75 சதவீத மானியம்!
தொழில் நிறுவனங்கள் தங்களுடைய தரத்தை எடுத்துக் காட்டும் வகையில் பெறப்படும் ஐஎஸ்ஓ 9000 14001 தரச்சான்று பெறுவதற்காக செலவழிக்கப்படும் தொகையில் 75 சதவீதத்தை மானியமாக மத்திய அரசு வழங்குகிறது.


தொழில் நிறுவனங்கள் தங்களுடைய தரத்தை எடுத்துக் காட்டும் வகையில் பெறப்படும் ஐஎஸ்ஓ 9000 14001 தரச்சான்று பெறுவதற்காக செலவழிக்கப்படும் தொகையில் 75 சதவீதத்தை மானியமாக மத்திய அரசு வழங்குகிறது.
தொழில் நிறுவனங்கள் தங்களுடைய நிறுவனங்கள் சிறந்த தர மேலாண்மை முறைக்காக ஐஎஸ்ஓ 9000 தரச்சான்று மற்றும் சிறந்த சுற்றுச்சூழல் தர மேலாண்மை முறைக்காக 14001 தரச்சான்று பெறுவதற்காக செலவழிக்கப்படும் தொகையில் 75 சதவீதத்தை அல்லது அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் இதில் எது குறைவோ, அந்த தொகையை மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டு நிலையம் மூலமாக வழங்கப்படுகிறது.
இதற்கான நிபந்தனைகள் :
ஐஎஸ்ஓ தரச்சான்று வழங்கும் அமைப்பு இந்திய அரசின் தரக்கட்டுப்பாட்டு அமைப்பில் முறையாகப் பதிவு செய்திருக்க வேண்டும். அதே போல தரச்சான்று பெறுவதற்காக அத்தொழில் நிறுவனங்களுக்கு ஆலோசகராக இருப்பவர் இந்திய அரசின் தரக்கட்டுப்பாட்டு அமைப்பில் முறையாகப் பதிவு செய்திருக்க வேண்டும். தரச்சான்று பெற விரும்பும் விண்ணப்பதாரர், விண்ணப்பிக்கும் தேதியில் குறு, சிறு தொழில் நிறுவனங்களை நடத்துவதற்கான பதிவுச் சான்றிதழைப் பெற்றிருப்பவராக இருக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் 2015-2016 ஆம் ஆண்டிற்கு ஐஎஸ்ஓ தரச்சான்று மானியம் வழங்குவதற்காக ரூ.42 இலட்சம் நிதி சென்னையில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டு நிலையத்திற்கு மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. அதில் பொதுப் பிரிவுக்கு ரூ.35 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் ரூ.17 இலட்சம் இதுவரை பயன்படுத்தப்பட்டுள்ளது. ரூ.7 இலட்சம் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மீதமுள்ள நிதிக்கு இதுவரை எந்த விண்ணப்பமும் வரவில்லையென கூறப்படுகிறது. அதனால் ஐஎஸ்ஓ தரச்சான்று பெற்றவர்கள், பெற முயற்சி எடுத்துள்ளவர்கள் மானிய உதவியை பெறுவதற்கு விண்ணப்பித்துப் பயனடையலாம்.
மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள:
http://www.dcmsme.gov.in/emerge/iso.htm
http://www.msmedi-chennai.gov.in
ஆகிய இணையதளங்களைப் பாருங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...