திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பார்க்கிங் பணியில் ரோபோ!

இன்றைய காலச்சூழலில், பரபரப்பான நகரச் சாலைகளில் சொந்த காரை இயக்குபவர்களின் ரத்த அழுத்தம்  நிச்சயம் அதிகமாகத்தான் இருக்கும்.

News image
Updated On :26 மார்ச் 2019, 9:11 am

இன்றைய காலச்சூழலில், பரபரப்பான நகரச் சாலைகளில் சொந்த காரை இயக்குபவர்களின் ரத்த அழுத்தம்  நிச்சயம் அதிகமாகத்தான் இருக்கும்.

போக்குவரத்து நெரிசலில் சிக்கி, கடைசி நேரத்தில் ரயில், விமான நிலையங்களுக்கு சென்றடைபவர்களின் நிலையோ பரிதாபம். இதில் காரை, வாகன நிறுத்தத்தில் சரியாக நிறுத்திவிட்டு விட்டு உரிய நேரத்தில் ரயிலை, விமானத்தைப் பிடிப்பது என்பது சவாலாகவே இருக்கிறது. அப்படி நிறுத்திய காரை திரும்பி வந்து எந்த இடத்தில் நிறுத்தினோம் என்று ஞாபகத்துடன்  தேடிக் 
கண்டுபிடித்து எடுப்பதும் பெரும் கஷ்டம்தான்.

மனிதர்களின் இந்தப் பிரச்னைகளை "வாகனம் நிறுத்தும் ரோபோ' தீர்த்து வைக்கிறது. பிரான்ஸில் உள்ள "லியான் செயின்ட் எக்ஸ்பியுரி' விமான நிலையத்
தில் கார்களைப் பார்க்கிங் செய்யும் பணியில் ரோபோ நியமிக்கப்பட்டுள்ளது.

ஸ்டான்லி நிறுவனம் தயாரித்துள்ள இந்த ரோபோக்கள் பார்ப்பதற்கு சிறு காரைப்போலவே இருக்கின்றன.  விமான நிலையங்களுக்கு வரும் பயணிகள் தங்கள் கார்களைப் பிரத்யேக மையத்தில் நிறுத்திவிட்டுச் சென்றால் போதும். அந்த மையத்துக்குச் செல்லும் பார்க்கிங் ரோபோ, அந்த காரை  அப்படியே   எடுத்துக் கொண்டு  ஏராளமான வாகனங்களை நிறுத்தும் இடத்துக்கு கொண்டு சென்று நிறுத்திவிடுகிறது.

அந்தப் பயணி திரும்பும் நாளை டிக்கெட் மூலம் அறிந்து கொள்ளும் ரோபோ, மீண்டும் அவரது காரை வாகன நிறுத்தும் மையத்தில் இருந்து எடுத்து அவர் காரை விட்டுச் சென்ற இடத்தில்  வைத்துவிடும்.

இதனால் பயணிகள் எந்தவிதடென்ஷனும் இல்லாமல் வாகனங்களை நிறுத்திவிட்டு, பின்னர் எடுத்துச் செல்லலாம். தற்போது சுமார் 500 கார்களை நிறுத்தும் வகையில் பார்க்கிங் ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனை 6,000 கார்களுக்கு விரிவாக்கம் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக பார்கிங் ரோபோக்களை உருவாக்கி வரும் ஸ்டான்லி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரோபோக்களே வாகனங்களை  இயக்கி வரும் இன்றைய காலகட்டத்தில், இந்த பார்க்கிங் ரோபோக்கள் பயணிகளின் சுமையைக் குறைத்தால்வரவேற்கக் கூடியதே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.