வன்பொருள்களை (ஹார்ட்வேர்) அடிப்படையாக வைத்து ஸ்மார்ட் போன்களை முன்பு மக்கள் வாங்கி வந்தனர். ஆனால், தற்போது துல்லியமாகப் புகைப்படம் எடுக்கும் கேமராக்களைக் கொண்ட ஸ்மார்ட் போன்களைத்தான் இன்றைய இளைஞர்கள் அதிகமாக விரும்பி வாங்குகிறார்கள்.
அதிக மெகா பிக்ஸல்களைக் கொண்ட கேமராக்களில் எடுக்கப்படும் புகைப்படங்களை அழகுபடுத்த ஆப்களும் உண்டு. இது ஒருவரின் முகத் தோற்றத்தையே மாற்றிவிடுகிறது.
ஆனால், இவை அனைத்தும் பகலில் - வெளிச்சத்தில் - எடுக்கப்படும் புகைப்படங்களில்தான் செய்ய முடியும். ஆனால், இரவில் -குறைந்த வெளிச்சத்தில் - எடுக்கப்படும் புகைப்படங்களோ மங்கலாகவும், இருள் சூழ்ந்ததாகவும் இருக்கும்.
நீண்ட காலமாக நிலவி வரும் இந்தப் பிரச்னைக்கு கூகுள் நிறுவனம் தீர்வு கண்டுள்ளது. அந்த நிறுவனத்தின் ஸ்மார்ட் போன் "பிக்ஸல்' கேமராவில் "நைட் சைட்' எனும் புதிய கூகுள் ஆப்பை பதவிறக்கம் செய்தால் போதும். பின்னர் குறைந்த வெளிச்சத்தில் புகைப்படம் எடுத்தாலும், அவை பகல் நேரத்தில் எடுத்ததைப் போலவே இருக்கும்.
இந்தச் செயலியைப் பயன்படுத்தி புகைப்படத்தை எடுக்கும்போது மட்டும் சிறிது நேரம் கேமராவை அசைக்காமல் வைத்திருக்க வேண்டும். அப்போது, இருள் சூழ்ந்த இடங்களில் எல்லாம் அதிகப்படியான வெளிச்சத்துடன் புகைப்படம் பதிவாகிறது.
இதன் காரணமாக, குறைந்த வெளிச்சத்தில் எடுக்கப்பட்ட புகைப்படமும் தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இந்த வசதியை முன்பக்க செல்ஃபி கேமராவில் பயன்படுத்தலாம். நைட் சைட்டில் எடுக்கப்பட்ட பகல் நேர வெளிச்ச புகைப்படங்களோ இன்னும் தெளிவாகக் காணப்படுகின்றன. இந்தச் செயலி, ஸ்மார்ட் போன் கேமரா புகைப்படங்களை அடுத்தகட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளது என்றே கூறலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திலக் வர்மாவிடம் பேசியது என்ன? ஹார்திக் பாண்டியா விளக்கம்!
சட்டப்பேரவைத் தேர்தல்! புதுவை மதுக்கடைகளில் அலைமோதிய மது பிரியர்கள்!

கோடை விடுமுறைக்கு லண்டன் சென்ற நடிகை மதுமிதா!

போஸ் வெங்கட் நடிக்கும் புதிய இணையத் தொடர்!
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு


