அமெரிக்கா சாமியாண்டி புதூர்!
நம்முடைய கலாசாரத்தில் ஊறியவர்கள் அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து திருமணம் செய்துகொள்வதைத்தான் பார்த்திருக்கிறோம் ஆனால் நம்முடைய கலாசாரத்தின் மீது கொண்ட மதிப்பால் நம்முடைய திருமண முறையில் தங்களின் தி


நம்முடைய கலாசாரத்தில் ஊறியவர்கள் அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து திருமணம் செய்துகொள்வதைத்தான் பார்த்திருக்கிறோம் ஆனால் நம்முடைய கலாசாரத்தின் மீது கொண்ட மதிப்பால் நம்முடைய திருமண முறையில் தங்களின் திருமணத்தை சமீபத்தில் நடத்திக் கொண்டது ஓர் அமெரிக்க ஜோடி!
அமெரிக்காவில் இருந்து தமிழகத்துக்கு அதிலும் கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே ஒரு குக்கிராமமான சாமியாண்டி புதூருக்கு வந்து இந்து முறைப்படி முறையாகத் திருமணம் செய்துகொண்ட அமெரிக்கத் தம்பதியைப் பற்றி என்ன சொல்ல!
தென் அமெரிக்காவின் மெக்சிகோ நûட்டைச் சேர்ந்தவர் வாலன்டைன் (30). வட அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவைச் சேர்ந்தவர் பிரிஜெட் (30). இருவரும் கலிபோர்னியாவில் பள்ளித் தோழர்கள். கல்லூரியிலும் இணைந்து படித்ததால் இருவருக்குள்ளும் காதல் அரும்பியது. 17 ஆண்டுகளாக இருவரும் காதலர்கள். கல்லூரியில் படிக்கும்போது இந்து மதம், சடங்குகள், கலாசாரம் குறித்து வாலன்டைன் ஆர்வம் காட்டியுள்ளார். இதனால் இந்து சம்பிரதாயங்கள் மீது வாலன்டைனுக்கு மரியாதை அதிகரித்தது.
இந்தச் சூழ்நிலையில், சாமியாண்டி புதூரில் பள்ளி நடத்தும் கிருஷ்ணன் அமெரிக்காவில் வசிக்கிறார். இக்குடும்பத்துடன் வாலன்டைனுக்கு பழக்கம் ஏற்பட்டது. கிருஷ்ணனின் மகள்களுக்கு
அமெரிக்காவில் இந்து முறைப்படி நடந்த திருமணத்தைப் பார்த்த வாலன்டைனுக்கு, தானும் இந்து முறைப்படி திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது.
பிரிஜெட்டும் அதை ஆமோதித்தார். கடந்த 4 ஆண்டுகளாக இந்தியா வந்து செல்வதற்கான செலவுக்குத் தேவையான பணத்தை இருவரும் சேர்த்தனர். வாலன்டைன், பிரிஜெட், வாலன்டைனின் தங்கை ஆபி ஆகிய 3 பேரும் சாமியாண்டி புதூருக்கு வந்தனர். அங்கு கிருஷ்ணனிடம் இந்து முறைப்படி திருமணம் செய்ய உள்ளதைத் தெரிவித்தனர்.
வாலன்டைனை கிருஷ்ணன் அவரது மனைவி ஜெயந்தி ஆகியோர் தத்தெடுத்துக் கொண்டனர். பிரிஜெட்டை ஓரக்கலியூரைச் சேர்ந்த மற்றொரு கிருஷ்ணன், அவரது மனைவி கீதா ஆகியோர் தத்தெடுத்துக் கொண்டனர். இந்து முறைப்படி மணமகன் வாலன்டைன் பட்டு வேட்டி, சட்டையுடனும், மணமகள் பிரிஜெட் பட்டுப்புடவை, ஜாக்கெட்டுடனும் அமர்க்களப்படுத்தினர்.
இந்து திருமண வழக்கப்படி என்னென்ன சடங்குகள் உண்டோ, அனைத்தையும் முறைப்படி செய்து இருவரையும் தம்பதிகளாக்கினர், சாமியாண்டி புதூர் மக்கள். ஒவ்வொரு நிகழ்வையும் தம்பதியினருக்குப் புரியவைத்து அவற்றுக்கான காரண, காரியங்களையும் இருவருக்கும் விளக்கினர்.
மணமகளின் தந்தை கிருஷ்ணனின் மடியில் பிரிஜெட் அமர்ந்திருந்தார். வாலன்டைன் தாலி கட்டினார். வாலன்டைன் தங்கை ஆபி, பிரிஜெட்டின் கழுத்தில் 3 முடிச்சுகளைப் போட்டார். அம்மி மிதித்து அருந்ததி பார்த்தவுடன் வாலன்டைன் தனது மனைவி பிரிஜெட்டுக்கு காலில் மெட்டியையும் அணிவித்தார். புதுமணத் தம்பதிகளாக வாழ்வில் அடியெடுத்து வைத்த அமெரிக்கத் தம்பதிகளுக்கு அக்கிராமமே வாழ்த்துக் கூறியது.
தம்பதியர் கூறியது: இந்தியக் கலாசாரம் பற்றிக் கேள்விப்பட்டுள்ளோம். அமெரிக்காவில் 15 வயதுக்கு மேல் பெற்றோர் பிள்ளைகளை வீட்டை விட்டு வெளியேற்றிவிடுவார்கள். ஆனால் இங்கு கூட்டுக் குடும்பமாக வசித்து வருவது இந்தியாவின் மரியாதையை உயர்த்தியுள்ளது. இந்தியக் குடும்ப அமைப்பு மட்டுமல்ல, உணவுமுறையும் எங்களுக்குப் பிடிக்கும். இட்லி, பொங்கல் போன்றவை எங்களுக்கு மிகவும் பிடித்த காலை உணவுகள்!
இப்போது சொந்தமாகத் தொழில் செய்து வருகிறோம். சாமியாண்டி புதூரில் வந்து திருமணம் செய்து கொண்டுள்ளோம். அமெரிக்காவுக்குச் சென்றாலும் தாலி, மெட்டி ஆகியவற்றுடன்தான் இருப்போம். இந்தியத் தம்பதிகளைப் போல வாழ்வில் இணைந்திருப்போம்.
படங்கள்: வெங்கடேஸ்வரன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...