ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரை உலகில் மிகவும் பிரசித்தி பெற்றது. சுற்றுலாப் பயணிகளால் களை கட்ட தொடங்கியுள்ளது.
இந்த நாட்டில் மக்கள் அதிகம் வசிக்கும் சிட்னி நகரில் சுற்றுலாத் தலங்களில் முக்கியமானது போண்டி கடற்கரை. சிட்னியில் இருந்து 7 கி. மீ. தொலைவில் இருக்கும் புறநகர் பகுதியான "நியூ சௌத் வேல்ஸ்' என்ற இடத்தில் இருக்கிறது.
புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கடற்கரையின் ஓரத்தில் மக்கள் நடக்கும் வகையில் ஓற்றையடிப் பாதை போன்று ஒரு பாதை அமைத்திருக்கிறார்கள். அது 3 கி.மீ. இருக்கும்.
கடற்கரை ஓரம் மலைப் பாங்கான இடம். முன்னொரு காலத்தில் கடற்கரை ஓரத்தில் உயரமான மலை இருக்கும்போலும். இன்று அந்த மலை பாறையாகிப் போனது. ஆதலால், பாம்பு போல் வளைந்து வளைந்து பாதை செல்லும். உயரமான இடம், தண்ணீர் கால்களை நனைக்கும் இடம்.
ஆண்டுதோறும் நவம்பர்- டிசம்பர் மாதங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் இங்கு வந்துவிடுவார்கள். சர்வதேசக் கலைஞர்களும் இதற்குள்அடக்கம். அங்கு அவர்கள் வடித்த, செதுக்கிய சிற்பங்களை போண்டிகடற்கரையில் ஒரு கண்காட்சியாக வைப்பார்கள். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தக் கண்காட்சி நடக்கிறது.
கரோனாவால் 3 ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சி நடைபெறவில்லை. இந்த ஆண்டு நடைபெற்றது.
பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ், இரும்பு, கம்பி, பிளாஸ்டிக் உள்படபல்வேறு பொருள்களில் செதுக்கிய சிற்பங்களை 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்தனர்.
போண்டி கடற்கரையின் சரித்திரத்தில் முதன்முதலாக அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்று பிரசித்தி பெற்றுவிட்டது. தோல் புற்றுநோயைத் தவிர்க்கும் விதமாக, பல ஆயிரம் பேர் நிர்வாணமாக நின்று புகைப்படம் எடுத்த ஓர் விழிப்புணர்வு நிகழ்ச்சிதான் அது.
பிரான்கிராம் என்ற பெண்மணி தோல் புற்றுநோய் தாக்கி அவதிப்பட்டார். ஒரு கையில் நோய் தாக்கியதால், அந்தக் கையை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதுபோன்ற நிலை பிறருக்கு வராமல் இருக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இந்த நிகழ்ச்சியில் சேகரிக்கப்படும் நிதி தேசிய தோல் புற்றுநோய் தடுப்பு நடவடிக்கைக்குப் பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.
அமெரிக்காவின் புகழ் பெற்ற புகைப்பட நிபுணர் ஸ்பென்சர் துனிக் இந்தக் காட்சியைப் புகைப்படம் எடுத்தார். இப்போது நிர்வாணக் கடற்கரை என்ற பெயரையும் போண்டி கடற்கரை பெற்றுவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொடைக்கானலில் முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஆர்வத்துடன் மக்கள் செல்ஃபி

சென்னை திரும்பும் மக்கள்! செங்கல்பட்டு அருகே கடும் போக்குவரத்து நெரிசல்!

2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு... பிரதமர் மோடி முக்கிய வேண்டுகோள்!

சிஎஸ்கே பேட்டிங்: சர்ஃபராஸ் கானுக்குப் பதிலாக உர்வில் படேல்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


