சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

சிரி... சிரி...

ஆபீஸ் முடிந்ததும் நடந்தே வீட்டுக்குப் போவியா, ஏன்?'

News image
Updated On :25 ஏப்ரல் 2026, 10:45 pm

ஆபீஸ் முடிந்ததும் நடந்தே வீட்டுக்குப் போவியா, ஏன்?'

தூங்கி எழுந்ததும் நடக்கணும்னு டாக்டர் சொல்லியிருக்கார்!'

சி. ஆர். ஹரிஹரன், ஆலுவா.



உன் கணவரை உனக்கு ரொம்பப் பிடிக்குமா, ஏன்?'

மூன்று நேரமும் உப்புமா கொடுத்தாலும் சலிக்காமல் சாப்பிடுவாரு!'

எம்.பி.தினேஷ், இடையர்பாளையம்.



நீ தினமும் சரக்குச் சாப்பிட்டுப் போனாலும், உன் மனைவியால் கண்டுபிடிக்க முடியாதா... எப்படி?'

அவள் சீரியல் பார்க்கும் போது டக்குன்னு போயிடுவேன்!'



ஏன் கன்னத்துல கை வைச்சுட்டு உட்கார்ந்திருக்கே?'

வெயில் தாங்கமுடியலை... ஏ.சி. வாங்கணும்னு சொன்னதுக்கு, ஃப்ரிஜ் டோரை திறந்துவச்சிட்டு பக்கத்துல படுத்துக்கோ'ன்னு சொல்றார்.'

கி. கணேசன், நமசிவாயபுரம்.



பல்லைக் கடிச்சு உட்கார்ந்தா வலி தெரியாதுன்னு சொன்னேன். ஆனா, ஆ...'ன்னு கத்துறீயே?

நாக்கை கடிச்சுக்கிட்டேன், டாக்டர்!'



என் ராசிப்படி நான் யாருக்காவது கடன் கொடுத்தால் அது திரும்ப வராது...'

அப்படின்னா எனக்கும் கடன் கொடு!'



சாப்பிட ஆரம்பிக்கும் போது ஏன் ஒன் டூ த்ரீ சொல்றீங்க..?'

சீக்கிரம் சாப்பிட்டு முடித்துக் கிளம்புங்க... அடுத்து நான் சாப்பிடணும்!'



வெயிட்டர்! சூடா என்ன இருக்கு?'

நான் ஹோட்டல் வெயிட்டர் இல்லே... சாப்பிட வெயிட் பண்ற கெஸ்ட்!'



வீட்டுல யார்கிட்டே இருந்தும் ஏன் போனே வரல?'

சண்டை இன்னும் முடிந்திருக்காது!'



ஹலோ... வீட்டுல இருக்கீங்களா?'

நேரில் வர்றேன்...'

வாங்க... வந்தால் நான் வீட்டுல இல்லன்னு சொல்வாங்க!'



பழைய வடையை ஏன் காக்காய்க்கு வச்சே?'

ஏன்... என்ன ஆச்சு?'

கொத்திட்டுப் போய்க் குப்பைத் தொட்டியில் போட்டுட்டு பறக்குது!'



மெனு கார்டை படிக்காதீர்கள் சார்... அதில் இருப்பது பழசு.'

அயிட்டமா?'

விலை!'

பர்வதவர்த்தினி, பம்மல்.



பெரும்பாலான ஷாம்பு ஆன்ட்டிகளுக்காக தயார் பண்றதுதான் போல...'

எப்படிச் சொல்றே?'

எல்லா ஷாம்புலேயும் ஆன்ட்டி ஹேர் ஃபால் ஷாம்பூ' ன்னு போட்டிருக்காங்களே!'



பொண்ணுக்கு பையனைப் பிடிக்கலைப் போலிருக்கு...'

எப்படிச் சொல்றீங்க?'

காபியை கையில கொடுக்காமல், தொப்புனு கீழே வச்சிட்டு, திரும்பிப் பார்க்காமல் போகுதே!'



இந்த மாதிரி திருட்டுத் தொழிலை செய்யறதுக்கு, நீ பிச்சையே எடுக்கலாம்...'

பிச்சை எடுக்கப் போனா, நீ உழைச்சு சாப்பிட்டா என்ன?'ன்னு கேக்கறாங்களே, சாமி!'



உங்க கேரியர் உங்களுக்குப் பிடிச்சிருக்கா, சார்?'

ரொம்ப பெரிசாவும் இல்லாமல், சின்னதாவும் இல்லாமல், நார்மல் சைஸ்ல ஐந்து அடுக்குல உள்ள கேரியர் எப்படி சார் பிடிக்காமல் போகும்?'

வி.ரேவதி, தஞ்சை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.