ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

8 அடி கூந்தல்!

கார்குழலை ஏன் வளர்த்தாய் கன்னி இளமானேகாளையரை கட்டுதற்கோ கன்னி இளமானே...

Published On :16 ஆகஸ்ட் 2026, 9:52 pm IST

கார்குழலை  ஏன்  வளர்த்தாய் கன்னி  இளமானேகாளையரை  கட்டுதற்கோ  கன்னி  இளமானே...

என்று  நடிகை  பானுமதி  பாடும்  பழைய  பாடலில்  'கண்ணிலே இருப்பதென்ன  கன்னி  இளமானே'  என்ற வரி  பிரசித்தமானது. 

ஆறடி  கூந்தல்  காலடி மீது  மோதுவதென்ன சந்தோஷம்  யாரடி  வந்தார்  என்னடி  சொன்னார்  என்ற  பாடல்  வரியும்  உண்டு.

இதெல்லாம்  கவிஞரின்  மிகையான  கற்பனை என்று  நினைக்க வேண்டாம்.   8 அடி  கூந்தல்  கொண்ட  பெண்  இந்தியாவில்  இருக்கிறார்.

உலகில்  நீளமான  தலைமுடி  வைத்திருக்கும்  பெண்ணாக  இந்தியாவில்  உத்தரகண்ட்  மாநிலம்  ஹல்டிவானி  என்ற  நகரைச்  சேர்ந்த  ரேணு தரியல்  கின்னஸ்  சாதனை  படைத்துள்ளார். இவரது  தலை முடி நீளம்  271.50  செ. மீ. ஆகும்.

இவருக்கு  அடுத்த  இடத்தில்  இருப்பவர்  உக்ரைன்  நாட்டைச்  சேர்ந்த  ஆலியா  நஸிரோவா.  இவரது  தலைமுடி  நீளம்  257.33  செ.மீ. இவர்  கடந்த  சில ஆண்டுகளாகவே  சமூக  ஊடகங்களில்  தன்  தலைமுடி  விடியோக்களைப் பதிவிட்டு,  தான்  எவ்வாறு  பராமரிக்கிறேன்  என்று  விளக்கம்  அளித்து  வந்தார்.  கின்னஸ்  சாதனைக்காக  இவரைக்  கடந்த  ஏப்ரல்  மாதம்  நேரடியாகப் பார்த்து,  ஆய்வு செய்து,  கின்னஸ்  புத்தகத்தில்  இடம்பெறச் செய்துள்ளனர்.

இவரது  தலைமுடி  இந்த  அளவுக்கு  நீளமாக  வளரக் காரணம்  என்ன?

இதற்கு  அவர்  புன்னகையுடன் சொல்லும்  ஒரே  பதில்...

'2015-ஆம்  ஆண்டு முதல்  என்  தலைமுடியை  வெட்டுவதை  நிறுத்தி விட்டேன்.   என்  தலைமுடிக்கான  ஷாம்புவை  நானே   நம்  பாரம்பரிய  மூலிகைகள்  மூலம்  தயார் செய்து  பயன்படுத்துகிறேன்.  அவை  எந்த  மூலிகைகள்  என்பதை  எனது  சமூக  ஊடகங்களில்  தெரிவித்துள்ளேன்.  எதையும் மறைத்தது  கிடையாது.  தேவையில்லாத  ரசாயன  கலவை  உள்ள  எண்ணெய் பயன்படுத்த வேண்டாம்  என்பதுதான்  என் முதன்மை  ஆலோசனை.  

இலக்கியங்களிலும்  இந்தியக்  கலாசாரத்திலும்  நீண்ட முடியுள்ள  பெண் ஆளுமைகள்  பேசப்படுகின்றனர்.  அந்த  ஆர்வத்தால்  நான்  முடி வளர்க்கத்  தொடங்கினேன்.  நீண்ட முடி  மகிழ்ச்சி  தருகிறது.  ஆனாலும்,  அதைப்  பராமரிப்பது  கொஞ்சம்  கடினம்தான்.  இதன் பராமரிப்புக்காக... மற்ற  பெண்களை விட  கொஞ்சம்  அதிக நேரம்  செலவிடுகிறேன்' என்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.