மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

ரேபோ யானை!

கோயில் உற்சவங்களில் பங்கேற்க "ரோபோ யானைகள்' உருவாகியுள்ளன.

News image

ரோபோ யானை

Updated On :7 செப்டம்பர் 2024, 6:30 pm

கோயில் உற்சவங்களில் பங்கேற்க "ரோபோ யானைகள்' உருவாகியுள்ளன.

இந்த யானைகள் மோட்டார் மின்சாரத்தால் இயங்குகின்றன. பலகையில் பொருத்தப்பட்டிருக்கும் ரோபோ யானை பலகையுடன் முன்னும் பின்னும் நகரும். ஒன்றை உருவாக்க, சுமார் 6 லட்சம் ரூபாய் செலவாகிறது. எடை சுமார் 800 கிலோ.

அசல் யானையின் உயரம், பருமன் நிறம், வடிவத்தை இவை கொண்டிருக்கும். அசல் யானை போல் தும்பிக்கையை ஆட்டும். பழம் கொடுத்தால் வாங்கும். பக்தர்களை ஆசீர்வதிக்கும். முறம் போன்ற காதுகளை வீசும். கண்களை மூடித் திறக்கும். தலையை ஆட்டும். இதேபோல், ரோபோ யானை மீது நான்கு பேர் அமரலாம். அதில், ஒருவர் கடவுள் சிலையைப் பிடித்துக் கொண்டு அமருவார். "வாய்ஸ் ஃபார் ஏஸியன் எலிஃபண்ட்ஸ்' என்ற அமைப்பானது ரோபோ யானைக்கு "சங்கர ஹரிஹரன்' என பெயரிட்டுள்ளது.

இந்த யானை உருவாக, நடிகைகள் பார்வதி திருவோத்து, பிரியாமணி உதவி செய்துள்ளனர். இதற்கான முயற்சியின் பின்னணியில் "பீட்டா' அமைப்பும் இருக்கிறது.

கேரள மாநிலத்துக்கு உள்பட்ட பல கோயில்களில் இந்த யானைகள் இடம்பெற்றுள்ளன.

நடிகை அய்ன்டிரிதா ரே- நடிகர் திக்நாத் ஜகத்குரு ஆகியோர் வீரசிம்மாசனா மகா சமஸ்தான மடத்தின் கோயிலுக்கு ரோபோ யானையை அன்பளிப்பு செய்துள்ளனர்.

ரோபோ யானைகளை உருவாக்கும் நிறுவனங்கள் இரண்டு கேரளத்திலும் ஒன்று மஹாராஷ்டிராவிலும் செயல்படுகின்றன.

கர்நாடகாவிலும் ரோபோ யானைகள் கோவில்களில் அறிமுகமாகி வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.