உலகம் முழுவதும் மனிதர்களைக் கண்டு மனிதர்களையே அஞ்ச வைக்கும் கரோனா தொற்று பூதத்தை தடுப்பூசி எனும் புட்டிக்குள் அடைக்க ஆராய்ச்சியாளர்களும், மருத்துவர்களும் இரவும் பகலுமாகப் போராடி வருகின்றனர்.
ஆனாலும், முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைப் பின்பற்றாமலும் வெளியே நட
மாடும் மக்களை கரோனா தொற்று எளிதில் பற்றிக் கொள்கிறது. சிலரது அலட்சியமான செயல்பாட்டால் பலருக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.
கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் கூட்ட நெரிசல் உள்ள பகுதிகள் எவையென மக்களுக்கு எச்சரிக்கும் புதிய சேவையைத் தொடங்கி உள்ளது.
தற்போது விடுமுறை நாள்கள் வர உள்ளதால், ஒருவர் புதிய இடத்துக்குச் செல்ல திட்டமிட்டால், அந்த இடத்தின் கடந்த ஒரு வாரகால கரோனா பாதிப்பின்
நிலவரம், உள்ளூர் நிர்வாகம் அமல்
படுத்தியுள்ள கட்டுப்பாடுகள் குறித்தும் பேருந்து, ரயில்களில் நிலவும் கூட்ட நெரிசலின் தற்போதைய நிலவரம், நடந்து சென்றால் சாலை சந்திப்புகளில் நிலவும் கூட்ட நெரிசல் குறித்தும் "கூகுள் மேப்'பில் எச்சரிக்கை அளிக்கப்படுகிறது.
இந்தத் தகவல்களை உலகம் முழுவதும் பயன்படுத்தும் கூகுள் பயன்பாட்டாளர்களே அவ்வப்போது தகவல் மேம்பாடு செய்வார்கள் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேபோல், உணவுப் பொருளை ஆன் லைனில் பதிவு செய்துவிட்டதும், அந்தப் பொருள் எங்கிருந்து, எப்போது கிளம்பியது என்பது முதல் எவ்வளவு நேரத்தில் எப்போது வந்து சேரும், எவ்வளவு பணம் அளிக்க வேண்டும் என்பன போன்ற தகவல்களை இனி கூகுள் மேப்பிலேயே நொடிக்கு நொடி தெரிந்து கொள்ளும் சேவையையும் கூகுள் அறிமுகம் செய்துள்ளது.
மேலும், கார்களை ஓட்டுபவர்கள் தங்களுக்கு வரும் செல்லிடப்பேசி அழைப்புகள், குறுந்தகவல்களை ஒலி வடிவில் தெரிவித்து அதற்கு பதிலளிக்கும் புதிய சேவையான "கூகுள் அசிஸ்டன்ட் டிரைவிங் மோட்' என்ற புதிய சேவையையும் கூகுள் அறிமுகம் செய்துள்ளது.
கரோனா பரவல் தொடங்கியதில் இருந்து "கூகுள் மேப்'பில் சுமார் 250 புதிய சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

2021 தேர்தலில் பல வித்தைகள் காட்டிய நோட்டா! இந்த முறை?

தனுஷ் இயக்கத்தில் நடிக்கும் மிருணாள் தாக்குர்!
வென்று வா தலைவா... தவெக தலைவர் விஜய்க்கு நடிகர் சிபி சத்யராஜ் கடிதம்!

ஜெயிலர் - 2 படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டி கொண்டாட்டம்!
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை


