மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அங்கிள் ஆன்டெனா: வெயிலிலில் சிறிதுநேரம் இருந்துவிட்டு, நிழலுக்கு வரும்போது கண்கள் இருட்டுவது ஏன்?  

வெயிலிலில் சிறிதுநேரம் இருந்துவிட்டு, நிழலுக்கு வரும்போது கண்கள் இருட்டுவது ஏன்?  

News image
Updated On :24 டிசம்பர் 2022, 2:55 pm


வெயிலிலில் சிறிதுநேரம் இருந்துவிட்டு, நிழலுக்கு வரும்போது கண்கள் இருட்டுவது ஏன்?  

உடலிலின் எண்ணற்ற வியக்கத்தக்க விஷயங்களில் கண்களும் அவற்றால் பார்க்கக் கூடிய திறனும் ஒன்று.  பள்ளியில் கண்ணையும் காமிராவையும் ஒப்பிடுக? என்ற கேள்வியைப் படித்திருப்போம். உண்மையில் கண்கள் அதற்கும் மேலே நுணுக்கமான பணிகளைச் செய்கின்றன. 

ஒளி அலைகளாகத்தான் பரவுகிறது என்று நாம் அறிவோம்.  கண்ணில் கருவிழி என்று நாம் அழைக்கும் பகுதி உண்மையில் நிறமற்ற கார்னியா என்பதாகும். அதற்கு உட்புறம் ஐரிஸ்  என்னும் மெல்லிலிய சதைதான் கருப்பாக இருக்கும். அதன் நிறம்தான் வெளியே கருவிழியாகத் தெரிகிறது. அந்த ஐரிஸ் என்பது நடுவில் ஒரு துளையுடனும் சுருங்கி விரியும் தன்மையுடனும் இருக்கும். அந்தத் துளைதான் பாவை ஆகும். அதை ஒட்டி லென்ஸ் இருக்கும். 

பாவை வழியாக உள்ளே செல்லும் ஒளி அலைகள் லென்ஸின்  வழியாக ஒளிவிலகல் அடைந்து கண்ணின் கடைசிப் பாகமான விழித்திரையில் விழுகின்றன. அங்கிருக்கும் நரம்புகள் அந்த விளைவை மூளைக்குத் தெரிவிக்க, மூளை அதை உணரும். நாம் பார்க்கும் விஷயம் என்னவென்று நமக்குத் தெரியும். 

வெயிலிலில் அதிக வெளிச்சம் இருக்கும்போது அதிக ஒளி அலைகள் வரும். அவ்வாறு அதிகமாக வரும்போது ஐரிஸ் விரிந்து பாவையை சுருங்க வைக்கும். நிழலுக்கு அல்லது வெளிச்சம் குறைவான பகுதிக்கு வரும்போது ஐரிஸ் சுருங்கி பாவையை விரிய வைக்கும். அவ்வாறு கண்ணுக்குள் செல்லும் ஒளியின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும்.

திடீரென்று வெளிச்சத்திலிருந்து இருட்டிற்கோ, வெயிலிலில் இருந்து நிழலுக்கோ வரும்போது ஐரிஸ் விரிய எடுத்துக்கொள்ளும் ஒரு கணம் ஒளி போதாததால் லேசாக இருட்டும். 

அவ்வளவே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.