குத்துச் சண்டை விளையாட்டில் தமிழகத்தின் பெருமையை உயர்த்தி பிடித்து வருகிறார் சென்னையின் இளம் மாணவியான கலைவாணி.
உலக அளவில் கால்பந்து, கிரிக்கெட், கூடைப்பந்து, டென்னிஸ், ஹாக்கி என பல்வேறு விளையாட்டுகள் ஆடப்பட்டாலும், குத்துச்சண்டைக்கு என தனி மவுசு உள்ளது.
உயிருக்கு உலை வைக்கும் வகையில் இருந்த குத்துச்சண்டை விளையாட்டு தற்போது அதிக பாதுகாப்பு அம்சங்களுடன் விளையாடப்படுகிறது.
ஆடவர் குத்துச்சண்டையைப் போலவே மகளிரும் அதிக அளவில் குத்துச்சண்டையில் கோலோச்சி வருகின்றனர். கியூபா, பல்கேரியா, கஜகஸதான், அமெரிக்கா, தென் கொரியா, உள்ளிட்ட நாடுகள் வலுவானவையாக திகழ்கின்றன.
அண்மைக் காலமாக மகளிர் குத்துச்சண்டையில் இந்தியாவும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. குறிப்பாக மேக்னட் எனப்படும் மேரிகோம் 6 முறை உலக சாம்பியன் பட்டத்தையும், ஒலிம்பிக் வெண்கலத்தையும் வென்றவர்.அவரைப் பின்பற்றி சரிதா, நிகால் ஸரீன், சிம்ரன்ஜித் கவுர், லவ்லினா போரோகைன் உள்ளிட்டோர் இந்திய அணிக்காக சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர்.
பல்வேறு விளையாட்டுகளில் தமிழகமும் சிறப்பிடம் பெற்றுள்ள நிலையில், குத்துச்சண்டையில் தற்போது தான் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
9}ஆம் வயதிலேயே ஆர்வம்: தமிழகத்தின் தலைநகரான சென்னையில் குத்துச்சண்டைக்குப் பெயர் பெற்ற பகுதியாக வட சென்னை திகழ்கிறது. வியாசர்பாடி, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் குத்துச்சண்டை வீரர்கள் உருவாகி உள்ளனர். அந்த வகையில், வண்ணாரப்பேட்டையில் அமெச்சூர் வீரரான சீனிவாசனுக்கு மகளாக பிறந்தவர் கலைவாணி.
ந்தையுடன் குத்துச்சண்டை மைதானத்துக்குச் சென்றதால் இயல்பாகவே 9 வயதிலேயே கலைவாணிக்கும் குத்துச்சண்டையில் ஆர்வம் பிறந்தது.
விவசாயத்துக்கு மாறிய தந்தை: குத்துச்சண்டையில் மகள் கலைவாணி சிறப்பான இடத்தைப் பெற வேண்டும் என்பதற்காக அதிக பொருளீட்டுவதற்காக விவசாயத்துக்கு மாறினார் சீனிவாசன். அவரது மகன் ரஞ்சித்தும் தேசிய அளவிலான வீரர் ஆவார். நாட்டுக்காக பதக்கம் வெல்ல வேண்டும் என்ற தந்தையின் கனவு நிறைவேறாத நிலையில், மகள் கலைவாணி அதை நிறைவேற்றி வருகிறார்.
48 கிலோ எடைப்பிரிவில் போட்டியிடும் அவர் 2012}இல் சப் ஜூனியர் பிரிவில் வெண்கலம் வென்றார்.
குறிப்பாக 2019}இல் தேசிய சீனியர் மகளிர் சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்றார். தொடர்ந்து காத்மாண்டுவில் நடந்த தெற்காசிய போட்டியிலும், கோலே இந்தியா போட்டியிலும் தங்கப் பதக்கம் வென்றார்.
அண்மையில் கஜகஸ்தானின் நூர்சுல்தானில் நடைபெற்ற சர்வதேச எலோர்டா கோப்பை போட்டியிலும் வெள்ளிப் பதக்கம் வென்றார் கலைவாணி.
திண்டுக்கல்லில் உள்ள கலைக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் கலைவாணி எதிர்காலத்தில் வேறு ஒரு எடைப்பிரிவில் மாற உள்ளார்.
இதுதொடர்பாக கலைவாணி கூறியதாவது:
""சிறுவயதில் குத்துச்சண்டையில் என்னை சேர்த்ததற்காக உறவினர்கள் தந்தையை சாடினர். ஆட்டத்தில் காயம் அடைந்தால், திருமணம் ஆவதில் பாதிப்பு ஏற்படும் எனக் கூறினர். தற்போது பதக்கங்கள் வென்ற நிலையில், அதே உறவினர்கள் பாராட்டுகின்றனர். எனது சகோதரர் ரஞ்சித் காவல்துறையில் உள்ளார். ஒலிம்பிக்கில் 48 கிலோ எடைப்பிரிவு இல்லை. எனினும் 2 ஆண்டுகள் அதே பிரிவில் பயிற்சி பெற்று பின் அதிக எடைப்பிரிவுக்கு மாறுவேன்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சாந்தினி சௌக்கிலிருந்து கடத்தப்பட்ட ஆண் குழந்தை மீட்பு: ஒருவா் கைது

குருகிராம்: இரும்புப் பெட்டிக்குள் விநியோக ஊழியரின் சடலம் - போலீஸாா் விசாரணை

ஐஆா்எஸ் அதிகாரி மகள் கொலை வழக்கில் கைதானவருக்கு 7 நாள்கள் நீதிமன்ற காவல்

புத்துணர்வுக்கு புதிய பயிற்சி!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


