ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அழகான குதிரைகள் 5

வாகனப் போக்குவரத்து அதிகம் இல்லாத காலங்களில் குதிரை வண்டிகளின் பயன்பாடு அதிகமிருந்தது.

அகல்டெக்

Published On :21 ஜூன் 2026, 4:11 am IST

வாகனப் போக்குவரத்து அதிகம் இல்லாத காலங்களில் குதிரை வண்டிகளின் பயன்பாடு அதிகமிருந்தது. அதில் பயணம் செய்வது புது அனுபவத்தைக் கொடுக்கும். மலைவாச ஸ்தலங்கள், அக்சார்தாம் யாத்திரை, அமர்நாத் யாத்திரை, வைஷ்ணவி தேவி யாத்திரை போன்ற யாத்திரைகளுக்கு குதிரைகள்தான் அதிகளவில் இன்றும் பயன்படுத்தப்படுகின்றன. இஸ்லாமிய திருமணங்களில் மாப்பிள்ளை, மணமண்டபம் நோக்கி குதிரையில் பயணிப்பது உண்டு.

வடநாட்டு திருமணங்களில் அழகாக அலங்கரிக்கப்பட்ட குதிரைகளைக் கொண்டு வந்து வேடிக்கை காட்டுவர். சர்க்கஸில் உள்ள குதிரைகள் வலிமைமிக்கதாகவும் அழகாகவும் இருக்கும். அதனுடன் மனிதர்கள் பல சாதனைகளைச் செய்வர். உலகின் ஐந்து வித்தியாசமான குதிரைகளைப் பார்ப்போம்.

அகல்டெக்

துர்க்மேனிஸ்தானைச் சேர்ந்த மிகப்பழைமையான, அரியவகை குதிரை இனம் அகல்டெக். சூரிய ஒளியில் தங்கம்போல் ஜொலிப்பதாலும், பளபளப்பான உடல் அமைப்பாலும் இதை தங்கக் குதிரை என அழைப்பர். அதிகவேகத்துக்கும், புத்திசாலித்தனத்துக்கும் பேர்போனது. ரோமத்துடன் இணைந்த நேர்த்தியான உடல்வாகு கொண்டது. சகிப்புத் தன்மைமிக்கது. அவற்றின் அசாதாரண தோற்றம் அனைவரையும் கவரும். சிலசமயங்களில் நிஜமற்றது போல் தோற்றமளிக்கும்.

ஃப்ரீஷியன்

நேர்த்திக்கு ஒரு குதிரை இனம் என ஒன்று இருக்குமானால், அந்தப் பட்டியலில் ஃப்ரீஷியன் குதிரை நிச்சயம் இருக்கும். வடக்கு நெதர்லாந்தில் உள்ள ஃப்ரீஸ்லாந்து மாகாணத்தில் தோன்றிய குதிரை இனம். அடர் கருப்புநிற ரோமம், நீண்ட அலைபாயும் பிடரி மயிர், கால்களைச் சுற்றி இறகு போன்ற முடிகள், வலிமையான உடல்வாகு ஆகியவற்றைக் கொண்டு கம்பீரமாகத் திகழ்கிறது.

வரலாற்று நிகழ்வுகள், விழாக்கள், கலைநிகழ்ச்சிகளில் பிரதானமாக இது இடம்பெற்றிருக்கும். சவாரிக்கும், வண்டி இழுக்கவும் பயன்படும். தலையை உயர்த்தி வைத்திருக்கும் தோரணை, கால்களை உயரமாக எடுத்து வைக்கும் நடை ஆகியவற்றுக்கு இது பிரபலம்.

அரேபிய குதிரை

அரபு தீபகற்பத்தில் தோன்றிய குதிரை. தனித்துவமான வடிவம் கொண்டது. மிகப் பழைமையான குதிரை இனம். போர், வணிகம், வேகம் தாங்கும் ஆற்றல், மெருகு, எலும்பு வலிமை ஆகியவற்றுக்காக அறியப்படுபவை. பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வருபவை. உலகில் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட இனங்களில் ஒன்று. நேர்த்தியான முகம், உணர்ச்சிமிக்க கண்கள், வளைந்த கழுத்து சிறப்புமிக்கது.

ஜிப்சிவான்

பிரிட்டன், அயர்லாந்தைச் சேர்ந்த ஒருபுகழ் பெற்ற குதிரை இனம். ஒருகாலத்தில் ரோம் நகர மக்கள் தங்களுடைய நடமாடும் வீடுகளை இழுப்பதற்காக இந்தக் குதிரைகளைப் பயன்படுத்தினர். கம்பீரமும், உறுதியான உடலமைப்பும் கொண்டது. பல வண்ணங்கள் கொண்டது. சாது, அன்பான குதிரை. குழந்தைகளுக்கு ஏற்றது.

அந்தலூசூயன்

உயர்ந்தது என்பதை அதன் கம்பீரமான தோரணை விளக்குகிறது. வலிமையான உடல், அலைபாயும் பகுதியான கழுத்து முடி, குதிரையேற்றப் பயிற்சிக்குப் பயன்படுத்தப்பட்டது. தூய ஸ்பானிஷ் குதிரை. ஸ்பெயினின் அன்டெலுரியா பகுதியில் தோன்றிய இனம். ஐரோப்பிய மன்னர்கள், போர் வீரர்கள் விரும்பும் குதிரை. குதிரையேற்றப் போட்டிகள், திரைப்படங்களில் (லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ்) பங்கு பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.