் மானிடர்க்குக் கவிதையுண்டாம் கானமுண்டாம்..  சிற்பமுதற் கலைகளுண்டாம் ஆதலினால் காதல் செய்வீர்.. உலகத்தீரே...''!

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:17 am

ஜி. அசோக்

""காதலினால் மானிடர்க்குக் கவிதையுண்டாம் கானமுண்டாம்.. சிற்பமுதற் கலைகளுண்டாம் ஆதலினால் காதல் செய்வீர்.. உலகத்தீரே...''! என்று காதல் செய்ய அழைத்தான் பாரதி.

"ஒரு பெண்ணை காதலிப்பதென்றால், அவளைக் கல்லினுள்ளிருந்து உயிர்ப்பிப்பது என்று பொருள். அடிமுதல் முடிவரை காதலால் நீவி சாபமேற்றுவது, உறைந்துபோன ரத்தத்தில் கனவுகளில் சூடேற்றுவது என்று பொருள் என்று பரம்பொருளான காதலுக்கு அர்த்தம் சொன்னார் சச்சிதானந்தம். ""நான் உன்னைக் காதலிப்பேன். மரணமற்ற காதலாகும் அது.

சூரியன் குளிர்ந்து போகும்வரை நட்சத்திரங்கள் முதுமையடையும்வரை நான் உன்னைக் காதலிப்பேன்...'' என்று எப்படிக் காதலிக்க வேண்டும் எனக் கற்றுத்தந்தார் ஷேக்ஸ்பியர். ஆம், காதலைப் பேசாத... காதலை எழுதாத... காதலைக் கொண்டாடாத கவிஞர்கள் இல்லை; படைப்பாளிகள் இல்லை. காதலைக் கடக்காத... காதலுடன் கைகோக்காத மனிதர்களும் இல்லை... காதல்தான்... காதல் மட்டும்தான் அனைத்துக்கும் கிரியா ஊக்கி. எழுத்தா... ஓவியமா... புகைப்படமா... கவிதையா.. அறிவியல் கண்டுபிடிப்பா... அனைத்தும் ஈரமான காதலிலிருந்துதான் உயிர்ப்பித்தது... உயிர்ப்பிக்கிறது. ஆனால் அந்த காதல் இப்போது... ? எங்கேயோ தொடங்கி கதையின் கருப்பொருளை தேடி வந்து நிறுத்துகிறார் இயக்குநர் கார்த்திக் மதுசூதனன். சினிமாக்களை பார்த்தே சினிமா இயக்க வந்திருக்கிறார்.

படத்தின் பெயர் "டூடி'காதல்தான் கதையின் ஆதாரம் என புரிந்து கொள்ள
முடிகிறது....

நவீன வாழ்க்கை என்பது ஏராளமான தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. சமூகத்தில் வாழும் ஒவ்வொருவரிடமும் ஏதோ ஒரு வகையில் இந்த மாற்றங்கள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பெண்கள் நிறைய படிக்கிறார்கள். வேலைக்கு செல்கிறார்கள். மாற்று சாதியைச் சேர்ந்த இளைஞர்களோடு பழகுகிற, நட்பு பாராட்டுகிற, காதலிக்கிற வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் நவீன வாழ்க்கை அளிக்கும் தொழில்நுட்ப முன்னேற்ற வசதிகளையும், வாய்ப்புகளையும் ஏற்றுக் கொள்கிற மனம், புறவிளைவான காதல் திருமணங்களை மட்டும் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. உற்று நோக்கினால் இதுதான் பக்குவப்பட்ட சமூகமா என்ற கேள்வி எழுகிறது.

தீவிரவாதத்தால் மாண்டவர்களைவிடக் காதலால், காதலின் பெயரால் இறந்தவர்கள்தான் அதிகம் என ஒரு புள்ளி விவரம் குருதி சொட்டச்சொட்டப் புலம்புகிறது. அதை விட காதல் பிரிவுகள்... விவகாரத்துகள் என இன்னொரு பக்கம் காதல் சுழல்கிறது. கடந்த 15 ஆண்டுகளில், விவகாரத்துகளின் எண்ணிக்கை 38,585. தீர்க்க முடியாத விவகாரத்துகளின் எண்ணிக்கை இன்னும் நீளும்.

மற்றுமொரு விமர்சன கதையா...

