டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

சுய முன்னேற்றம் - 30: முள் இல்லாமல் ரோஜா இல்லை..!

""ரோஜா மலர்களுக்கிடையில் முட்களையும் படைத்தானே... இவனோ இறைவன்?'' என்றான் ஒருவன்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:57 pm

எம். அருண்குமார்

""ரோஜா மலர்களுக்கிடையில் முட்களையும் படைத்தானே... இவனோ இறைவன்?'' என்றான் ஒருவன்.

""அப்படி ஏன் நினைக்கிறாய்? முட்களுக்கு இடையேயும் ரோஜா மலரை வைத்தானே... அவனை வணங்கு'' என்றான் இன்னொருவன்.

ஆம். செல்லும் வழியில் தடைகள் இருக்கின்றனவே என வருந்துகிறான் ஒருவன். அத் தடைகளுக்கு இடையேயும் நன்மையும், வாய்ப்பும் இருப்பதைக் காணுகிறான் இன்னொருவன். நீங்கள் யாராக இருக்க விரும்புகிறீர்கள்?

வாழ்க்கை என்பது பட்டுப்பாய் விரிக்கப்பட்ட ஒரு நெடுஞ்சாலை அல்ல. அது கல்லும் முள்ளும் இருக்கும் கரடு முரடான கானகப் பாதை. ஓரடி தப்பினால் உருண்டு விழக்கூடிய ஒற்றையடி மலைப்பாதை. வழுக்குப் பாறைகள் மேலும் கீழும் கிடக்கும் அருவிவழிப் பாதை. இலட்சியத்தை நோக்கி நடை போட்டு முன்னேறத் துடிக்கும் இளைஞர்களுக்கு இது ஒரு தடையாகவே இருக்கக் கூடாது. இதைக் கண்டு மனம் தளரக் கூடாது. எளிதாக எந்தச் சாதனைகளும் படைக்கப்படுவதில்லை. எளிதாகச் செய்து முடிக்கக் கூடிய எதையும் சாதனை என்று உலகம் ஒப்புக்கொள்வதில்லை.

இருபது ஆண்டுகளுக்கு முன்னே மாநில பள்ளிப் பொதுத் தேர்வுகளில் ஒன்றிரண்டு பேர்களே கணக்கில் நூற்றுக்கு நூறு வாங்கினார்கள். எனவே நூற்றுக்கு நூறு வாங்குவதற்கு மதிப்பிருந்தது. தொண்ணூறுகளுக்கும் மதிப்பிருந்தது. இப்போது மாநில அளவில் நூற்றுக்கணக்கானவர்கள் நூற்றுக்கு நூறு வாங்கிய பிறகு நூறுக்கே மதிப்பில்லை. உலக நியதியும் அதுதானே?

தடைகளை உயர்த்து... தகுதியை மேம்படுத்து:

எந்தத் துறைப் பாடமாக இருந்தாலும் அதிலே எளிமையாகப் புரிந்து கொண்டு எளிதில் கற்றுத் தேறக்கூடிய பகுதிகள் இருக்கும். அதே போன்று எளிதில் புரிபடாத பலமுறைகள் முயற்சி செய்தே கற்றுக் கொள்ளக் கூடிய பகுதிகளும் இருக்கும். கடினமான பகுதிகளை யார் கைவசப்படுத்திக் கொள்கிறார்களோ அவர்களே முன்னேற்றம் காணக்கூடியவர்கள். தடைகளைக் கண்டு தயங்கி நிற்பவர்கள் வாழ்க்கைப் பயணத்தில் பின்தங்கி விடுகின்றனர். தடைகளே ஒருவர் தகுதியை நிர்ணயிப்பவை என்பதைப் புரிந்து கொண்டால், முன்னேறத் துடிக்கும் மாணவர்கள், கடினமான வினாத்தாளையே விரும்புவார்கள்.

ஒவ்வொருமுறையும் உங்களால் தடைகள் தகர்த்து எறியப்படும் போது, உங்கள் தன்னம்பிக்கை கூடுகிறது. இதைப் புரிந்து கொண்டவர்கள், தன்னம்பிக்கை தேவைப்படும் நேரங்களிலெல்லாம், எளிதாகச் சாதிக்கக் கூடியவற்றை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். கடினமானவற்றையே கேட்டுப் பெற்று, சாதித்துக் காட்டுவார்கள்.

தந்தையின் கைவிரலைப் பற்றியபடியே, கடற்கரை அருகிலுள்ள சாலையில் நடந்து கொண்டிருந்தான் சிறுவன். பிறகு இருவரும் கடலலைகளில் கால் நனைக்க விரும்பி கடற்கரை மணலில் நடக்கத் தொடங்கினர்.

""அப்பா தார் ரோடு கெட்டியா இருக்கு. மணலோ மெத்துனு இருக்கு. இருந்தாலும் ரோட்ல நடக்கிறதை விட மணலில் நடக்கிறது கஷ்டமா இருக்கே... ஏம்ப்பா?''

""ஒன் கேள்வியிலேயே பதிலும் இருக்கு... நமது கால்களின் அடிப்பாகம் படும் தரை கடினமாக இருப்பதால்தான், அதில் ஊன்றி நம்மால் நடக்க முடிகிறது. மணல் சாஃப்ட். அது நமது கால்களுக்கு அழுத்தி நடக்கத் தேவையான தளத்தைக் கொடுப்பதில்லை. எனவே நம்மால் எளிதாக நடக்கமுடிவதில்லை. அறிவியலிலே இதனை உராய்வு (ஊதஐஇபஐஞச) என்பார்கள்''

உராய்வு இல்லாமல் உந்துவிசை இல்லை. தடைகள் இல்லாமல் சாதனைகள் இல்லை.

