கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

மாறி வரும் சென்னை முகம் - 3

சென்னை  சோழிங்கநல்லூர் அருகேயுள்ள கண்ணகி நகர், எழில் நகர், சுனாமி அடுக்குமாடி கட்டடங்கள். அங்கு  நிலவும் புறச்சூழலை அழுகுப்படுத்த கட்டட சுவர்களில் வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:11 pm

வனராஜன்


சுவர் ஓவியங்கள் 

சென்னை  சோழிங்கநல்லூர் அருகேயுள்ள கண்ணகி நகர், எழில் நகர், சுனாமி அடுக்குமாடி கட்டடங்கள். அங்கு  நிலவும் புறச்சூழலை அழுகுப்படுத்த கட்டட சுவர்களில் வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.

ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளில் இருந்தும் சென்னையிலிருந்து ஆறு கலைஞர்களும் இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து நான்கு கலைஞர்கள் சென்னை மாநகராட்சி மற்றும் ஸ்மார்ட் இந்தியா தன்னார்வ அமைப்புடன் இணைந்து எழில் நகரில் உள்ள 14 சுவர்களில் ஓவியங்களைத் தீட்டியுள்ளனர். 

""இந்த பகுதிக்குள் நுழைந்தவுடன் என்னை உற்சாகமாக வரவேற்றது இப்பகுதி குழந்தைகள் . எனவே அவர்களின் மலர்ந்த முகங்களை வரைய வேண்டும் என நினைத்தேன். ஒரு ஆண் குழந்தையையும் ஒரு பெண் குழந்தையையும் வரைந்தேன்'' என்கிறார்  சென்னையை சேர்ந்த ஓவியக்கலைஞர்.

இந்தச் சுவர்களில் வரையப்படும் ஓவியங்கள் நகரத்தின் கலாசாரத்துடன் இணையும். இந்த இடங்களில் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பட்டறைகள் குடியிருப்பு வாசிகளுக்கும் பங்கேற்பு உணர்வைத் தருகின்றன. அதுமட்டுமின்றி, ஓவியங்கள் இப்பகுதிக்கு அழகியல் தோற்றத்தைக் கொடுக்கும். மேலும் குடியிருப்புவாசிகளை சுகாதாரமாக உணர வைக்கும். நகரங்களின் பூர்வீக பாரம்பரியம், கலை, கலாசாரம் மற்றும் மக்களின் வாழ்வியல் சூழல் ஆகியவற்றை இந்த கலை பிரதிபலிக்கிறது.

ஐதராபாத், டெல்லி மற்றும் மும்பையின் தாராவி உள்ளிட்ட ஒன்பது நகரங்களில் இந்த முயற்சிகள் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மெஹந்தி

Story image

சென்னை தி.நகர், பாரிமுனை போன்ற பகுதிகளில் வட மாநிலத்து இளைஞர்கள் அழகான மெஹந்தி டிசைன்களை கைமுழுக்க  போட்டு விடுகிறார்கள்.  இதற்கு பெண்கள் மத்தியில் மவுசு அதிகம். குறிப்பாக திருமணம், வீட்டில் விசேஷம் என்றால் அவர்கள் கையில் மருதாணிக்கு பதில் இப்போது மெஹந்தி போடுவதையே அதிகம் விரும்புகிறார்கள். 

ஆனால் இவை நீண்ட நாள் கைகளில் தங்குவதில்லை. குறிப்பிட்ட சில நாட்களிலேயே காணாமல் போய்விடுகிறது. ஆனாலும் இதற்கான மவுசு குறைந்தபாடில்லை.

""வடமாநிலங்களில் பெண்கள் தாங்களே இதனைப் போட்டுக் கொள்வார்கள். எங்களை போன்றவர்கள் உதவியை விரும்பமாட்டார்கள்.  தற்போது தமிழ்நாட்டில் இந்த அலங்காரத்துக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளது.  நாங்கள் தொழில் முறையாக இதனை கற்றுக்கொண்டு தான் வரைகிறோம். எங்களது நேர்த்தியை பார்த்து இப்போது வட மாநிலத்து பெண்கள் கூட விரும்பி வந்து மெஹந்தி இட்டு விடச் சொல்கிறார்கள்.  முழுக்க முழுக்க இது அழகு சார்ந்த விஷயம். இதனால் ஆரோக்கியத்திற்கு  பாதிப்பு எதுவும் கிடையாது'' என்கிறார்கள்.

