போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

அறிவு ஏ.ஐ.

நாட்டில் சுமார் இருபது கோடி பேர் அறிதிறன் கைப்பேசியை வாங்க வசதி இல்லாமல் இருக்கின்றனர்.

News image
Updated On :5 ஏப்ரல் 2026, 4:07 am IST

நாட்டில் சுமார் இருபது கோடி பேர் அறிதிறன் கைப்பேசியை வாங்க வசதி இல்லாமல் இருக்கின்றனர். எண்ணற்றோர் அவர்கள் வசிக்கும் இடத்திலோ, பணிபுரியும் இடத்திலோ இணைய வசதி கிடைக்காத நிலையில் இருக்கின்றனர். இதனால் உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி மக்களின் வாழ்க்கையை எளிதாக்கி வரும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ. ) தொழில்நுட்பத்தின் பலனையும், இணையப் பயன்பாட்டையும் பெற முடியாத நிலை உள்ளது. இதற்கு தீர்வாக சென்னையைச் சேர்ந்த கணினி அறிஞர் அப்பாஸ் 'அறிவு ஏ.ஐ.' என்ற செயலியை வடிவமைத்துள்ளார்.

அவரிடம் பேசியபோது:

'இணைய இணைப்பு இல்லாத அறிதிறன் கைப்பேசி அல்லது சாதாரண கைப்பேசியைப் பயன்படுத்தினாலும் ' அறிவு ஏ.ஐ.' மூலம் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் இணைய வசதி இல்லாமலேயே இணையத்தைப் பயன்படுத்தலாம். மொழிபெயர்த்துக் கொள்ளலாம். தகவல்களை அனுப்பவும் செய்யலாம். 'அறிவு ஏ.ஐ.' யுடன் பேசி எந்தத் தகவல்களையும் தேடலாம், பெறலாம்.

கைப்பேசியில் நிறுவாமல், இணைய வசதி இல்லாமல் 'அறிவு ஏ.ஐ.' பயன்படுத்தும் வகையில், செயலியை உருவாக்கம் செய்துள்ளேன். அனைவருக்கும் அனைத்து நேரத்திலும் அனைத்து இடத்திலும் இணைய இணைப்பே இல்லாமல் வழங்க எளிதான நெட்வொர்க் சேனல் தேவை. அது எல்லோருக்கும் எளிதில் கிடைக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.

பயணங்களில் கைப்பேசியில் அழைக்க முடியாத தருணங்களிலும்கூட 'எஸ்.எம்.எஸ்.' இருக்கிறது.

உலகில் எந்த மூலையில் இருந்தாலும், சாதாரண கைப்பேசி வைத்திருப்பவர் இணையவசதி இல்லாமல் கைப்பேசியை வைத்திருக்கும் இன்னொருவருக்கு தகவல் பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். யார் வேண்டுமானாலும் தற்போது +91 6384285701 என்ற எண்ணுக்கு 'எஸ்.எம்.எஸ்.' அனுப்பி நேரடியாக சோதனை செய்து பார்க்கலாம். ஜ்ஜ்ஜ்.ய்ர்ண்ய்ற்ங்ழ்ய்ங்ற்.ண்ய் என்ற இணையத்திலும் கூடுதல் தகவல் பெறலாம்' என்கிறார் அப்பாஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.