நடப்பு நிகழ்வுகளைத் தொடர்புபடுத்தி எழுத வேண்டும். இது, உங்களை நீங்கள் புதுப்பித்துக் கொண்டேஇருக்கின்றீர்கள் என்பதை எடுத்துக்காட்டும். மேலும் நீங்கள் புத்தகத்தை மட்டும் படித்துவிட்டுஅப்படியே மறுபதிவு செய்பவரல்ல என்பதையும்உறுதிப்படுத்தும்.
வருகின்ற 18.12.2015 இல் இந்தியக் குடிமைப் பணித்தேர்வுகளின் இரண்டாவது கட்டமான முதன்மைத் தேர்வு (MAINS EXAM) தொடங்கிட இருக்கின்றது.
நடந்து முடிந்த முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்று தற்போது முதன்மைத் தேர்வினை எழுதவிருக்கின்ற மாணவர்களுக்கு வாழ்த்துகள்.
ஏற்கெனவே குடிமைப்பணித் தேர்வுகளில் வெற்றி பெற்றிருப்பினும் மீண்டும் எழுதி தங்களின் தரநிலையை உயர்த்தி இந்திய ஆட்சிப் பணி (IAS),
இந்தியக் காவல்பணி (IPS) போன்ற பணிகளைப்பெற விரும்புபவர்களும் முதன்மைத் தேர்வினை எழுதுகிறீர்கள்.
2014 ஆம் ஆண்டு முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்று நேர்முகத் தேர்வுவரை சென்று தரப்பட்டியலில் இடம் பெறமுடியாமல் வெளியே வந்தவர்களும் இத்தேர்வினை எழுதுகிறீர்கள்.
முதன்மைத் தேர்வினை எழுதி நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படும் பட்டியலில் இடம்பெற முடியாமல்போன மாணவர்களும் எழுதுகிறீர்கள்.
முதல்முறையாக தகுதித் தேர்வில் (முதல்நிலைத் தேர்வு) வெற்றி பெற்று முதன்மைத் தேர்வினை எழுதும் மாணவர்களும் இருக்கின்றீர்கள்.
உங்களுக்குத் தெரியும். இது வெல்ல முடியாத தேர்வல்ல. இந்தியா முழுமைக்குமான இத்தேர்வில் ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெற்றி பெறுகிறார்கள்.
நம்பிக்கை வையுங்கள். உங்களால் வெல்லமுடியும். வினாக்களை கவனத்துடன் படியுங்கள். பதில்களைச் சிறப்பாக எழுதுங்கள். விருப்பப் பாடத்தில் 100 வார்த்தைகளுக்கு மேல் எழுதும் விடைகளுக்கு இரண்டு அல்லது மூன்று வரிகளில் ஒரு முன்னுரை (10 முதல் 15 வார்த்தைகள்), அதேபோல ஒரு முடிவுரை எழுதலாம்.
கட்டுரை (ESSAY) மற்றும் விருப்பப் பாடத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்தால் அதிக மதிப்பெண்கள் பெற வாய்ப்புகள் உண்டு. முதன்மைத் தேர்வில் உங்களின் மொத்த மதிப்பெண்கள் உயர இவை இரண்டும் பெருமளவில் கைகொடுப்பவை.
வினாவுக்கான விடையினை எழுதும்போது இடை இடையே சில விநாடிகள் வினாவினைப் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் சில நேரங்களில் நாம் விடையினை எழுதும் போது திசைமாறிச் சென்றுவிடுவதுண்டு.
நடப்பு நிகழ்வுகளே சில வினாக்களாக இருக்கும். சில வினாக்கள் நடப்பு நிகழ்வுகள் தொடர்புடையவையாக இருக்கும். நடப்பு நிகழ்வுகள் தொடர்புடைய வினாக்களுக்கான விடைகளில் அது தொடர்பான தற்போதைய நடப்பு நிகழ்வினை ஒரு வரியில் தொடர்புப்படுத்துங்கள்.
நடப்பு நிகழ்வுகளைத் தொடர்புப்படுத்தி எழுதுவதை பொது அறிவுப் பாடங்களில் மட்டுமல்லாமல், விருப்பப்பாடத்திலும் வாய்ப்புகள் வரும்போது பயன்படுத்துங்கள். அதுபோல கட்டுரையில் அதன் நடையைப் (FLOW) பாதிக்காத அளவில், நோக்கத்தை மேம்படுத்தும் வகையில் தொடர்புடைய நடப்பு நிகழ்வுகளை வாய்ப்புள்ள இடங்களில் பயன்படுத்தலாம்.
இவை, உங்களை நீங்கள் புதுப்பித்துக் கொண்டே இருக்கின்றீர்கள் என்பதை எடுத்துக்காட்டும். மேலும் நீங்கள் புத்தகத்தை மட்டும் படித்துவிட்டு அப்படியே மறுபதிவு செய்பவரல்ல என்பதையும் உறுதிப்படுத்தும்.
200 வார்த்தைகளுக்குள் என்று கேட்கும்போது 150 வார்த்தைகள் கூட நீங்கள் எழுதலாம். ஆனால் விடை நேர்த்தியாகவும், சிறப்பாகவும் அமைதல் வேண்டும்.