டாட்டூ

Story image

பச்சைக்குத்துவது தமிழரின் பண்பாடுகளில் ஒன்று. இது நாகரீக வடிவம் பெற்று இன்றைய இளைஞர்களின் மத்தியில் "டாட்டூ'வாக வலம்வரத் தொடங்கியிருக்கிறது. 

இதில் ஆண், பெண் என்ற பேதமில்லாமல், எல்லோரும் "டாட்டூ' குத்திக்கொள்ள விரும்புகிறார்கள். பெண்கள் தங்கள் பெயர் அல்லது ஓரிரு எழுத்துகளை "டாட்டூ' போட்டுக்கொள்கிறார்கள். 

சிலர், சிறு உருவங்களையும் இணைத்துக் கொள்கிறார்கள்.  தனக்குப் பிடித்த நபர்களின் பெயரையும், பிடித்த வரிகளையும் டாட்டூ குத்துவது ஒருகாலத்தில் வழக்கத்தில் இருந்தது. ஆனால் இன்றைய டாட்டூ பலவித டிசைன்களுடனும், அழகான வண்ணங்களுடனும் அசத்தி வருகிறது. 

தாங்கள் தனித்துவமானவர்கள் என்பதை காட்டுவதற்காக அல்லது தாங்கள் குறிப்பிட்ட குழுவை சேர்ந்தவர்கள் என்று உணர்த்துவதற்காக அநேகர் டாட்டூ குத்துகிறார்கள்.

பொருளாதாரத்தில் உயர்மட்டத்தில் உள்ள பெண்களே, டாட்டூ போட்டுக் கொண்டிருந்த சூழல் தற்போது  மாறிவிட்டது. அவர்களைப் பார்த்து நடுத்தர மக்களும் இந்தக் கலாசாரத்தில் இணைந்துவிட்டனர்.


மூன்றாவது கண்

Story image

முன்பெல்லாம் வணிக வளாகங்கள்,வங்கிகள்,ஏடிஎம் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் மட்டுமே சிசிடிவி காமிராக்கள் காணப்படும். தற்போது போலீசாரின் "மூன்றாம் கண்' விழிப்புணர்வு பிரச்சாரம் மூலம், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், சிறு வியாபாரிகள் உள்ளிட்ட பலரும் சி.சி.டி.வி.யைப் பொருத்தி வருகின்றனர். சென்னையில் பொது இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்துவதற்கு வியாபார நிறுவனங்கள், சமூக அக்கறையுள்ளவர்கள் காவல்துறையினருடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

சென்னையில் குற்றங்களைத் தடுக்கவும், குற்றவாளிகளை எளிதில் கண்டறியவும் நகரம் முழுவதும் சி.சி.டி.வி எனும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மூன்றாவது கண் என்ற இயக்கத்தின் மூலம் சிசிடிவி காமிராக்கள் உதவியால் நகரம் முழுவதையும் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர் போலீசார். 

மக்கள் தொகை அதிகரிப்பிற்கு ஏற்ப குற்றச்செயல்களும் அதிகரித்து வருகின்றன. புதிய குற்றவாளிகள், இளைஞர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவது அதிகரித்திருப்பதால்  குற்றவாளிகளை கண்டுப்பிடிப்பதும் போலீசாருக்கு பெரும் சவாலாக உள்ளது.

அத்தகைய சவால்களில் போலீஸாருக்கு பெரிதும் உதவுவது இந்த கண்காணிப்பு காமிராக்களே. ஒவ்வொரு காவல் நிலைய எல்லையிலும் அமைக்கப்பட்டுள்ள காமிராக்களை அந்தந்த காவல்நிலையத்தில் இருந்தே கண்காணிக்க முடியும். குறிப்பிட்ட நாட்கள் வரை அதனுடைய சேமிப்புகள் அழியாமல் பாதுகாப்பாக இருக்கும்படியும் செய்யப்பட்டுள்ளது.

(நிறைவடைந்தது)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.