திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஆம்புலன்ஸ் மங்கை!

திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளத்தில், பிரதான சாலையில் எப்போதும் போக்குவரத்து பரபரப்பாகவே காணப்படும். நீலவிளக்கு சுழல சைரனுடன் அடிக்கடி தென்காசி மற்றும் கடையநல்லூர் பகுதிகளில் இருந்து திருநெல்வேலி நோக்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 8:39 am

திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளத்தில், பிரதான சாலையில் எப்போதும் போக்குவரத்து பரபரப்பாகவே காணப்படும். நீலவிளக்கு சுழல சைரனுடன் அடிக்கடி தென்காசி மற்றும் கடையநல்லூர் பகுதிகளில் இருந்து திருநெல்வேலி நோக்கி வரும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் வழக்கம் போல விரைந்து செல்லும்.

இதில், ஆலங்குளம் அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் சென்றால் மட்டும், சாலையோரம் செல்வோரின் கண்கள் ஒரு நொடி ஆச்சரியமாக விரியும். காரணம், அந்த ஆம்புலன்ûஸ ஓட்டி செல்லும் டிரைவர் ஒரு பெண்.

ஆணுக்கு சரிநிகர் சமமாகப் பெண்கள் எல்லாத் துறைகளிலும் சாதனை படைத்து வருகின்றனர். கார், ஆட்டோ, பஸ், விமானம் என பல, இலகுரக, கனரக வாகனங்கள் கூட ஓட்டுகிறார்கள் என்றாலும், ஆம்புலன்ஸ் என்பது அவசர காலத்தில் உயிர்காக்கும் உன்னத வாகனம். இதை இயக்குவது ஒரு சவாலான விஷயம்.

இந்த சவாலான தொழிலைத்தான், ஆலங்குளத்தில் ஒரு பெண் எதிர்கொள்கிறார்.

அவர், திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள சிங்கம்பாறையைச் சேர்ந்த ஜெனோவாபுஷ்பம். இவரது கணவர் ஜான்சன். ஏஞ்சலின் ஜெனிசா, ஆட்லின்மோனிஷா என்ற இரு மகள்களும் அலெக்ஸ்டேவிட் என்ற மகனும் உள்ளனர்.

இவரது தந்தை அல்பின்துரைராஜ் ஓய்வுபெற்ற ஆசிரியர். தாய் ஜெலின்லீலா ஓய்வுபெற்ற சத்துணவு அமைப்பாளர். முக்கூடல் த.பி.சொக்கலால் மேல்நிலைப் பள்ளியில் 12 ம் வகுப்பு வரை படித்துள்ள இவர், கலைகளிலும், விளையாட்டுகளிலும் ஆர்வம் கொண்டவர். இருப்பினும், டிரைவிங் மீது ஏற்பட்ட அதிகமான ஈர்ப்பினால், வாகனம் ஓட்ட கற்றுக் கொண்டு, தற்போது ஆலங்குளத்தில் அரசு ஆம்புலன்ûஸ ஓட்டுகிறார்.

ஆம்புலன்ஸ் ஓட்டுவது என்பது சவாலானதாயிற்றே... அதை எப்படி எதிர்கொள்கிறார் என்பது குறித்து அவர் கூறியதாவது:

""நான் சிறுவயது முதலே பைக், கார் ஆகியவற்றை ஓட்டிப்பார்க்க ஆசைப்படுவேன். அந்த ஆர்வத்தால் 12- ம் வகுப்பு முடித்தவுடன் 1999-ல் இலகுரக வாகனம் ஓட்ட உரிமம் பெற்றேன். திருமணத்திற்கு பிறகு, கனரக வாகனம் ஓட்டுவதற்கு 2002- ல் ஐஆர்டி மூலம் தேர்வாகி, திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழகத்தில் பயிற்சி எடுத்தேன்.

அப்போது பயிற்சி எடுத்ததில் நான் மட்டுமே பெண். பயிற்சி முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தேன். 2008-ல் எனக்கு இந்த ஆம்புலன்ஸில் பணியாற்றும் வேலை கிடைத்தது.

ஆம்புலன்ஸ் ஓட்டுவது என்பது சிரமமானதுதான். சில நிமிடங்கள் தாமதமானாலும், உயிரை காப்பாற்ற முடியாத நிலை ஏற்படும். அதோடு நாமும் பாதுகாப்பாக ஓட்ட வேண்டும். ரிஸ்க் அதிகம் என்றாலும் உயிர் காக்கும் பணி என்பதால், இதை மனநிறைவுடன் செய்து வருகிறேன்.

நான் எனது பெற்றோர், கணவர் மீதும் குழந்தைகள் மீதும் அதிகமாக பாசம் வைத்துள்ளேன். என்னைப் போலவே இந்த ஆம்புலன்ஸில் வரும் ஒவ்வொருவருக்கும் ஒரு குடும்பம் உண்டு என்பதை நினைக்கும்போது, சவாலான இந்த பணி எளிதாகிறது.

எனது பெற்றோர், எனது கணவர் மற்றும் குழந்தைகள் ஆகியோரின் முழு ஒத்துழைப்பால்தான் நான் முழுமையான மன நிறைவுடன் ஆம்புலன்ஸ் ஓட்டுகிறேன்.

வீட்டில் குழந்தைகளைக் காப்பதில் இருந்து, வீடு குறித்த எந்த கவலையும் ஏற்படாவண்ணம் பெற்றோர் மற்றும் கணவர் பார்த்துக் கொள்வதால், எந்த கவன சிதறலும் இன்றி ஆம்புலன்ûஸ சிறப்பாக ஓட்ட முடிகிறது.

அரசுத் துறை வாகனங்களில் டிரைவராக என்னைத் தவிர தமிழக அளவில் எந்த பெண்ணும் பணிபுரிவதாகத் தெரியவில்லை. எனவே, இத் துறைகளில் உள்ள வாய்ப்பை பயன்படுத்த பெண்கள் முன் வரவேண்டும் என்றார் அவர்.

ஆம், புதுமை செய்ய வந்த ஜெனோவாவை வாழ்த்துவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.