தன்னம்பிக்கையாலும், கடின உழைப்பாலும் வியத்தகு வெற்றிகளைப் பெற்ற ஒருவர் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்:
""என்னுடைய பதினைந்தாவது வயதில் நான் அமெரிக்காவில் குடியேறப் போவதாகக் கூறினேன். நண்பர்கள் நகைத்தார்கள். ஆனால் நான் அமெரிக்காவில் குடியேறினேன். வயது பதினெட்டு ஆகும் போது நான் உலக ஆணழகன் ஆகப் போவதாகக் கூறினேன். நம்பவில்லை. பலரும் சிரித்தார்கள். ஆனால் நான் பலமுறை அந்தப் பட்டங்களை வென்றேன். பிறகு, நான் சினிமாவில் பெரிய ஹீரோவாகப் போகிறேன் என்று சென்னேன். ஏளனமாகப் பார்த்தார்கள். ஹாலிவுட் நாயகனாகப் பிரகாசித்தேன். அதே சினிமாத்
துறையில் எனக்கு மிகப் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டது. "இவன் அவ்வளவுதான்,ஒழிந்தான்' என்று ஒருசேர ஏளனம் செய்தார்கள். நான் மீண்டும் மீண்டு வந்தேன். வெற்றிகளைப் பெற்றேன்.
என்னுடைய ஐம்பதாவது வயதில் நான் கலிபோர்னியாவின் கவர்னர் ஆவேன் என்று கூறி அதற்காக உழைத்தேன். பணிகளைத் தொடங்கினேன். பலரும் இழிவாகப் பார்த்து பரிகசித்தார்கள். நான் கவர்னர் ஆனேன்.
இப்போது என்னைப்பார்த்து எள்ளி நகைத்தவர்களைப் பற்றி எண்ணிப் பார்க்கிறேன். அவர்கள் அதே இடத்தில்தான் இருக்கின்றார்கள்.
தன்னம்பிக்கையாலும், கடின முயற்சியாலும் நாம் நினைத்ததெல்லாம் சாதிக்கமுடியும். எதையும் சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறவர்கள் நம்மைச் சுற்றி இருக்கின்றவர்களைப் பற்றியோ, அவர்களது ஏளனச் சிரிப்பைப் பற்றியோ கவலைப்படக் கூடாது. அது அவர்களின் வியாதி.''
இதைக் கூறியவர் ஆஸ்திரிய - அமெரிக்கரான அர்னால்டு செவார்செனேகர் ஆவார். நம்பிக்கையோடு உழைத்து எண்ணிய இலக்குகளையெல்லாம் அவர் அடைந்தார்.
போட்டித் தேர்வு எழுதப் போகிறவர்களே... உங்களுக்குள் இருக்கின்ற தன்னம்பிக்கை பற்றியும், ஆற்றல் பற்றியும் பிறர் அறிந்திருக்க நியாயமில்லை. எனவே, நீங்கள் முயன்று அம்முயற்சியில் சில பின்னடைவுகள் ஏற்படும்போது சுற்றியுள்ளவர்கள் உங்களைப் பற்றி குறைவாக மதிப்பிடலாம். அது குறித்து வருந்த வேண்டாம்.
நீங்கள் இந்தியக்குடிமைப்பணித் தேர்வுகளின் இந்த ஆண்டுக்கான முதல்நிலைத் தேர்வுக்குத் தயாராக, இன்று முதல் சரியான தருணம்.
2016 ஆம் ஆண்டு தேர்வுக்கான அறிவிப்பு 23.04.2016 ஆம் தேதி வெளியிடப்படுகின்றது. அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள் முதல் 20.05.2016 ஆம் தேதி வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
பட்டப்படிப்பு முடித்தவர்களும், இளநிலை பட்டப்படிப்பு இறுதியாண்டு படிப்பவர்களும் (வயது வரம்புக்கு உட்பட்டு) விண்ணப்பிக்கலாம். 07.08.2016 ஆம் தேதி முதல்நிலைத்தேர்வு (PRELIMINARY EXAM) நடைபெற இருக்கின்றது.
இம்முதல்நிலைத் தேர்வு (மட்டும்) இந்தியக்குடிமைப் பணிகளுக்கும், இந்திய வன பணிகளுக்கும் சேர்த்து நடைபெறும் பொதுவான தேர்வாகும். குடிமைப்பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 03.12.2016 இல் முதன்மைத் தேர்வு தொடங்குகின்றது. தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறுகின்றது.
மேற்கண்டவாறு குடிமைப்பணிகள் தேர்வாணையம் கால அட்டவணையைச் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
எனவே, நடப்பு நிகழ்வுகளைக் கவனிக்கத் தொடங்குங்கள். தினந்தோறும் நாளிதழ்களைக் கவனமுடன் படியுங்கள். குறிப்பு எடுத்துக் கொள்ளுங்கள். சர்வதேச, தேசிய, மாநில நிகழ்வுகள் என பகுத்துக் கொள்ளுங்கள்.
சமீபத்தில் சர்வதேச அளவிலான நிகழ்வாக மானுட மேம்பாட்டு அறிக்கையை ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்ட அமைப்பு (UNDP) வெளியிட்டுள்ளது.
