எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மெட்டை இசைத்தால்... பாடலைக் கண்டுபிடிக்கலாம்!

மனதில் ஒலிக்கும் பாடலின் மெட்டை வைத்து அந்த பாடலின் வரியைக் கண்டுபிடிக்க முடியாமல் பலர்   சிரமப்பட்டிருப்பார்கள். 

News image
Updated On :27 அக்டோபர் 2020, 12:30 am


மனதில் ஒலிக்கும் பாடலின் மெட்டை வைத்து அந்த பாடலின் வரியைக் கண்டுபிடிக்க முடியாமல் பலர்   சிரமப்பட்டிருப்பார்கள். 
பாடலின் வரியைத் தேடினால்தான் அதை வைத்து பாடலைக் கண்டுபிடித்துக் கேட்க முடியும் என்பதால் பாடல் பிரியர்களுக்கு இது ஒரு பெரும் சவாலாகவே இருந்தது. 
பெரும்பாலும்  அறிதிறன்பேசிகளை   பாடல்களைக் கேட்கத்தான் பலர் பயன்படுத்துகின்றனர்.
அதிலும் பல விதமான பாடல்களைச் சேமித்து வைத்து நேரத்துக்கு ஏற்ப பொழுதைக் கழித்து மனதை  அமைதிப்படுத்தவும் செய்கின்றனர். அதிலும், உள்மனதில் ஒலிக்கும் சில பாடல்களை இணையதளத்தில் தேடுவதற்கு பாடல் வரியைத் தேடி குழம்பிக் கொண்டிருப்பார்கள். இப்படி குழம்பிக் கொண்டிருப்பவர்களுக்கு கூகுள் நிறுவனம் புதிய சேவையைத் தொடக்கி உள்ளது. 
கட்டளையிட்டால் தேடலைத் தொடங்கும் "கூகுள் வாய்ஸ் சர்ச்'சைப் போன்று பாட்டின் மெட்டை வாயால் இசைத்தோ, விசில் அடித்தோ 10 முதல் 15 வினாடிகளுக்குப் பாடினால் போதும், கூகுள் அந்தப் பாட்டைத் தேடிக்  கண்டுபிடித்து உங்கள் அறிதிறன்பேசியில் கொண்டு வந்து நிறுத்திவிடும்.
இந்தச் சேவையைப் பெற முதலில் உங்கள் அறிதிறன்பேசியில் உள்ள கூகுளை "லேடஸ்ட் வெர்ஷ'னுக்கு அப்டேட் செய்து கொள்ள வேண்டும். பின்னர் கூகுள் தேடலில் உள்ள "மைக்ரோபோன்'-ஐ  தட்டி நீங்கள் தேட விரும்பும் பாடலின் மெட்டை இசைக்க வேண்டும்.
"கூகுள் அஸிஸ்டன்' செயலியைப் பயன்படுத்துவராக இருந்தால் "ஹே கூகுள் வாட்ஸ்திஸ் சாங்க்' என்று கூறிவிட்டு பாட்டின் மெட்டை இசைத்தால் அந்த மெட்டுக்கு உள்ள பாட்டுகளைக் கூகுள் காண்பிக்கும். அதில் இருந்து உங்களின் மனதில் ஒலித்த பாட்டைத் தேர்ந்தெடுத்துவிடலாம். 
இந்தச் சேவை  கூகுளின் பிரத்யேக அறிதிறன்பேசியான பிக்ஸலில் ஏற்கெனவே அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது. 
எனினும், தற்போது உலகம் முழுவதும் பயன்படுத்தும் கூகுள் தேடலில் இந்தச் சேவையை கூகுள் அளித்துள்ளது. 
முதலில் 20 மொழிகளில் இந்தச் சேவையைத் தொடங்கியுள்ள கூகுள் விரைவில் பல மொழிகளை இணைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.