டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

விருந்தாளி

 வாங்க வாங்க வாங்கவென்று வரவேற்றாங்க...

News image
Updated On :3 ஜனவரி 2024, 1:15 pm

வசீகரன்

 வாங்க வாங்க வாங்கவென்று
 வரவேற்றாங்க...
 இருங்க இருங்க இருங்கஎன்று
 அரவணைச்சாங்க...
 
 தங்கள் வரவு நல்வரவு
 என்று மகிழ்ந்தாங்க...
 குடிக்க மோரு கொடுத்துஉள்ளம்
 குளிரவச்சாங்க...
 
 ஆசை அன்பு காட்டிப் பேசி
 உளம் மகிழ்ந்தாங்க
 அடிக்கடி வரணும்என்று செல்ல
 அதட்டல் போட்டாங்க...
 
 உண்டு மகிழ பத்துவகை
 பண்ணி வச்சாங்க
 உண்ண உண்ண உண்ணச்சொல்லி
 ஊட்டிமகிழ்ந்தாங்க...
 
 பிரிய மனமின்றி அன்புவழிய
 அனுப்பி வச்சாங்க
 அடுத்தவிருந்துக்கு யாருனு அம்மா
 காத்திருக்காங்க...!

 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.