ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சுவை அதிகரிக்க...

கேசரி செய்யும்போது இரண்டு எலுமிச்சம் பழத்தைப் பொடிப் பொடியாக நறுக்கிப் போட்டால், கேசரியின் சுவை கூடுதலாக இருக்கும்.

பீட்ரூட்

Published On :21 ஜூன் 2026, 4:00 am IST

அமுதா அசோக்ராஜா

கேசரி செய்யும்போது இரண்டு எலுமிச்சம் பழத்தைப் பொடிப் பொடியாக நறுக்கிப் போட்டால், கேசரியின் சுவை கூடுதலாக இருக்கும்.

கிரேவி செய்யும்போது தக்காளியுடன் சிறிது பீட்ரூட்டையும் சேர்த்து அரைத்து கொதிக்கும் கிரேவியில் ஊற்றினால், கிரேவி திக்காகவும், சுவையாகவும் இருக்கும்.

தேன் குழல் செய்யும்போது, அதனுடன் வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்துக் கலந்தால், அது மிகவும் சுவையாக இருக்கும்.

எலுமிச்சைச் சாதம் செய்யும்போது, சிறிது வெந்தயத்தை வறுத்துப் பொடித்துக் கலந்தால் சாதம் ருசியாகவும், மணமாகவும் இருக்கும்.

வெண்டைக்காயை எண்ணெய்யில் வதக்கிப் பின்னர் குழம்பில் சேர்த்தால் பிசுபிசுப்பின்றி குழம்பு சுவையாக இருக்கும்.

புளிக்குழம்பு நல்ல வாசனையாக இருக்க, நல்லெண்ணெய்யை கொஞ்சம் அதிகமாகச் சேர்க்க வேண்டும்.

இடியாப்பம் மென்மையாக இருக்க, அரிசி மாவில் சிறிது தேங்காய்ப் பால் சேர்த்துப் பிசைய வேண்டும்.

இரவு ஒரு தேக்கரண்டி ஓமத்தைத் தண்ணீரில் போட்டு காலையில் அதை வடிகட்டி ஒரு தேக்கரண்டி தேன் கலந்து குடித்தால், உடல் பருமன் குறையும்.

காலை உணவைத் தாமதமாகச் சாப்பிடக் கூடாது. சரியான நேரத்துக்குச் சாப்பிடுவதே உடல்நலத்துக்கு நல்லது.

காலையில் வெறும் வயிற்றில் பேரீச்சம் பழம் சாப்பிட்டால், சுறுசுறுப்பாக இருக்கலாம்.

உணவுக்கு முன்பாக பழங்கள் சாப்பிடுவது செரிமானத்துக்கு நல்லது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.