போட்டியின் கடுமையே வெற்றியின் உயரம்:

பல விளையாட்டுப் போட்டிகளின் பைனல்ஸ் பார்க்கிறோம். அவை கடுமையாக இருக்க இருக்கத்தான் வெற்றியின் உற்சாகம் வெளிக் கிளம்பும். விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் 1984இல் மெக்கென்ரோ தனக்கெதிரே விளையாடிய ஜிம்மி கான்னர்ûஸ பைனல்ஸில் 80 நிமிடங்களில் தோற்கடித்துவிட்டார். (ஸ்கோர் 6-1,6-1,6-2) கடந்த 45 ஆண்டுகளில் இது போன்று ஒருதலைப் பட்சமான (ஙர்ள்ற் ர்ய்ங்-ள்ண்க்ங்க்

ம்ஹற்ஸ்ரீட்) இறுதிப் போட்டி இதுவே என்று அன்றைய நாளிதழ்கள் எழுதியன. 2010-ஆம் ஆண்டில் அமெரிக்க வீரர் ஜான் இஸ்னர், பிரெஞ்ச் வீரர் நிகொலஸ் மஹுத் இருவரிடையே நடந்த விம்பிள்டன் போட்டி 11 மணி 5 நிமிட நேரம் நடந்தது. இத்தனைக்கும் இது முதல்சுற்றுப் போட்டி. எனினும் இத்தனை நேரம் விளையாடி அதில் வெற்றி பெற்ற ஜான் இஸ்னரின் சாதனைக்கு இணையும் உண்டோ?

எல்லா வெற்றிகளுமே மகிழ்ச்சிதான் என்றாலும் கடுமையான எதிர்ப்புக்கும் தடைக்கும் இடையே பெறும் வெற்றிக்கனிக்குச் சுவை அதிகம்.

""ஏன்டா ஸ்கூல் முடிச்சாச்சு.. நல்ல மார்க்கும் வாங்கியிருக்கே... காலேஜ்ல என்ன சப்ஜெக்ட் எடுக்கப் போறே?''

""லேப் (கஅஆ) இல்லாத சப்ஜெக்டா இருக்கணும். ஈஸியா மார்க் வாங்கணும். ம்... ஹிஸ்டரி எடுக்கப் போறேன்''

வரலாற்றுத் துறையும் ஈஸி கிடையாது. படித்தால்தான் தெரியும். எனினும் வரலாறு படிப்பதை விட, வரலாறு படைக்க நினைப்பவர்களே முன்னேறும் தகுதி பெற்றவர்கள்.

முட்களை நேசியுங்கள்!

பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும், முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இப்போது துறைகளும் பிரிவுகளும் (ஈங்ல்ஹழ்ற்ம்ங்ய்ற்ள் ஹய்க் ள்ன்க்ஷத்ங்ஸ்ரீற்ள்) அதிகமாகியுள்ளன. இவற்றுள் கடினமான துறைகளைத் தேர்ந்தெடுப்பது சாதனை புரியும் வாய்ப்புகளுக்கு இடம் கொடுக்கும் என்று நினைப்பவர்கள், சரியான பாதையிலே முன்னேறுபவர்கள்.

அதிகமான வேலைப் பளு, ப்ரொஜெக்ட் தொடர்பாக இரவு,பகல் அலைச்சல், ஹாஸ்டல் கட்டுப்பாடுகள், அரைநாள் ஓய்வும் அதிசயம் என்று சிரமமாக இருக்கலாம். தேர்வுக்குப் படிக்கும் போதோ அல்லது பரிசோதனைச் சாலையில் ஒரு ரிசல்ட் சரியாக வராத போதோ, ஆய்வுத்துறையில் நாம் தேடுகின்ற ரெஃபெரென்ஸ் கிடைக்காத போதோ என்று பல நேரங்களில் மனது சலிப்படையும் போது, ஒருநிமிடம் அமைதியாக அமர்ந்து சிந்தியுங்கள். ஒரு நல்ல பயன் கிடைக்க வேண்டுமென்றால் கடினமாக உழைப்பது தவறில்லை என்று உங்கள் மனமே உங்களுக்குச் சொல்லும்.

சில மாணவர்கள் ஒரு சப்ஜெக்டில் சேர்ந்துவிட்டு அது கடினமாக இருக்கிறதென்று வேறொன்றில் சேர்கிறார்கள். இப்படியே பலதுறைகளில் மாறிப் போய் எதையும் சரிவரப் புரிந்து கொள்ளாதவர்கள் ஆகிவிடுகின்றனர். கடினமான பாடங்களையோ துறைகளையோ கண்டு பயந்து ஓடாதீர்கள். எதிர் நின்று உழைத்துப் பாருங்கள். நிச்சயம் பலன் கிடைக்கும்

சாதனைகள், தேர்வு வெற்றிகள், சிறந்த வேலை வாய்ப்பு, வாழ்வில் முன்னேற்றம் என்ற ரோஜாக்கள் வேண்டுமென்றால் முட்களைக் கவனமாகக் கையாளக் கற்றுக் கொள்ளுங்கள். அதை விடுத்து முட்களே இல்லாத ரோஜாக்களைத் தேடாதீர்கள். ஏனென்றால் ரோஜாவின் சிறப்புக்கு முள்ளும் ஒரு காரணமாக அமைந்துள்ளது .

(தொடரும்)

முனைவர் வ.வே.சு. கல்வியாளர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.