ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பிறந்த நாள் பரிசாக மரக்கன்றுகள்...

'பசுமைமிகு பூமி உருவாகவேண்டும்.

Published On :26 ஜூலை 2026, 4:05 am IST

சி. சுரேஷ்குமார்

'பசுமைமிகு பூமி உருவாகவேண்டும். இதற்காக தொலைநோக்குத் திட்டம் கொண்டு செயல்பட்டு வருகிறேன்'' என்கிறார் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் பிளஸ் 2 மாணவி வின்னி.

இவர் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்பட்ட நித்திரவிளையை அடுத்த சின்னத்துறை கிராமத்தைச் சேர்ந்த மனிதவள நிபுணர் பி. ஜஸ்டின் ஆன்றணி - ஹோலி கிராஸ் கல்லூரியில் கணினி அறிவியல் துறைப் பேராசிரியை நிகிதா தம்பதியரின் மகள். களியக்காவிளை அருகேயுள்ள கொற்றாமம் பாத்திமா பப்ளிக் பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் மாணவி வின்னி கூறியது:

'ஐ.நா. சபையின் உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, எனது தந்தை மரக்கன்றுகள் நடுவதைப் பார்த்தேன். இதேபோன்ற சேவையைச் செய்ய வேண்டும் என்ற உந்துதல் எனக்கு ஏற்பட்டது. மாணவர்கள் தங்கள் பிறந்த நாளின்போது விலை உயர்ந்த பரிசுகள் வாங்குவதற்காகவும், கொண்டாட்டங்களுக்காகவும் பெரும் தொகையைச் செலவிடுகிறார்கள். ஏழை மாணவர்களும்கூட கடன் வாங்கி பிறந்த நாள்களைக் கொண்டாடுகின்றனர்.

இதற்கு மாற்றாக, பிறந்த நாள் விழாக்களில் மரக்கன்றுகளைப் பரிசளிப்பது எனச் செயல்பட்டு வருகிறேன். எனது தோழிகள் பலரும் இதைப் பின்பற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது செயல்பாடுகளுக்கு பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்களின் ஊக்கமும் உள்ளது. ஏ.பி.ஜெ. அப்துல் கலாம், அன்னை தெரசா, "ஆப்பிரிக்க ஜோதி' நெல்சன் மண்டேலா போன்றோரின் வாழ்வு எனக்கு மாபெரும் தூண்டுகோலாக அமைந்துள்ளது'' என்கிறார் மாணவி வின்னி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.