ரோய்சன் ஜோசப். 20 சுற்றுலா ஆடம்பர சொகுசு பேருந்துகளுக்கு உரிமையாளர். கொச்சியைச் சேர்ந்தவர். சுற்றுலா பேருந்துகள் விற்பனை... கிலோ ரூபாய் 45 -க்கு எடை போட்டு விற்கப்படும் என்று முகநூலில் விளம்பரம் செய்திருக்கிறார்.
தனது கதையை பகிர்கிறார் ரோய்சன் ஜோசப்:
"கரோனா தாக்கத்திற்கு முன் சுற்றுலாதுறை சிக்கல் இல்லாமல் போய்க் கொண்டிருந்தது.கரோனா தாக்கம் ஏற்பட்டவுடன் சுற்றுலா துறை தலைகீழாகப் புரட்டிப் போடப்பட்டது. ஊரடங்கு காலத்தில் ஒரு இம்மியும் அசையாத போது சுற்றுலா துறையும் ஸ்தம்பித்தது. ஊரடங்குகள் தளர்த்தப்பட்டாலும் சுற்றுலா பேருந்துகள் கேரளத்தில் ஓடவில்லை. அநேகமாக எல்லா மாநிலங்களிலும் இதே நிலைமைதான்... இந்த பிப்ரவரி மாதத்தில் பொதுவாக சுற்றுலா பஸ்களுக்கு தேவை அதிகமாகும். இந்த மாதம் மூன்று பஸ்களுக்குத்தான் ஓட்டம் கிடைத்தது. இப்போதைய நிலைமை இப்படி என்றால் சென்ற இரண்டு ஆண்டுகளின் நிலை எப்படி இருந்திருக்கும் என்பதை யூகிக்கலாம்.
பேருந்துகள் அனைத்தையும் வங்கிக் கடனில் வாங்கினேன். தவணை கட்ட முடியாததால் பத்து பேருந்துகளை கேட்ட விலைக்கு விற்றுவிட்டேன். விற்று வந்த பணத்தில் கடனை கொஞ்சம் அடைத்தேன். மீதமுள்ள பஸ்களை எடைக்கு கிலோ 45 ரூபாய் வைத்து விற்கலாம் என்று முடிவு செய்துள்ளேன். அப்படிப்பட்ட நெருக்கடியான சூழ்நிலையில் நான் மட்டும் அல்ல எல்லா சுற்றுலா பேருந்து உரிமையாளர்கள் இருக்கிறார்கள். தவணைத் தொகையைக் கட்டு என்று வங்கிகள் நெருக்கடிதருகின்றன.
கடன் கொடுத்தவர்கள் வீட்டிற்கு வரத் தொடங்கிவிட்டார்கள். நிம்மதி போய் விட்டது. தூக்கம் போய்விட்டது. கடன் கொடுத்தவர்கள் வங்கி உட்பட பேருந்துகளை பறிமுதல் செய்கிறார்கள். பேருந்துகள் ஓடவில்லை என்றாலும் அரசுக்கு வாகன, சாலை வரி கட்டியாக வேண்டும். அதில் அரசு சலுகையையும் காட்டவில்லை. காலாண்டு வரி மட்டும் நாற்பதாயிரம் ரூபாய் ஆகிறது.. பேருந்துஓடாமல் எப்படி இவ்வளவு பெரிய தொகையைக் கட்டமுடியும்' என்று அழாத குறையாகச் சொல்கிறார் ரோய்சன் ஜோசப்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடி
தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!

ரூ. 299 மதிப்புள்ள ஆடையை வாங்க முயன்று ரூ. 1 லட்சத்தை இழந்த செவிலியர்!
நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று வெளியீடு! எங்கே பதிவிறக்கம் செய்யலாம்?
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


