உலகில் 125-க்கும் மேற்பட்ட நாடுகளில் கிரிக்கெட் ஆடப்படுகிறது. கிரிக்கெட் விளையாட மட்டை, ஸ்டம்ப்ஸ், பந்து ஆகிய மூன்றும் அடிப்படைத் தேவைகளாகும். ஆட்டக்காரருக்கு முகத்தில் அடிபடாமல் இருக்க ஹெட்கியர், கைகளில் அணிய உறைகள், காலில் அடிபடாமல் இருக்க பேட் போன்றவை கூடுதல் தேவைகளாகும்.
2026-ஆம் ஆண்டில் கிரிக்கெட் மட்டைகளை உற்பத்தி செய்யும் நாடுகளில் முதல் இடம் இந்தியாவுக்குத்தான். உலகச் சந்தையில் 70 சதவீதத்தை உற்பத்தி செய்து, 125 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. இதோடு, கிரிக்கெட்டின் மற்ற உபகரணங்களையும் உற்பத்தி செய்து, ஏற்றுமதியிலும் உலகளாவிய சாதனை படைக்கிறது.
நாட்டில் காஷ்மீர் பள்ளத்தாக்கில்தான் வில்லோ மரங்கள் அதிகமாய் இருப்பதால், கிரிக்கெட் மட்டை தயாரிப்பு அதிகம் நடைபெறுகிறது. இங்கு ஆண்டுக்கு 30 லட்சத்துக்கும் அதிகமான மட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இது உலக அளவிலான விற்பனையில் கிட்டத்தட்ட 77% அதிகமாகும். விலை மலிவாகவும், நீடித்த உழைப்பும் இதன் பெருமை.
மீரட், ஜலந்தர் ஆகியன கிரிக்கெட்டின் கை வினைத்திறன் மையங்களாகச் செயல்படுகின்றன. எஸ்.ஜி., எஸ்.எஸ். போன்ற பிரபல பிராண்டுகளின் தாயகம்தான் மீரட். இவை உள்நாட்டிலும் இங்கிலாந்திலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்ட மரங்களைப் பயன்படுத்தியும் உயர்மட்ட, பொது சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்காக மட்டைகளைத் தயாரிக்கிறது.
இந்தியாவுக்கு அடுத்தபடியாக பாகிஸ்தானில் அதிகளவில் கிரிக்கெட் மட்டைகள் தயாரிக்கப்படுகின்றன. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் குறைந்த அளவில் மட்டைகள் தயாரிக்கப்படுகின்றன.
பாகிஸ்தானில் உள்ள சியால் கோட்டில் கிரிக்கெட் உள்ளிட்ட பல விளையாட்டுகளின் சாதனங்கள் அதிக அளவில் தயாராகின்றன. உலக அளவிலான விளையாட்டுப் பொருள்கள் தயாரிப்பு மையமான இங்கு கையால் தைக்கப்பட்ட உயர்தரமான பந்துகள், பாதுகாப்பு உபகரணங்கள் தயாராகின்றன.
இங்கிலாந்தில் தயாரிக்கப்படும் மட்டைகள் தரத்தில் புகழ் பெற்றவை. ஆங்கிலோ-வில்லோ மரத்தைப் பயன்படுத்தி, அங்குள்ள தொழிற்சாலைகள் உயர்தர தொழிற்முறை மட்டைகளை தொடர்ந்து உற்பத்திசெய்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காற்றாலை, சூரிய மின் உற்பத்தி நிலையங்களை துணை மின்நிலையங்களுடன் இணைக்க தடை

ஐரோப்பாவை வாட்டும் வெப்ப அலை: சில நாடுகளில் சாதனை அளவு வெயில்- 8 போ் உயிரிழப்பு

எபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்

எபோலா: கண்காணிப்பை தீவிரப்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
விடியோக்கள்

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK


