மனிதர்களின் அன்றாடப் பணிகளைக் குறைக்க விஞ்ஞான வளர்ச்சியின் மூலம் ரோபோக்கள் உருவாக்கப்பட்டன. இதன் அடுத்தகட்ட தொழில்நுட்ப வளர்ச்சியாக ஆளில்லா குட்டி விமானங்கள் எனப்படும் ட்ரோன்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
முதலில் விளையாட்டுப் பொருளாக வலம்வந்த இந்த ட்ரோன்கள் தற்போது பறந்து பறந்து மனிதர்களுக்குப் பணியாற்றத் தொடங்கிவிட்டன.
ராணுவத்தில் பயன்படுத்தப்பட்ட ட்ரோன்கள், பின்னர் திரைப்படங்களில் "ஏரியல் வீவ்' காட்சிகள் முதல் பறந்து பின்தொடரும் காட்சிகள் வரை எடுக்க பயன்படுத்தப்படுகின்றன.
தற்போது இந்த ட்ரோன்கள் வீட்டின் பாதுகாவலராகவும் பணியாற்றத் தொடங்கிவிட்டன. சான்பிரான்சிஸ்கோவில் உள்ள ஸ்டார்ட் ஆப் நிறுவனமான சன்பிளவர், வீட்டிற்கு வெளியே இந்த ட்ரோனை மறைந்திருக்கும் பாதுகாவலர்களாக உருவாக்கியுள்ளது.
வீட்டின் கேட்டைத் திறந்து யாராவது உள்ளே நுழைந்துவிட்டால், அவரின் அசைவு, சப்தத்தைக் கேட்டவுடன் இந்த ட்ரோன் விழித்துக் கொள்ளும். வீட்டின் வளாகத்தில் நுழைந்தது மனிதரா அல்லது விலங்கா என்பதை சென்சார்கள் மூலம் துல்லியமாகக் கண்டுபிடித்து, வீட்டின் முதலாளியின் செல்லிடப்பேசி ஆப்பிற்கு எச்சரிக்கையை அனுப்பும். பின்னர் உடனடியாக வீட்டிற்குள் நுழைந்த நபரைத் துரத்திச் சென்று 20 அடி உயரத்தில் வட்டமிட்டு அவரது அசைவுகளை நேரடியாக படம்பிடித்து முதலாளிக்கு காண்பிக்கும்.
வீட்டில் நுழைந்தவர் நண்பரா, பகைவரா என்பதை வெளியே இருந்தபடியே வீட்டின் முதலாளி தெரிந்து கொள்ளலாம். வீட்டிற்கு இந்த ட்ரோன் பாதுகாப்புக்கு அளிக்க அந்த நிறுவனம் மாதம் சுமார் ரூ. 21 ஆயிரத்தை ஊதியமாக நிர்ணயம் செய்துள்ளது. வீட்டின் பாதுகாப்புக்காக நாய் வளர்த்த காலம்போய், மறைந்திருக்கும் பாதுகாவலாளியான ட்ரோனை நியமிக்கும் காலத்துக்கு நாம் வந்துள்ளோம். வீட்டிற்குள் நுழைய முதலாளியின் அனுமதியைப் பெறுவதற்கு முன் ட்ரோன்களின் அனுமதியைப் பெறும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றே கூறலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சட்டப்பேரவைத் தேர்தல்! புதுவை மதுக்கடைகளில் அலைமோதிய மது பிரியர்கள்!

கோடை விடுமுறைக்கு லண்டன் சென்ற நடிகை மதுமிதா!

போஸ் வெங்கட் நடிக்கும் புதிய இணையத் தொடர்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வழியைப் பயன்படுத்தத் தடை நீட்டிப்பு!
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு


