/

தெரியுமா?

சாதனைகளும் தூய்மையும் கொண்டாடும் செய்திகள்

News image
Updated On :23 மார்ச் 2024, 6:30 pm

கோட்டாறு கோலப்பன்

கைப்பேசி விற்பனையில் சாதனை புரிந்த நோக்கியா நிறுவனமானது டாய்லெட் பேப்பர் தயாரிப்பில் பிரபலம் பெற்றதாகும்.

பால்வீதி மண்டலத்திலேயே மிகக் குளிர்ச்சியான பகுதி பூமாராங் நெபுலா. அங்கு மைனஸ் 272 டிகிரி செல்சியஸ். ஹைட்ரஜனை உறையச் செய்யும் அளவுக்கு குளிர்நிறைந்த அந்தப் பகுதியானது புவியிலிருந்து 5 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.

ஈரான் பலகட்ட தோல்விகளுக்குப் பின்னர் சிமோர்க் எனும் ராக்கெட் வாயிலாக, மூன்று செயற்கைக்கோள்களை விண்ணுக்குச் செலுத்தியிருக்கிறது. இவை மக்டா, கேஹான் 2, ஹேட்வேர் என்று அழைக்கப்படுகின்றன.

சிறுத்தையானது பூனையைப் போன்றே ஒலி எழுப்பும்.

நாட்டின் மிகத் தூய்மையான நகரமாக, மத்திய பிரதேச மாநிலத்துக்கு உள்ள இந்தூர் ஏழாவது முறையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மத்திய அரசு ஆண்டுதோறும் வழங்கும் "ஸ்வச் சர்வேக்ஷன் விருது' வழங்கப்பட்டுள்ளது. இரண்டாவது நகரமாக குஜராத் மாநிலத்துக்கு உள்பட்ட சூரத்தும், மூன்றாவது நகரமாக மகாராஷ்டிர மாநிலத்துக்கு உள்பட்ட நவி மும்பையும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதேபோல், ஒரு லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நகரங்களுக்கு இடையே தூய்மையான நகரமாக சத்தீஷ்கரின் சஸ்வட் முதலிடத்தை பெற்றுள்ளது. அதே மாநிலத்தில் உள்ள படான், மகாராஷ்டிரத்தில் உள்ள லோனாவாலா ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. தூய்மையான நகரமாக உத்தரப் பிரதேசத்துக்கு உள்பட்ட வாரணாசி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் மூன்று ரக பாஸ்போர்ட்டுகள் உள்ளன. சாதாரண மக்களுக்கு நீலநிற பாஸ்போர்ட்டும், அரசோடு தொடர்புடைய அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுக்கு உத்தியோகப் பூர்வ பாஸ்போர்ட்டும் மெருன் நிறத்திலும் இருக்கும். குடியரசுத் தலைவர், துணைத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோருக்கு உச்சபட்ச சலுகை கொண்ட பாஸ்போர்ட்டும் வழங்கப்படுகின்றன.

இந்தியாவில் மொத்தம் 782 மாவட்டங்கள் உள்ளன.

இந்தியாவில் ஆதார் அட்டை முதலில் மகாராஷ்டிராவில் வழங்கப்பட்டது.

கட்டாயக் கல்வியை அறிமுகப்படுத்திய முதல் நாடு ஜெர்மனியாகும்.

தாய்லாந்தில் அரசர்- அரசி இருந்தாலும், நாடாளுமன்ற ஜனநாயக முறையிலேயே ஆட்சி நடைபெறுகிறது. இந்த நாட்டின் தலைநகரமான பாங்காங்கை "தேவதைகளின் நகரம்' என்றே அழைக்கின்றனர்.

நாட்டிலேயே முதல்முறையாக ஒடிஸ்ஸா புவனேசுவரத்தில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை மருந்து, ரத்தம் ஆகியவற்றை பிற சுகாதார மையங்களுக்கு அனுப்பிவைக்க ஏதுவாக ட்ரோன் சேவையை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, முதல் ட்ரோன் சேவை கோர்தா மாவட்டத்தில் உள்ள டாங்கி சுகாதார மையத்தில் இருந்து ரத்தம் அனுப்பிவைக்கப்பட்டது.

2024-25-ஆம் ஆண்டுக்கான யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் அங்கீகாரம் பெறுவதற்காக, இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள 12 கோட்டைகள் மத்திய அரசு சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அவை: சல்ஹேர் கோட்டை, ஷிவ்னேரிகோட்டை, லோகாட்கந்தேரிகோட்டை, ராய்காட், ராஜ்காட், பிரதாப்ôட், கவர்ணதுர்க், பன்ஹாலா கோட்டை, விஜய்துர்க், சிந்து துர்க். இவற்றோடு தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்துக்கு உள்பட்ட செஞ்சி கோட்டையும் இடம்பெறுகிறது.

போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள பணக்காரர்கள் பட்டியலில் எலான் மாஸ்க்கை பின்னுக்குத் தள்ளி பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த எல்.வி.எம்.எச். குழுமத் தலைவர் பெர்னார்ட் ஆர்னால்டு முதலிடம் பிடித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.