சிறு தொழில், நடுத்தரத் தொழில் நிறுவனங்களை நடத்துபவர்கள் அவர்கள் உற்பத்தி செய்யும் பொருள்கள் தரமானவைதானா? என்பதைத் சோதித்து அறிவது மிகவும் முக்கியம். அவ்வாறு சோதித்தறிய மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இந்தியாவில் 4 முக்கிய மாநகரங்களில் பரிசோதனைக் கூடங்கள் (Testing Center) ஏற்படுத்தப்பட்டுள்ளன.
சென்னை, கொல்கத்தா, மும்பை மற்றும் புதுதில்லி ஆகிய இடங்களில் பரிசோதனைக் கூடங்கள் அமைந்துள்ளன. இந்தப் பரிசோதனைக் கூடங்கள் பரிசோதனைக்கான தேசிய மதிப்பீடு ஆணையத்தின் அங்கீகாரம் பெற்றுள்ளன. சென்னை கிண்டியில் உள்ள இந்த பரிசோதனைக் கூடத்தில் தென் மாநிலங்களில் உள்ள தொழில் நிறுவனங்கள் தங்கள் பொருள்களைப் பரிசோதனை செய்து கொள்ளலாம்.
இந்த பரிசோதனைக் கூடங்களில் உற்பத்திக்கான மூல பொருள்கள், உற்பத்தி செய்யப்பட்ட இறுதிப் பொருள்கள் ஆகியவற்றைப் பரிசோதனை செய்து அவற்றின் தரம் குறித்து அறிக்கை அளிக்கப்படுகிறது. இந்த பரிசோதனைக் கூடங்களில் மெக்கானிகல், உலோகவியல், எலக்ட்ரிக்கல், ரசாயனம், ஆகிய நான்கு முக்கிய துறை சார்ந்த பொருள்கள் பரிசோதனை செய்யப்படுகின்றன. அதாவது இயந்திரங்கள் சம்பந்தமான, இரும்பு, அலுமினியம், ஸ்டீல், பைப்புகள், வார்ப்படங்கள் ஆகியவை சம்பந்தமாகவும், மின்சார சாதங்களான மீட்டர்கள், ஒயர்கள் சம்பந்தமாகவும், பெயின்ட், சோப் உள்ளிட்ட ரசாயனம் சம்பந்தப்பட்ட பொருள்களையும், கட்டடங்கள் சம்பந்தமான சிமென்ட், கம்பிகள், டைல்ஸ், கதவுகள், ஜன்னல்கள், ஏற்றுமதிக்கான உணவுப் பொருட்களான சர்க்கரை, பால் பவுடர், புகையிலை, உபயோக பொருள்களான நான்ஸ்டிக் தவா, பால் கேன், எஸ்.எஸ். சிங்க், குடிநீர், நீச்சல்குள நீர், சுத்திகரிப்பு செய்யப்படும் கழிவுநீர் ஆகியவற்றைப் பரிசோதனை செய்து அதனுடைய தரத்தை மதிப்பீடு செய்து அறிக்கை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.
இதில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பரிசோதனை செய்வதற்கான சலுகைக் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. இங்கு பரிசோதனை செய்யப்பட்டு நல்ல தர மதிப்பீடு பெற்ற பொருள்கள், தரமான பொருள்கள் என அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. சென்னையில் உள்ள பரிசோதனைக் கூடத்தில் பொருள்களை
பரிசோதனை செய்து தர மதிப்பீடு செய்ய அணுக வேண்டிய முகவரி :
இயக்குநர், எம்.எஸ்.எம்.இ. டெஸ்டிங் சென்டர்,
எண்:651, ஜி.எஸ்.டி. ரோடு, கிண்டி, சென்னை - 600 032.
தொலைபேசி எண்கள் : 044 - 22500634, 044- 22500539.
இணையதள முகவரி : http:msmetc.com
இ-மெயில்: dctc-sr@dcmsme.gov.in
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மகரம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மிதுனம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மேஷம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - விருச்சிகம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