காதலுக்கும் காமத்துக்குமான இடைவெளி என்னவென்று இந்தச் சமூகத்துக்கு இன்னும் தெரியவில்லை. உடம்புக்கும் மனசுக்கும் நடக்கிற போராட்டத்தை வர்ணிக்கிற வார்த்தைகள் எந்த மொழியிலும் துல்லியமாக இல்லை. மனிதனாக பிறந்த நம் ஒவ்வொருத்தருக்கு உள்ளேயும் இந்த மாதிரி காதலும் காமமும் மாறி மாறி ராட்டினம் சுற்றுகிறது.

இது பெண்களுக்கும் உண்டு என்பதை நம் சமூகம் ஒத்துக் கொள்வதில்லை. நம் அம்மாக்கள் காதலிப்பார்கள் என்று கூட நம்மால் ஒத்துக் கொள்ள இயலாது. நம்மில் பலர் யாருக்கும் தெரியாமல் அழுது, சிரித்து சமாளித்து வாழ்ந்து விடுகிறார்கள்.. ஒரு ஆண், பெண் மனநிலையை உலகத்துக்கு சினிமாவாக சொல்ல வேண்டும் என்கிற ஆசை எனக்குள்ளே உண்டாகியது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், இந்தக் கதையை நிறையப் பேருக்கு அதன் வாழ்க்கைக்கு வெகு பக்கத்தில் இருந்து சொல்ல வேண்டும் என்கிற ஒரே காரணத்துக்காகதான் நான் இதை படமாக்க நினைத்தேன்.

எப்படி வந்திருக்கிறது படம்...

முதல் படத்தில் எல்லோரையும் ஈர்த்து, கவனம் கலைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். நாம் பார்த்த, ரசித்த விஷயங்களை எடுக்க வேண்டும் என்று ஆசை வந்தது. ஆனால், முதல் முத்திரை அழுத்தமாக பதிய வேண்டும் என்று நினைத்தேன். அதற்காக ஒரு விறுவிறுப்பான திரைக்கதை அமைத்தேன். எனக்குள் இருக்கும் நல்ல சினிமா கனவுகளை நிறைவேற்றுவதற்கான ஒரு அடித்தளம். அவ்வளவுதான்.

நண்பர்கள் எல்லாம் சேர்ந்து கொடுத்த பணம். நானும் அதில் ஒரு தயாரிப்பாளர் என்பதால் கொஞ்சம் சுமை. நானே ஹீரோ என்பதால் இன்னும் தெளிவு. "தில்லுக்கு துட்டு 2' படத்தில் நடித்த ஷ்ரிதா சிவதாஸ் ஹீரோயின். ஜீவா ரவி, ஸ்ரீ ரஞ்சனி, சனா ஷாலினி இவர்களெல்லாம் இன்னப் பிற நடிகர்கள். ஷாம் ஆர்டிஎக்ஸ் எடிட்டிங் பணியோடு இயக்கத்திலும் துணை இருந்தார்.

இண்டிபென்டன்ட் சினிமா...?

நிறுவனங்கள் சாராத சுதந்திரமான சினிமா. சின்ன வயதில் கூட்டாஞ்சோறு ஆக்குகிற மாதிரி ஒரு சினிமா எடுத்திருக்கிறோம். கதை சொல்லும் முறையில், மற்ற நுட்பங்களில் சர்வதேசத்தரம் இருக்கும். சமரசம் இருக்காது. வழக்கமான ஃபார்முலா இருக்காது. ஆனால், சுவாரஸ்மான சினிமா. சுவாரஸ்யம் என்பது பாட்டு, சண்டை, குரூப் நடனத்தில் மட்டும் இல்லை. இயல்பான வாழ்க்கையிலும் இருக்கிறதென சொல்ல வருகிற சினிமா. தயாரிப்பாளருக்காகப் பாட்டு வைத்தேன்.

காமெடி வைத்தேன் என்று இல்லாமல் கதைக்கு நேர்மையாக என்ன வைக்கிறோம்... அதுதான் முக்கியம் என்று நினைத்து ஒரு படத்தை எடுத்தோம். அதுதான் இது. படத்தைப் பார்த்தப் பிறகு பிறகு நாம் பேச நிறைய விஷயம் இருக்கும் என்று நம்புகிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.