ஆர்யா?
""யாருக்குப் பிடிக்காது காதல்? காதல் பிடிக்காதவர்கள்தாம் யார்? காலத்தின் சூட்சும விரல் பிடித்து அலைந்த பூமியின் முதல் ஆணும், முதல் பெண்ணும் எந்தத் தருணத்தில் காதலை உணர்ந்திருப்பார்கள்? அந்தத் தருணம் ம


""யாருக்குப் பிடிக்காது காதல்? காதல் பிடிக்காதவர்கள்தாம் யார்? காலத்தின் சூட்சும விரல் பிடித்து அலைந்த பூமியின் முதல் ஆணும், முதல் பெண்ணும் எந்தத் தருணத்தில் காதலை உணர்ந்திருப்பார்கள்? அந்தத் தருணம் முதல் இதோ இந்த நேரம் வரை காதல் அப்படியேதான் இருக்கு. உலகத்தில் மாற்றம் காணாததும், மாற்ற முடியாததும் காதல்தான். கவிதையாக பேசுகிறார் இயக்குநர் மணிகண்டன். "சிக்கு புக்கு' படத்தின் இயக்குநர். இயக்குநர் (ஒளிப்பதிவாளர்) ஜீவாவின் மாணவர். "தாம் தூம்' மூலம் அவரின் இடத்தை
நிரப்பியவர்.
அதென்ன சிக்கு புக்கு?
லண்டனில் தொடங்கும் கதை. நம்ம காரைக்குடியில முடியுது. விதவிதமான மனிதர்கள், முகத்தை வருடி செல்லுகிற பயணக்காத்து. இதோட மனசுக்குப் பிடிச்சவங்க நம்ம பக்கத்துல இருந்தால் அந்தப் பயணம் எப்படி இருக்கும்? ஆர்யா, ஸ்ரேயா சந்திப்பு, முதல் காதல் உணர்வு, காதலைச் சொல்ல முற்படுவது...
எல்லாமே ரயிலில்தான் நடக்கிறது. ரயிலும் இதில் முக்கிய பாத்திரம் ஏற்றிருக்கு. வித்தியாசமான, புது காதல்ன்னு சொல்லல. ஆனா, எல்லா காதலர்களும் உணர்ந்த சில தருணங்களைப் பதிவு செய்திருக்கேன். "தாம் தூம்' படத்தை தயாரிச்ச மீடியா ஒன் குளோபல் நிறுவனமே இதையும் தயாரிப்பதால் முழு சுதந்திரம் இருந்துச்சு.
தமிழ் சினிமாவே ஆக்ஷனில் பரபரத்துக் கிடக்கும் போது, காதலை நம்பலாமா?
காதல்தான் நம்ம அடையாளம். எத்தனை காதல் கதைகளைக் கடந்து வந்திருக்கு நம்ம சினிமா. சொல்லாத காதல், சொன்ன காதல்ன்னு இங்கே மாத்தி மாத்தி எடுத்திக்கிட்டுதான் இருக்கோம். காதல் கதை எப்போ சலிப்பு கொடுத்திருக்கு? காதல் சினிமாக்கள்தான் நம்ம அடையாளம்னு சொல்ல கூடிய காலம் வரும். அந்த அளவுக்கு விதவிதமான காதல் கதைகள் இங்கு இருக்கு. மனித நாகரீகமே இங்கு காதலோடுதான் பிறந்திருக்கு.
ஆர்யாவையும் ஸ்ரேயாவையும் ஜோடி சேர்த்துட்டீங்களே?
"நான் கடவுளு'க்கு பின்னாடி ஆளே மாறிப் போயிட்டார். புதுசா புதுசா கதைகள் கேட்கிறார். எல்லா கதைகளிலும் பயணிக்கணும்னு அவருக்கு ஆசை இருக்கு. பண்பட்ட மனிதரா இருக்கார். கண்களில் கோபம் தெறிக்க ருத்ராட்சை மாலையுடன் அலைந்தவர் எப்படி இப்படி காதலாகி கனிந்து இருக்கார்ன்னு யோசனை வரும்.
காதலுடன் அலையுற கண்களில் சிலிர்க்க வைப்பார் ஸ்ரேயா. இன்னும் சொல்லப் போனால் ஸ்ரேயாவுக்கு நடிக்கிற இடங்களை இந்தச் சினிமா கொடுத்திருக்கு. எதையும் சாதாரணமா எடுத்துக்கிட்டு வாழ்ற ஆர்யாவும், எல்லாத்துக்கும் அர்த்தம், பொருத்தம் பார்க்குற ஸ்ரேயாவும் சந்திச்சா எப்படியிருக்கும் என்பதை கதையின் போக்கில் ஜாலியா சொல்லியிருக்கோம்.
"பருத்தி வீரன்', "சுப்பிரமணியபுரம்' சாயலில் இருபது கதைகள் வந்து விட்டன, கவனிச்சீங்களா?
கிராமத்து சினிமாதான் நம்ம ரூட். அதை விட்டுட்டு யாருக்கும் தெரியாத பாபா குகையைப் பத்தி படம் எடுக்க முடியாது. யார் யார் எதைப் பார்த்து வளர்ந்தாங்களோ அதைத்தான் படைப்பாக்க முடியும். ஆனால் ஒரு கதை ஜெயிச்சா, அதே சாயலில் படம் எடுக்கும் ஆள்களுக்கு இங்கே பஞ்சம் இல்லை.
"பருத்தி வீரனு'ம், "சுப்பிரமணியபுரமு'ம் நம்ம சினிமாவ சில சென்டி மீட்டர் உயர்த்தியிருக்கு. இந்தியாவுல தமிழ் சினிமாதான் உச்சத்துல இருக்குன்னு சினிமா தெரிஞ்சவங்க சொல்றாங்க. அந்த வார்த்தையை இன்னும் ஸ்ட்ராங்கா தூக்கி நிறுத்தணும். வெவ்வேறு கலாசாரங்களில் நாம பயணிக்க வேண்டிருக்கு. அதை விட்டுட்டு அருவா தூக்கிட்டு எத்தனை நாள் அலையுறது.
ஜீவா சாரின் ஆசீர்வாதம் இல்லாமல் முழுமையான முதல் சினிமா. எப்படியிருக்கு?
மனிதர்களை விட்டு என்றைக்கும் விலகி விடாதே; முழுமையான படைப்பாளி பெரிசா யோசிக்கணும்ன்னு அடிக்கடி சொல்லுவார். அவரின் அடிச்சுவட்டில்தான் படம் வந்திருக்கு. பெத்த குழந்தையைத் தாயிடம் காட்ட ஆசைப்படும் மகளின் ஏக்கம்போல மனசுக்குள்ள அப்படியே புதைஞ்சு இருக்குது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...