சில தருணங்களில் உங்களுக்குப் பரிச்சயமான பகுதிகளில் எழுதும்போது வார்த்தைகள் கூடிவிடும். அச்சூழ்நிலையில் கூடுதல் வார்த்தைகள் எழுதுவதைக் கவனமாகத் தவிருங்கள். ஏனெனில், அது உங்களின் நேர மேலாண்மையைப் பாதிக்கும். வெற்றி உங்கள் கையில். வென்று காட்டுங்கள். சாதனை படைத்திட வாழ்த்துகள்.
சீனாவின் முத்துமாலைத் திட்டம் (STRING OF PEARLS) என்பதை கடந்த பகுதியில் குறிப்பிட்டிருந்தோம். குடிமைப்பணித் தேர்வர்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியவற்றுள் இதுவும் ஒன்றாகும்.
இந்தியாவின் எல்லை நாடுகளிலும், கடற்பகுதிகள் தாண்டிய அண்டை நாடுகளிலும் சீனா நீண்ட காலமாக தமது கடற்படைத் தளங்களை அமைத்தும், ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டும் வருகின்றது.
சீனாவின் புவி அரசியல் கொள்கைகளில் (GEOPOLITICAL THEORY) இந்த முத்துமாலைத் திட்டமும் ஒன்றாக உள்ளது.
சீனா, இந்தியாவைச் சுற்றி மேற்கொள்ளும் சில திட்டங்கள் பின்வருமாறு:
வங்காளதேசத்தின் சிட்டகாங் பகுதியில் கப்பல்துறைக்கான வசதி வாய்ப்பினை ஏற்படுத்தும் திட்டத்தை செயல்படுத்துகின்றது.
மியான்மரின் சிட்வி (SITTWE) துறைமுகத்தினை ஆழ்கடல் துறைமுகமாக்கும் பணியை மேற்கொள்கின்றது.
தாய்லாந்தின் க்ரா கால்வாய் (KRA CANAL) திட்டத்தினை செயலாக்கி வருகின்றது. வியட்நாம் நாட்டிற்குக் கிழக்கே தென்சீனக்கடலில் உள்ள வுடி தீவில் (WOODY ISLANDS) விமான தளத்தினை அமைக்கின்றது. ஹைனான் தீவில் (HAINAN ISLANDS) இடங்களில் சீனாவின் கடற்படை நிலை கொள்வதற்கு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இலங்கையின் ஹம்பன் தோட்டாவில் கப்பல் எரிபொருள் நிரப்பும் நிலையத்தினை நிறுவி வருகின்றது.
சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தை ஈரான் எல்லையில் உள்ள பாகிஸ்தானின் துறைமுகமான கவ்தாருடன் (GWADAR) இணைக்கின்ற சூப்பர் ஹைவே திட்டத்தினைச் சீனா தொடங்கியுள்ளது.
இந்த சூப்பர் ஹைவேயானது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PAKISTAN OCCUPIED KASHMIR- POK), இஸ்லாமாபாத், லாகூர் வழியாக கவ்தாரை சென்றடைகிறது.
இவ்வாறாக இந்தியாவைச் சுற்றி இந்த முத்துமாலைத் திட்டம் விரிவடைகிறது. இதற்குப் பதிலடியாக இந்தியா கடல்வழி பாதுகாப்புத் திட்டத்திற்கும், வான்வழி பாதுகாப்புத் திட்டத்திற்கும் செயல் வடிவம் கொடுத்து தீவிரமாகச் செயல்படுத்தி வருகின்றது. இதனைத் தொடர்ந்து பார்ப்போம்.
இந்தியாவின் அயல்நாட்டுக் கொள்கைகள் மற்றும் சர்வதேச உறவுகள் போன்றவற்றில் இருந்து வினாக்கள் கேட்கப்படும்போது பெரும்பாலும் நடப்பு நிகழ்வுகளில் இருந்தும், நாளிதழ் செய்திகளில் இருந்தும் கேட்கப்படுகின்றன. எனவே, தொடர்ந்து நாளிதழ்களைப் படித்தல் அவசியம்.
எனினும், குடிமைப்பணித் தேர்வுகளை எழுதிட விரும்பும் மாணவர்கள் இந்தியாவின் அயல்நாட்டுக் கொள்கைகள் பற்றிய அடிப்படைகளை அறிந்துகொள்ள RAJIV SIKRI எழுதியுள்ள ??CHALLENGE AND STRATEGY: RETHINKING INDIA’S FOREIGN POLICY?? என்ற நூலினைப் படிக்கலாம்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஹோர்முஸ் நீரிணையில் சிறிய படகுகள்கூட தயக்கமின்றி சுட்டு வீழ்த்தப்படும்: அமெரிக்க கடற்படைக்கு டிரம்ப் உத்தரவு

"ஆடிப்பாடி அல்ல...! அறிவைப் பயன்படுத்தி வாக்களியுங்கள்!" இயக்குநர் மாரி செல்வராஜ்

தமிழ்நாட்டில் 84.51% வாக்குப்பதிவு! 6 மணி நிலவரம்!

லாரன்ஸ் பிஷ்னோய் குறித்த வெப் சீரிஸை தடை செய்ய வேண்டும்! - பிரதமருக்கு பஞ்சாப் காங்கிரஸ் வலியுறுத்தல்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