தேசிய அளவிலான நிகழ்வாக மத்திய சுகாதார அமைச்சகம் 4 ஆவது தேசிய குடும்ப சுகாதார அறிக்கையினை (NFHS- NATIONAL FAMILY HEALTH SURVEY) வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டு இந்தியக்குடிமைப்பணிகளின் முதல்நிலைத்தேர்விலும், முதன்மைத் தேர்விலும் இவை தொடர்பாக வினாக்கள் கேட்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. மேலும் நேர்முகத்தேர்வுக்குச் செல்லும் போட்டித்தேர்வர்களிடம் கருத்துகள் அடிப்படையிலான வினாக்கள் கேட்க வாய்ப்புகள் உள்ளன. ஆகவே, இவற்றை நாம் கவனமுடன் பார்க்க வேண்டியது அவசியம்.
சமீபத்தில் மத்திய புள்ளியல்துறைசேகரித்த தகவல்களின் அடிப்படையில் தேசிய குடும்ப சுகாதார ஆய்வறிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இது மத்திய அரசின் 4 ஆவது ஆய்வறிக்கையாகும். இதற்கு முன்னர் இது சம்பந்தமாக 1992-93 இல் ஆய்வறிக்கையும், 1998- 99 இல் 2ஆவது ஆய்வறிக்கையும் வெளி
யிட்டுள்ளது. 2005 - 2006 இல் 3ஆவது ஆய்வறிக்கை வெளிவந்தது.
1991- 92 ஆம் ஆண்டு முதல் இந்தியா புதிய பொருளாதாரக் கொள்கையை நடைமுறைப்படுத்தியது. இதன் பிறகு சுகாதாரம், கல்வி போன்ற அடிப்படையான காரணிகளில் உலகளாவிய ஒப்பீட்டு நோக்கு முக்கியத்துவம் பெற்றது.
இதனடிப்படையில் இந்திய அரசு முதல் முதலாக 1992-93 ஆம் ஆண்டில் இத்தகைய குடும்ப சுகாதார ஆய்வுகளை மேற்கொள்ளத் தொடங்கியது.
3ஆவது அறிக்கை வெளிவந்து 11 ஆண்டுகள் கழித்து தற்போது நான்காவது ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி, அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்கள் மற்றும் 13 மாநிலங்களில் எடுக்கப்பட்ட ஆய்வுகள் மட்டும் இந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.
இதில் குழந்தைகளின் வளர்ச்சி வீதம் (வயதோடு ஒப்பிடும்போது குறைவான எடை, குறைவான உயரம், குறைவான வளர்ச்சி), ஊட்டச்சத்துக் குறைந்த உணவு, இரத்தசோகை, குழந்தைகள் பாலின விகிதம், உயர் இரத்த அழுத்தம், இரத்தத்தில் சர்க்கரை அளவு, உடல் பருமன், தவறான உணவுப் பழக்கம் மற்றும் ஏஐய பற்றிய விழிப்புணர்வு ஆகியவை சம்பந்தமான விரிவான ஆய்வாக இது விளங்குகின்றது.
3ஆவது அறிக்கையோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது தற்போது மேற்கண்ட கூறுகளில் பல்வேறு பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளதை இந்த அறிக்கை வெளிப்படுத்துகின்றது.
ஆய்வு செய்யப்பட்ட 13 மாநிலங்களில் தமிழ்நாடு குழந்தைகள் பாலின விகிதம்2005- 2006 இல் 896 என்ற நிலையில் இருந்து தற்போது (2015-16) 954 என்ற சிறந்த நிலைக்கு முன்னேறியுள்ளது.
நோய் எதிர்ப்புச் சக்தியினை 99 சதவிகிதம் குழந்தைகள் தமிழ்நாட்டில் பெற்றுள்ளனர் என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்ட அமைப்பு நியூயார்க்கைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றது. இந்த அமைப்பு சமீபத்தில் 188 நாடுகளின் மனித மேம்பாட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி மனித மேம்பாட்டில் இந்தியா 13 ஆவது இடத்தினைப் பெற்றுள்ளது. தெற்காசிய நாடுகளில் 73 ஆவது இடத்தினைப் பெற்று இலங்கை முன்னிலை பெற்றுள்ளது.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஹோர்முஸ் நீரிணையில் சிறிய படகுகள்கூட தயக்கமின்றி சுட்டு வீழ்த்தப்படும்: அமெரிக்க கடற்படைக்கு டிரம்ப் உத்தரவு

"ஆடிப்பாடி அல்ல...! அறிவைப் பயன்படுத்தி வாக்களியுங்கள்!" இயக்குநர் மாரி செல்வராஜ்

தமிழ்நாட்டில் 84.51% வாக்குப்பதிவு! 6 மணி நிலவரம்!

லாரன்ஸ் பிஷ்னோய் குறித்த வெப் சீரிஸை தடை செய்ய வேண்டும்! - பிரதமருக்கு பஞ்சாப் காங்கிரஸ் வலியுறுத்தல்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

