பானை மேல் ஏறி நின்று பத்து நிமிடங்கள் இருபத்து இரண்டு விநாடியில் 140 அம்புகளை எய்து ஆறு வயது சிறுவன் நிதேஷ் சாதனை படைத்துள்ளார்.
குடும்பச் சூழல் காரணமாக, சென்னை முகப்பேரில் உள்ள தனது தாத்தா- பாட்டியுடன் வசித்து வருகிறார் நிதேஷ் . இவர் முகப்பேர் மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் முத லாம் வகுப்பு படித்து வருகிறார்.
வில்வித்தையில் நிதேஷுக்கு ஆர்வம் இருந்ததால், ஐந்து வயது முதல் முகப்பேர் அர்ஜூனா வில்வித்தை அகாதெமியில் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர், உலக இளம் சாதனையாளர்கள் சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்கும் நோக்கில் விரைவாக அம்பு எய்தும் சாதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து, சிறுவன் நிதேஷ் 14 நிமிடங்களில் 140அம்புகளை எய்து சாதனை நிகழ்த்தும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. அவர் பயிற்சி எடுக்கும் அர்ஜூனா வில்வித்தை அகாதெமி சார்பில் முகப்பேரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பானை மேல் ஏறி நின்று இந்தச் சாதனையை மேற்கொண்டார். அப்போது, நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைவிட குறைவாகவே பத்து நிமிடங்கள் இருபத்து இரண்டு விநாடியில் இலக்கை நோக்கி 140அம்புகள் எய்தி சிறுவன் நிதேஷ் சாதனை படைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஐடி பல்கலை. நுழைவுத் தேர்வுக்குத் தயாராவது எப்படி?

ஆசிய மல்யுத்தம்: நிதேஷுக்கு வெள்ளி

கோவையில் பரபரப்பு : இருசக்கர வாகனத்தின் மீது ஏறி படம் எடுத்தாடிய நல்ல பாம்பு!

வாக்குவாதத்தில் இளைஞா் குத்திக் கொலை: 3 போ் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


