கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் முதுகில் பெண் ஒருவர் அழுத்திவிடும் புகைப்படம் வெளிவந்தவுடன் கோலிக்கு என்ன ஆச்சு... அவருக்கு மசாஜ் செய்யும் பெண் யார்..?' என்றெல்லாம் சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்தது. பிறகுதான் தெரிந்தது, அந்தப் பெண், ஐ.பி.எல். கிரிக்கெட் ஆட்டத்தின் முதல் பெண் சிகிச்சையாளர் நவ்நீத் கெளதம் என்பது.
கிரிக்கெட் ஆட்டத்தின்போது வீரர்களுக்கு தசைப் பிடிப்பு ஏற்படாமல் தடுக்கவும், காயங்களிலிருந்து குணம் பெறவும், நவ்நீத்தின் சிகிச்சை முறைகள் கை கொடுத்து உதவுகின்றன. பிஸியோதெரபிஸ்ட்டுகளில் முதல்முறையாக இந்த ஆண்டு பெண் ஒருவரும் இடம் பெற்றுள்ளார்.
அணியில் உள்ள 20 அல்லது 22 ஆண்களும் என் சகோதரர்களைப் போன்றவர்கள். என்னை மதிக்கிறார்கள். வேலையில் தொழில்முறையாக இருந்தால், பாலின வித்தியாசம் பிரச்னைகளை உருவாக்காது' என்கிறார் அவர்.
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் கிரிக்கெட் அணியின் விளையாட்டு, மருத்துவம், பிசியோதெரபி குழுவின் முக்கிய உறுப்பினரான நவ்நீத், தொழில்முறை கிரிக்கெட்டின் அதிகப் போட்டி நிறைந்த விளையாட்டு மருத்துவத்துறையில் பாலின வேறுபாடு கிடையாது என்பதை நிரூபித்துள்ளார்.
இந்திய வம்சாவளியான நவ்நீத், கனடாவில் பிறந்து வளர்ந்தவர். வான்கூவரில் பிசியோதெரபி மருத்துவம் படித்த நவ்நீத், குளோபல் டி 20' லீக்கில் டொராண்டோ தேசிய அணிக்கு உடல்நலப் பயிற்சியை அளித்தார். ஆசியா, ஐரோப்பா நாடுகளில் முழுவதும் தொழில்முறை கோல்ஃப் சுற்றுப்பயணங்களிலும் பங்கேற்ற இவர், இறகுப்பந்து ஆட்டக்காரர்.
2019இல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் சப்போர்ட் ஸ்டாப்' எனும் பணியில் நவ்நீத் கெளதம் இணைந்தபோதே, அந்தப் பணியில் இடம் பெற்ற முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார். தற்போது மசாஜ் தடகளப் பயிற்சியாளராக ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் கிரிக்கெட் துறையிலும் நுழைந்து முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.
ஐ.பி.எல். தொடரில் இவரது அர்ப்பணிப்பைக் கண்டு வியந்த ஆர்.சி.பி. நிர்வாகம், மகளிர் பிரீமியர் லீக் தொடரிலும் இவருக்கு முக்கியப் பொறுப்பை வழங்கியது. தற்போது மகளிர் அணியின் ஹெட் அத்லெடிக் தெரபிஸ்ட்' ஆகவும் பணியாற்றி வருகிறார். ஸ்மிருதி மந்தனா, எலிஸ் பெர்ரி போன்ற வீராங்கனைகளின் உடற்தகுதியை உறுதி செய்வதிலும் இவரது பங்கு மிக முக்கியமானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பெண்ணுக்கு நடன கலைஞருக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இம்பாக்ட் வீரர் விராட் கோலி!

பெங்களூரின் அரசன்..! ஆர்சிபி வெளியிட்ட விராட் கோலியின் புதிய புகைப்படங்கள்!

விராட் கோலியின் சாதனையை முறியடித்த சாஹிப்சாதா ஃபர்ஹான்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

