டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

உணவுப் பொருட்களை ஆய்வு செய்யும் பயிற்சி!

உணவு அனைத்து உயிரினங்களுக்கும் முக்கியத் தேவையாக உள்ளது. மனிதர்களுக்கும்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:03 pm

எம். அருண்குமார்

உணவு அனைத்து உயிரினங்களுக்கும் முக்கியத் தேவையாக உள்ளது. மனிதர்களுக்கும்.

உணவுப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனைத் தொழிலுக்கு என்றுமே ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில், தினமும் உணவுப் பொருட்களுக்கான தேவை இருந்து கொண்டே இருக்கின்றது. அதனால் உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் தொழிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

உணவுப் பொருட்களைச் சாப்பிடும் மக்களுக்கு எந்தவிதமான பக்க விளைவுகளோ, தீமைகளோ ஏற்பட்டுவிடக்கூடாது. அதனால் உணவுப் பொருட்களைத் தயாரிப்பதில் அதிக கவனம் இருக்க வேண்டும். அதுமட்டுமல்ல, உணவு தொடர்பான தொழிலில் ஈடுபடும் நிறுவனங்கள் தங்களுடைய தயாரிப்புப் பொருட்களை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியிருக்கிறது.

எனவே உணவுப் பொருட்களை ஆய்வு செய்வது தொடர்பான பயிற்சிகளைப் பெற்றிருப்பவர்களை உணவு தயாரிப்பு மற்றும் பதப்படுத்தும் நிறுவனங்கள் வேலைக்கு வைத்துக் கொள்கின்றன.

ஆகவே அது சம்பந்தமான குறுகிய மற்றும் நீண்ட காலப் பயிற்சி, தேசிய விவசாய மற்றும் உணவுப் பொருட்கள் பகுப்பாய்வு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. இந்த நிறுவனம் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி துறையின் அங்கீகாரம் பெற்ற ஆராய்ச்சி நிறுவனமாகும்.

இந்நிறுவனம் உணவுப் பொருட்களின் தரத்தை மேம்படுத்தவும், உணவுப் பொருட்களைப் பகுப்பாய்வு செய்தல், பரிசோதனை செய்தல் மற்றும் உணவு பதப்படுத்துதல் குறித்த பயிற்சி வகுப்புகளை நடத்தும் நிறுவனமாகத் திகழ்கிறது.

குறுகிய கால பயிற்சிகள் :

1. Hazard Analysis of Critical Control Point. (HACCP)

2. Food Safety Management System (FSMS)

3. FSSA (Food Safety standard Act)

4. Seven QC tools

5. Statistical Quality Control

6. Kaizen and 5-S

7. Packaging and Labeling

8. Sensory Evaluation

9. Training program on GMP GHP GLP

10. Training program Chemical analysis of Food for Nutritional Facts

11. Training Program on Microbiological analysis of Food, Fruit and Water

12. Training program on Instrumental Analysis.

13. ISO: 22000 and 17025

14. Energy Conservation

15. Internal Audits

நீண்ட கால பயிற்சிகள் :

1. Diploma in Food Analytics (Food

Quality and Safety)

2. Vocational Training course in Food Processing in collaboration with KIN, Schleswig Holstein,

Germany (Proposed)

மேலும் தகவல்களுக்கு :

National Agriculture and Food Analysis and Research Institute,

NAFARI

2nd & 3rd  floor, MCCIA Building,

Tilak Road, Pune 411002, Maharashtra

Tel No.: 020-2444007924441776

M.No.: 9503000763

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.