திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வாட்ஸ் ஆப்... புதிய சேவைகள்!

பயனாளிகளின் தேவைக்கு ஏற்ப பல்வேறு மாற்றங்களை வாட்ஸ் ஆப் கொண்டு வருகிறது. தற்போது பயன்பாட்டாளர்களுக்கு மேலும் பாதுகாப்பு அம்சத்தை அதிகரிக்க அந்த நிறுவனம் புதிய முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

News image
Updated On :30 அக்டோபர் 2018, 9:13 am

பயனாளிகளின் தேவைக்கு ஏற்ப பல்வேறு மாற்றங்களை வாட்ஸ் ஆப் கொண்டு வருகிறது. தற்போது பயன்பாட்டாளர்களுக்கு மேலும் பாதுகாப்பு அம்சத்தை அதிகரிக்க அந்த நிறுவனம் புதிய முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

கைரேகை, முகபாவம் ஆகியவற்றைப் பதிவு செய்து ஸ்மார்ட் போன்களுக்குள்ளே நுழைகிறோமோ, அதுபோல வாட்ஸ் ஆப்பிலும் நுழைய இந்த பாதுகாப்பு அம்சம் கொண்டு வரப்பட உள்ளது.

இந்த புதிய முறைப்படி, வாட்ஸ் ஆப்பிற்குள் நுழைய முதலில் கைரேகை, முகபாவம் ஆகியவற்றைப் பதிவு செய்யும்படி கேட்கும். இது ஒத்து போகவில்லை என்றால், பாஸ்கோட் எனும் ரகசிய எண்களைப் பதிவு செய்ய வாட்ஸ் ஆப் கேட்கும். அதன் பிறகுதான் நமது வாட்ஸ் ஆப்பைப் பயன்படுத்த முடியும். இதன் மூலம் ஒருவரின் வாட்ஸ் ஆப் பயன்பாட்டை மேலும் பாதுகாப்பானதாக மாற்ற முடியும். இந்த புதிய வசதி ஐ போன்களுக்கு வந்துவிட்டதாகவும், ஆன்ட்ராய்ட் போன்களுக்கு அடுத்த கட்டமாக வரும் என்றும் கூறப்படுகிறது.

இதேபோல், வாட்ஸ் ஆப்பில் ஒருவருக்கு தவறுதலாக அனுப்பப்பட்ட தகவலை டெலிட் செய்யும் வசதிக்கு அளிக்கப்பட்டிருந்த அவகாசம் 13 மணி 8 நிமிடம் 16 நொடிகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்பு இந்த அவகாசம் ஒரு மணி 8 நிமிடம் 16 நொடிகளாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த அவகாசத்திற்குள் தகவல் பெறப்பட்டவர் அந்தத் தகவலை டவுன்லோடு செய்து பார்த்துவிட்டால் எதுவும் செய்ய இயலாது. 

மேலும், தேவையற்ற குழுக்களில் இருந்து வரும் தகவல்களை நாம் "மியூட்' செய்து வைப்பதுண்டு. ஆனாலும் அந்தத் தகவல்கள் வாட்ஸ் ஆப் முன்பகுதி (நோட்டிபிகேஷன்) திரையில் சத்தமில்லாமல் வெளியாகும். இதைத் தடுக்கும் வகையில் "வெகேஷன் மோட்' எனும் புதிய சேவையை வாட்ஸ் ஆப் அறிமுகம் செய்ய உள்ளது. இதன் மூலம் "மியூட்' செய்யப்பட்ட குழுக்களின் தகவல்களின் வரவைக் காண்பிக்காது. மேலும் வாட்ஸ் ஆப் கணக்குகளை இன்ஸ்டாகிராமுடன் இணைக்கும் புதிய சேவைக்கான முயற்சியும் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.